ஆதரவு மானியம்: விண்ணப்பம் செய்வோர் வேலையில் இருக்க வேண்டியதில்லை

கொவிட்-19 ஆதரவு மானியத்துக்கு விண்ணப்பிப் போர் மூன்று மாதங்களுக்கு வேலையின்றி இருக்க வேண்டியதில்லை என்று சமுதாய, குடும்ப மேம்பாட் டு அமைச்சர் டெஸ்மண்ட் லீ  இன்று நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.

“சம்பளமில்லா விடுப்பு, வருமான இழப்பு தகுதி பெற மூன்று அல்லது அதற்கு மேற்பட்ட மாதங்கள் வேலையின்றி இருக்க வேண்டும் எனும் விதி, அதிக தேவையுள்ளவர்களுக்கு உதவி கிடைப்பதை உறுதி செய்வதற்காக வகுக்கப்பட்டது. ஆனால் இப்போது கொவிட்-19 கிருமித்தொற்று நிலவரம் காரணமாக குறைந்தது மூன்று மாதங்கள் பாதிக்கப்பட்டிருப்பதாக அவர்களின் முதலாளிகளிடமிருந்து கடிதம் வழங்கினால் போதும். அவர்கள் ஆதரவு மானியத்துக்குத் தகுதி பெறுவார்கள்,” என்றும் அமைச்சர் விளக்கினார்.

கொவிட்-19 காரணமாக தங்கள் வேலையை இழந்தோர், சம்பளமில்லா விடுப்புக்குச் செல்ல முதலாளிகளால் கட்டளையிடப்பட்டவர்கள், குறிப்பிடத்தக்க அளவுக்கு சம்பள வெட்டு பெற்றவர்கள் ஆகியோர் கொவிட்-19 ஆதரவு மானியத்துக்கு விண்ணப்பிக்காலம் என்றும் திரு லீ கூறினார்.