ஜேமஸ் லிம்மை கேள்வி கேட்ட மசெக உறுப்பினர்கள்

பாட்டாளிக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் இணை பேராசிரியர் ஜேமஸ் லிம் நேற்று நாடாளுமன்றத்தில் பேசியபோது, குறைந்தபட்ட சம்பள முறை, கருணைமிக்க கொள்கை வகுத்தல் மோன்ற பல்வேறு யோசனைகளை முன்வைத்தார். அதற்கு மூத்த அமைச்சர் தர்மன் சண்முகரத்னம் உட்பட மக்கள் செயல் கட்சியின் (மசெக) நாடாளுமன்ற உறுப்பினர்கள் சரமாரியாக அவரிடம் கேள்விக்கணைகளைத் தொடுத்தனர்.

அவர்களில் ஒருவரான மனிதவள துணை அமைச்சர் கான் சியாவ் ஹுவாங், சிக்கலான கொள்கைகளை வகுப்பதில் அரசாங்கத்துக்கு சிக்கல் ஏற்பட்டால் கருணையை மனதிற்கொண்டே அவை வகுக்கப்படுகின்றன. காரணம், எந்தவொரு கொள்கையும் அனைவருக்கும் ஏற்றதாக இருக்காது என்பதை அரசு புரிந்துகொண்டுள்ளது என்றார்.

பொருளியல் நெருக்கடியின்போது அறிவிக்கப்படும் சம்பள முறையால் எவ்விதப் பயனும் கிடைக்காது என்று பேராசிரியர் லிம் கூறியதை மறுத்து மூத்த துணை அமைச்சர் ஸாக்கி முகம்மது, திரு விக்ரம் நாயர், திருவாட்டி டின் பெய் லிங், மூத்த துணை அமைச்சர் ஜனில் புதுச்சேரி, திரு சீத்தோ யிப்பின் ஆகியோர் பேசினர்.

படிப்படியான சம்பள முறைக்கும் அனைவருக்குமான குறைந்தபட்ச சம்பள முறைக்கும் உள்ள வித்தியாசம் என்னவென்றால், படிப்படியான சம்பள முறை ஒவ்வொரு துறைக்கும் வேறுபட்டிருக்கும் என்றார்.

சிங்கப்பூருக்கு எந்த வகையான குறைந்தபட்ட சம்பள முறை நன்மை பயக்கும் என்றும் குறைந்தபட்ச சம்பள முறையுடன் சிங்கப்பூரைவிட வேலையின்மை குறைவாக உள்ள நாடு பற்றி கூறமுடியுமா என்று திரு விக்ரம் நாயர், திரு லிம்மைக் கேட்டார்.அதுபற்றி தமக்குத் தெரியாது என்று பதிலளித்த திரு லிம்முக்கு ஆதரவாக எழுந்த பாட்டாளிக் கட்சியின் மற்றோர் உறுப்பினர் திரு லியோன் பெரேரா, சிங்கப்பூரைவிட வேலையின்மை குறைவாக உள்ள நாட்டை குறைந்தபட்ச சம்பள முறையுடன் தொடர்புபடுத்த முடியாது என்றார்.

பின்னர் எழுந்த திருவாட்டி டின், குறைந்தபட்ச சம்பள முறையை அறிமுகப்பபடுத்தி, பின்னர் நெருக்கடிக் காலம் முடிந்தவுடன் அதை மீட்டுக்கொள்ளலாம் என்று திரு லிம் கூறுகிறாரா என்று கேட்டார். அதற்குப் பதிலளித்த திரு லிம், குறைந்தபட்ச சம்பள முறை ஒரு சமூக பாதுகாப்பு வலை போன்றது என்றும் அதை நெருக்கடி காலத்தில் மீட்டுக்கொள்வது தவறானது என்றும் சொன்னார்.

இந்த விவாதத்தில் சேர்ந்துகொண்ட திரு சீத்தோ, நெருக்கடி காலத்திலும் சிங்கப்பூர் எங்கிருந்தும் கடன் பெற்றதில்லை என்பதை சுட்டினார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!