சிங்கப்பூர்-ஜோகூர் எல்லையைத் திறக்க கோரிக்கை

சிங்கப்பூருடனான தனது எல்லையை முழுமையாகத் திறக்க ஜோகூரின் மாநில அரசு, மலேசிய மத்திய அரசிடம் விண்ணப்பிக்க உள்ளது. தற்போது நிலவும் கொவிட்-19 கிருமிப்பரவல் காரணமாக அது கடந்த ஏழு மாதங்கள் மூடப்பட்டிருப்பதாக அம்மாநிலத்தின் முதல் அமைச்சர் அஸ்னி முகம்மது தெரிவித்திருக்கிறார்.

சிங்கப்பூருடனான எல்லை மூடப்பட்டதால் ஜோகூரில் பல்வேறு வர்த்தகங்களும் துறைகளும் பாதிக்கப்பட்டிருப்பதாக திரு அஸ்னி தெரிவித்தார். இந்நிலை தொடர்ந்து நீடித்தால் வெளிநாட்டு நிறுவனங்கள், ஜோகூரில் தங்களது செயல்பாடுகளை நிறுத்தப்போவதாக அவர் தெரிவித்தார்.

மலேசியாவின் சுங்கத்துறை வருமானத்தில் பாதி ஜோகூர் பாலம், இரண்டாவது இணைப்பு ஆகியவற்றின்வழி பெறப்படுவதாகக் கூறிய திரு அஸ்னி, எல்லை அடைப்பால் வேலைக்காக சிங்கப்பூருக்குச் செல்லும் ஆயிரக்கணக்கான மலேசியர்கள் பாதிக்கப்படுவதையும் அவர் சுட்டினார்.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!