சிஓஇ கட்டணங்கள் ஏற்ற, இறக்கமாக முடிவடைந்தன

வாகன உரி­மைச் சான்­றி­தழ் (சிஓஇ) கட்­ட­ணங்­கள் நேற்று நடை­பெற்ற ஏலக்­குத்­த­கை­யில் ஏற்ற, இறக்­க­மாக முடி­வ­டைந்­தன. சிறிய கார்­க­ளுக்­கான சிஓஇ கட்­ட­ணம் $$36,534ஆக இருந்­தது. இரு வாரங்­க­ளுக்கு முன்பு நடை­பெற்ற ஏலக்­குத்­த­கை­யில் அது $38,504ஆக இருந்­தது.

பெரிய கார்­க­ளுக்­கான சிஓஇ கட்­ட­ணம் நேற்று $40,690ஆக முடி­வ­டைந்­தது. இரு வாரங்­களுக்கு முன்பு அது $40,989ஆக இருந்­தது. பொதுப் பிரி­வுக்­கான சிஓஇ கட்­ட­ணம் $40,301ஆக முடி­வ­டைந்­தது. முன்­ன­தாக அது $41,001ஆக இருந்­தது.

வர்த்­தக வாக­னங்­க­ளுக்­கான சிஓஇ கட்­ட­ணம் நேற்று $33,089ஆக முடி­வ­டைந்­தது. 2018ஆம் ஆண்டு மே மாதத்­திற்­குப் பிறகு இதுவே ஆக அதிக கட்­ட­ண­மா­கும்.

இதற்கு முன்­ன­தாக நடந்த ஏலக்­குத்­த­கை­யில் அது $28,589 ஆக இருந்­தது. வீடு­களில் பொருட்­களை விநி­யோ­கம் செய்­யும் சேவைக்­கான தேவை கூடி­யுள்­ளதே வர்த்­தக வாக­னங்­க­ளுக்­கான சிஓஇ கட்­ட­ணம் அதி­க­ரிக்­கக் கார­ணம் என்று வாகன விற்­ப­னை­யா­ளர்­கள் கூறி­னர்.

மோட்­டார்­சைக்­கிள்­க­ளுக்­கான சிஓஇ கட்­ட­ணம் நேற்று $7,451ஆக முடி­வ­டைந்­தது. முன்­ன­தாக அது $7,331ஆக இருந்­தது.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!