இணையம்வழி நிகழும் இந்திய மரபுடைமை நிலைய கலாசார விழா

இந்­திய மர­பு­டைமை நிலை­யம் 6ஆம் முறை­யாக நடத்­தும் ‘கல்­சர்­ஃபெஸ்ட்’ (CultureFest) என்னும் கலா­சார விழா முதல்முறை­யாக மெய்­நி­கர் முறை­யில் நிக­ழ­வி­ருக்­கிறது.

செப்டம்பர் 5ஆம் தேதி (நேற்று) தொடங்கி வரும் 20ஆம் தேதி வரை நீடிக்­கும் இவ்­வி­ழா­வில் 40க்கும் மேற்­பட்ட நிகழ்ச்­சி­கள் நடை­பெ­றும்.

ராமா­யண இதிகாசத்தைக் கருப்­பொ­ரு­ளாகக் கொண்டு அமையும் இவ்விழா­வில் கலா­சா­ரப் படைப்­பு­கள், குழு கலந்­து­ரை­யா­டல்­கள், பயிலரங்குகள், கதைசொல்­லும் அங்­கங்­கள், சமை­யல் செயல்­முறை விளக்­கங்­கள் ஆகி­ய­வை ஏற்­பாடு செய்­யப்­பட்­டுள்­ளன.

அது­போக இந்­திய மர­பு­டைமை நிலை­யத்­தில் மதுபானி பாரம்பரிய ஓவியக் கலை­ஞ­ரான திரு­மதி குமுதா குரோ­விடி வரைந்த ஆறு ஓவி­யக் கலைப்படைப்புகள் காட்­சிக்கு வைக்­கப்­பட்­டுள்­ளன.

சிங்­கப்­பூ­ரில் கிட்­டத்­தட்ட 10 ஆண்­டு­க­ளாகக் கலை­ப் பணியில் ஈடுபட்டு வரும் குமுதா ‘ஸ்ட்ரோக் ஆர்ட்ஸ் ஸ்டு­டியோ’ என்னும் கலை நிறு­வ­னத்­தை­ 2014ஆம் ஆண்­டு முதல் நடத்தி வருகிறார்.

ராமா­ய­ணத்­தின் ஆறு நூல்களை மைய­மாக வைத்து மதுபானி ஓவியக் கலைமுறை­யில் இந்த ஓவி­யங்­கள் உரு­வாக்­கப்­பட்­டன.

இந்த ஓவி­யங்­களை உரு­வாக்க கிட்­டத்­தட்ட இரண்டு ஆண்­டு­கள் எடுத்­தன என்­றும் ஓர் ஆண்டு ஆராய்ச்­சிக்கு செல­வ­ழிக்­கப்­பட்­டது என்­றும் சொன்­னார் குமுதா, 54.

“ராமர்-சீதை திரு­ம­ணத்­திற்­காக உரு­வாக்­கப்­பட்ட கலைமுறைதான் மதுபானி. அத­னாலே இந்த கலை வகை, கொண்­டாட்­டங்­க­ளுக்கு உகந்­தது. திரு­ம­ணங்­கள், குழந்தை பிறப்பு, அறு­வடை விழாக்­கள் என எவ்விதக் கொண்­டாட்­டத்­திற்­கும் சரி, இந்தக் கலை வகை வண்­ண­மய­மா­னது, துடிப்­பா­னது, நுண்ணி­ ய­மா­னது, அப்­பா­வி­யான குழந்தை தன்­மை­யைப் பிதிபலிக்கக்கூடியது,” என்­றார் குமுதா.

மதுபானி கலை பட்­டறை ஒன்று செப்­டம்­பர் 12ஆம் தேதி இணை­யம்­வழி நடை­பெ­றும். அது­போக நேரில் சென்று மதுபானி கலை­யில் ஒவி­யம் தீட்­ட­வும் அடுத்த இரண்டு வார இறுதி நாட்­க­ளி­லும் பொது­மக்­க­ளுக்கு வாய்ப்பு வழங்­கப்­படும்.

இந்த ஆண்­டின் கலா­சார விழா­வில் 100க்கும் மேற்­பட்ட கலை­ஞர்­களும் நிபு­ணர்­களும் உட்­பட்ட பல நிகழ்ச்­சி­கள் ஏற்­பாடு செய்­யப்­பட்­டுள்­ளன.

தெமா­செக் பல­துறைத் தொழில் கல்­லூ­ரி­யில், தொடர்பு வடி­வ­மைப்புத் துறை மாண­வர்­க­ளு­டன் இணைந்து கல்­சர்­ஃபெஸ்ட் விழா­வின் சின்­னத்­தை­யும் முக்­கிய காட்சி­யை­யும் தயா­ரித்­துள்­ள­னர்.

இவ்­வாண்­டின் சூழ­லைக் கருதி­ யும், பாது­காப்பு விதி­மு­றை­க­ளுக்­கும் இணங்க மின்­னி­லக்க முறை­யில் கலா­சார விழா தயா­ரிக்­கப்­பட்­டுள்­ளது என்­றார் இந்­திய மர­பு­டைமை நிலை­யத்­தின் பொது நிர்­வா­கி­யான திரு­மதி மரியா பவானி தாஸ்.

“சிங்­கப்­பூ­ரில் உள்ள பல­த­ரப்­பட்ட இந்­திய கலை­கள், பண்­பாடு, மரபு, இவற்றை எல்­லாம் வெளிக்­காட்­ட­வும், விழிப்­பு­ணர்வை ஏற்

­ப­டுத்­த­வும் இந்த விழா ஒரு சிறப்­பான தள­மாக இருக்­கும் என்று நம்­பு­கி­றோம்,” என்­றார் மரியா.

மின்­னி­லக்க முறை­யில் விழா நிகழ்ச்­சி­கள் நடப்­ப­தால் எப்­போது வேண்­டு­மா­னா­லும் மக்­கள் அதைப் பார்க்­க­லாம் என்­றும் மற்­ற­வர்­

க­ளோடு பகிர சமூக ஊட­கங்­கள் வழி­வ­குக்­கின்றன என்­றும் கூறிய திருவாட்டி மரியா, மேலும் பல மக்­கள் இந்த விழாவை அணு­கு­வார்­கள் என்ற நம்­பிக்கை கொண்­டுள்­ளார்.

முக்­கிய நிகழ்­வு­களில் ஒன்­றாக நேற்று இந்­திய கலை­ஞர் ராஜா ரவி வர்­மா­வின் ராமா­யண ஓவி­யங்­களை மைய­மாக்கி அப்­ச­ரஸ் ஆர்ட்ஸ் கலைக் குழு இணை­யம்­வழி ‘சீதா’ நட­னப் படைப்பை வெற்றி ­க­ர­மாக மேடை­யேற்­றி­யது.

களரிபயட், சிலம்பம் ஆகிய தற்காப்புக் கலைகள், பரதநாட்டியம், கதக் ஆகிய நடன வகைகள், பாரம்பரிய யோகா, வீணை இசை ஆகியவற்றை உள்ளடக்கிய இளை யர் படைப்பு ஒன்று இன்று

(6 செப்டம்பர்) இடம்பெறும்.

முழு விவரங்களுக்கு https://www.indianheritage.org.sg/ta மற்றும் https://www.facebook.com/indianheritagecentre ஆகிய தளங் களை நாடலாம்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!