உலகத் தரவரிசை: என்யுஎஸ் தனது இடத்தை தக்கவைத்தது, என்டியு தரத்தில் முன்னேற்றம்

சிங்­கப்­பூர் தேசிய பல்­க­லைக்­க­ழ­கம் (என்­யு­எஸ்) உலக, ஆசிய அள­வி­லான அதன் தரத்தை தக்­க­வைத்­துக் கொண்டு உள்­ளது. உல­கின் தலை­சி­றந்த பல்­க­லைக்­க­ழ­கங்­கள் பட்­டி­ய­லில் 25வது இடத்­தை­யும் ஆசிய அள­வில் மூன்­றா­வது இடத்­தை­யும் அது தொடர்ந்து வகிக்­கிறது. உல­கின் பல்­க­லைக்­க­ழ­கங்­களை தர­வ­ரி­சைப்­ப­டுத்­தும் டைம்ஸ் உயர் கல்வி அமைப்பு நேற்று அதன் அண்­மைய பட்­டி­யலை வெளி­யிட்­டது.

நன்­யாங் தொழில்­நுட்­பப் பல்­க­லைக்­க­ழ­கம் (என்டியு) இந்த ஆண்டு ஓர் இடம் முன்­னேறி 47 வது இடத்­தைப் பிடித்­துள்­ளது.

பிரிட்­ட­னின் ஆக்ஸ்­ஃபர்ட் பல்­க­லைக்­க­ழ­கம் தொடர்ந்து ஐந்­தா­வது ஆண்­டாக முதல் இடத்­தில் உள்­ளது. அதற்கு அடுத்த நான்கு நிலை­களில் அமெ­ரிக்­கா­வின் ஸ்டான்­ஃபர்ட், ஹார்­வர்ட், கலி­ஃபோர்­னியா தொழில்­நுட்­பக் கல்­விக்­க­ழ­கம், மெசசூசட்ஸ் தொழில்­நுட்­பக் கல்­விக்­க­ழ­கம் ஆகி­யன உள்­ளன.

20வது இடத்தை ஆசி­யா­வின் தலை­சி­றந்த பல்­க­லைக்­க­ழ­க­மான சீனா­வின் சிங்­குவா பல்­க­லைக்­க­ழ­கம் பெற்று உள்­ளது. ஆசிய வட்­டார பல்­க­லைக்­க­ழ­கம் ஒன்று முதல் 20 இடத்­துக்­குள் வந்­தி­ருப்­பது இதுவே முதல்­முறை.

மொத்­தம் 13 செயல்­முறை அம்­சங்­க­ளின் அடிப்­ப­டை­யில் பல்­க­லைக்­க­ழ­கங்­க­ளின் தரம் பிரிக்­கப்­ப­டு­கிறது. அவை ஐந்து குழுக்­களில் இடம்­பெற்று உள்­ளன. கற்­பித்­தல் (கற்­றல் சூழல்), ஆராய்ச்சி (அளவு, வரு­வாய் மற்­றும் நன்­ம­திப்பு), மேற்­கோள்­கள் (ஆய்­வாற்­றல்), அனைத்­து­ல­கத் தோற்­றம் (பணி­யா­ளர், மாண­வர்­கள் மற்­றும் ஆராய்ச்சி), துறை வரு­வாய் (அறி­வாற்­றல் மாற்­றம்) போன்று குழுக்­கள் அவை.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!