பிரதமர் லீ: 'சமூக ஆதரவை வலுவாக்க வேண்டும்'

கொவிட்-19 நெருக்கடிக்குப் பின் மேலும் நிச்சயமற்ற சூழல் மற்றும் இடர்ப்பாடுகளை சிங்கப்பூர் சந்திக்கக்கூடும். மூப்படையும் சமூகத்தைச் சமாளிக்கும் நிலையும் நீடித்த காலத்திற்கு இருக்கும். சுகாதார பராமரிப்புச் செலவுகளும் அதிகரித்த வண்ணம் உள்ளன. இச்சூழலில் சிங்கப்பூர் அதன் சமூக ஆதரவை வலுப்படுத்திக்கொள்ள வேண்டும் என்றார் பிரதமர்.

“முன்பைவிட பெரும் சவால்கள் ஏற்படவுள்ளன. இதைவிட நாம் அதிகம் செய்ய வேண்டும், செய்யவும் தயார். ஆனால் இன்னும் கூடுதலாக என்ன செய்வது என்பதுதான் கேள்வி, அதைச் செய்ய எது சிறந்த வழி?” என்று நேற்று வினவினார் திரு லீ.

சித்தாந்தத்தை அடிப்படையாகக் கொண்டு தீர்வுகளை சிங்கப்பூர் உருவாக்கவில்லை என்று கூறிய பிரதமர், நடைமுறைக்கேற்ற, அனுபவரீதியாக கிடைக்கப்பெற்ற அணுகுமுறையையே சிங்கப்பூர் கொண்டிருப்பதாக சொன்னார்.

அரசாங்கம் அதன் வளங்களைச் சிறந்த முறையில் பயன்படுத்தி, சமூகத்தின் வெவ்வேறு குழுக்களின் தேவைகளைச் சரியாக அறிந்து பூர்த்தி செய்து வருவதாக அவர் பகிர்ந்துகொண்டார்.

“அனைவருக்கும் ஒரே விதமாக உதவினால் கூடுதல் உதவி தேவைப்படுவோருக்குப் போதுமான உதவியை நாங்கள் வழங்கவில்லை என்றாகிவிடும்,” என்றார் திரு லீ. கொவிட்-19க்கு பிந்திய நிலையை மதிப்பிட மக்கள் சிறிது காலம் எடுத்துக்கொள்ள வேண்டும் என்றும் எத்தகைய பிரச்சினைகள் உருவாகுகின்றன என்று அப்போது தெரியவரும் என்றும் திரு லீ அறிவுறுத்தினார்.

“நம்முடைய அமைப்பு முறைகளை மேம்படுத்தும்போது நாம் திறந்த மனதுடன் செயல்படவேண்டும். நம் சூழலில் பயன்படக்கூடிய தீர்வுகளை நாம் கருத்தில் கொள்ள வேண்டும்,” என்றார்.

புதுத் திட்டங்களை உருவாக்கும்போது அவற்றில் நிதி நிலைத்தன்மை இருக்க வேண்டும் என்ற திரு லீ, பல தலைமுறைகளாக அளவாக, விவேகமாக செலவிட்ட சிங்கப்பூர், குறிப்பிடத்தக்க அளவு இருப்புநிதியைக் கொண்டுள்ளது என்றார்.

“ஆனால் இருப்பில் எவ்வளவு உள்ளது என்று எதிர்த்தரப்பினர் கேட்கின்றனர். பின் வரவுசெலவு, வரித் திட்டங்களுக்கு ஆதரவு அளிப்பதா என்று முடிவெடுக்கிறேன் என்கிறார்கள். அடிப்படையில் அவர்கள் கேட்பது என்னவென்றால், வங்கியில் உள்ளதில் எவ்வளவு நான் தொடக்கூடியது?” என்றார் திரு லீ.

எதிர்த்தரப்பிடம் இத்தகைய சிந்தனை இருப்பது ‘அடிப்படையில் தவறான அணுகுமுறை’ என்று குறிப்பிட்ட பிரதமர், சிங்கப்பூரை உருவாக்கிய முன்னோடிகள் எதிர்காலத்தை நினைத்தே செயல்பட்டனர் என்றும் இதுபோன்ற சிந்தனையில் இல்லை என்றும் கூறினார். நிதியிருப்பைப் பெறத் தகுதிபெறும் பரம்பரையாக நம்மைக் கருதாமல் நம் முன்னோரைப் பின்பற்ற வேண்டும் என்றார் திரு லீ. ‘விரலுக்கேற்ற வீக்கம்’ என்ற சிந்தனையுடன் நிதியிருப்புக்கு அவ்வப்போது முடிந்தவரை கொடுத்தருளி சிங்கப்பூர் அதன் பாதுகாப்பை வலுப்படுத்திக்கொள்ளலாம் என்றார் பிரதமர்.

“அதுதான் நீண்டகாலத்திற்கு சிங்கப்பூரைத் தயார்ப்படுத்தும் வழி. நம் பிள்ளைகளுக்கும் பேரப்பிள்ளைகளுக்குமான எதிர்காலத்தை அதுவே உறுதிப்படுத்தும்,” என்றார் திரு லீ.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!