சிங்கப்பூரில் புதிதாக 15 பேருக்கு தொற்று; ஐவர் வெளிநாடுகளிலிருந்து திரும்பியவர்கள்

சிங்கப்பூரில் இன்று (செப்டம்பர் 24) நண்பகல் நிலவரப்படி புதிதாக 15 பேருக்கு கிருமித்தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இங்கு கிருமித்தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 57,654 ஆகியுள்ளது.

இன்று அறிவிக்கப்பட்ட கிருமித்தொற்று சம்பவங்களில், உள்ளூர் சமூகத்தில் யாருக்கும் கிருமித்தொற்று இல்லை என்று சுகாதார அமைச்சு தெரிவித்தது.

இன்று கிருமித்தொற்று உறுதி செய்யப்பட்டவர்களில் ஐவர் வெளிநாடுகளிலிருந்து திரும்பிய பின், இங்கு தனிமைப்படுத்தப்பட்டவர்கள்.

நேற்று 12 புதிய கிருமித்தொற்று சம்பவங்கள் உறுதிசெய்யப்பட்டன. சமூகத்தில் இருக்கும் ஒருவரும் இதில் அடங்குவார்.

அவர் 31 வயது பங்ளாதேஷ் ஆடவர் என்றும் வேலை அனுமதிச் சீட்டு உடையவர் என்றும் கூறப்பட்டது.

கிருமித்தொற்றுக்கான அறிகுறிகள் இல்லாதபோதும் முன்னர் உறுதிசெய்யப்பட்ட ஒரு கொவிட்-19 நோயாளியுடன் தொடர்பில் இருந்த காரணத்தால் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டபோது கிருமியால் அவர் பாதிக்கப்பட்டது தெரிய வந்தது.

அத்துடன் நேற்று பதிவான தொற்று சம்பவங்களில் வெளிநாட்டிலிருந்து வந்த நால்வரும் அடங்குவர். இவர்களில் மூவர் இந்தியாவிலிருந்து திரும்பிய நிரந்தரவாசிகள். எஞ்சியவர் ஈரானிலிருந்து திரும்பிய வேலை அனுமதிச் சீட்டு உடையவர்.

இந்நிலையில் புதிதாக உருவான கிருமித்தொற்று குழுமங்களோ கொவிட்-19 நோயாளிகள் புதிதாகச் சென்ற இடங்களோ குறித்து புதன்கிழமையன்று எதுவும் அறிவிக்கப்படவில்லை.

மேலும் அன்று 29 பேர் கிருமித்தொற்றிலிருந்து மீண்டு வீடு திரும்பினர். இத்துடன் 57,276 பேர் இவ்வாறு கொவிட்-19 பாதிப்பிலிருந்து முழுமையாகக் குணமடைந்துவிட்டதாக தெரிவிக்கப்பட்டது.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!