சிங்கப்பூர் தேசிய பல்கலைக்கழகத்தின் இணை வேந்தராக பேராசிரியர் எஸ். ஜயகுமார் நியமனம்

சிங்கப்பூரின் முன்னாள் துணைப் பிரதமர் பேராசிரியர் எஸ். ஜயகுமார் சிங்கப்பூர் தேசிய பல்கலைக்கழகத்தின் (என்யுஎஸ்) இணை வேந்தராக நியமிக்கப்பட்டுள்ளார். 

நாட்டின் அதிபரும் தேசிய பல்கலைக் கழகத்தின் வேந்தருமான திருவாட்டி ஹலிமா யாக்கோப் இந்த நியமனத்தைச் செய்தார்.

ஜூலை 1ஆம் தேதியிலிருந்து அப்பொறுப்பை ஏற்றுக்கொள்ளும் பேராசிரியர் எஸ். ஜயகுமார் மூன்று ஆண்டுகளுக்கு அப்பொறுப்பை வகிப்பார் என்று என்யுஎஸ் இன்று (ஜூன் 18) தெரிவித்தது. 

தற்போது அப்பல்கலைக்கழகத்தின் இணை வேந்தர்களாக உள்ள திரு போஆட் மாத்தார், டாக்டர் சான் செக் கியோங், திருவாட்டி தெரேசா ஃபூ, திரு கௌதம் பானர்ஜி ஆகியோருடன் திரு ஜெயகுமாரும் சேர்ந்துகொள்வார். 

இது குறித்து கருத்துரைத்த என்யுஎஸ் தலைவர் பேராசிரியர் டான் எங் சாய், “பேராசிரியர் எஸ். ஜயகுமாரை எங்கள் இணை வேந்தராகப் பெற்றதற்கு நாங்கள் பெருமிதம் கொள்கிறோம். ஒரு மாணவராக, பல்கலைக்கழகத் தின் சட்டத்துறைத் தலைவராக, முன்னாள் மாணவராக என்யுஎஸ் உடன் அணுக்கமான தொடர்பில் இருந்தவர். பல்கலைக்கழகத்தின் சட்டத்துறை வளர்ச்சிக்கும் நாட்டின் சட்டத்துறை மேம்பாட்டுக்கும் அவர் பெரும் பங்காற்றியுள்ளார்,” என்றார்.

 

அனைத்து செய்திகளையும் முழுமையாக வாசிக்க தமிழ் முரசு சந்தாதாரராகுங்கள்! https://tmsub.sg/online

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!