ஆளில்லா வானூர்தியைப் பறக்கவிட உரிமம் கட்டாயம்

ஆளில்லா வானூர்­தியை (ட்ரோன்) இயக்­கும் புதிய நடை­மு­றை­கள் அடுத்த ஆண்­டில் அறி­மு­கம் காண்­கின்­றன. ஒன்­றரை கிலோ கிரா­முக்கு மேல் எடை­கொண்ட அத்­தகைய வானூர்­தி­யைப் பறக்­க­விடு­வ­தற்­கான உரி­மம் பெற பயிற்சி எடுக்க வேண்­டும் என்­ப­தும் தேர்­வில் தேர்ச்சி பெற வேண்­டும் என்­ப­தும் அப்­பு­திய நடை­மு­றை­கள். 2021 பிப்­ர­வரி மாதத்­தில் நடப்­புக்கு வந்த பின்­னர் நடை­மு­றை­க­ளைப் பின்­பற்­றா­தோர் கடு­மை­யான தண்­ட­னைக்கு ஆளா­வர்.

சிங்­கப்­பூர் சிவில் விமா­னப் போக்­கு­வ­ரத்து ஆணை­யம் நேற்று இதனை அறி­வித்­தது. வானூர்தி உரி­மம் பெற இரு வெவ்­வேறு சான்­றி­தழ்­கள் அறி­மு­கம் காணும். ஆளில்லா விமான அடிப்­ப­டைப் பயிற்சி சான்­றி­தழ், ஆளில்லா வானூர்­திக்­கான விமானி உரி­மம் ஆகி­யன அவை.

வானூர்­தி­யைப் பாது­காப்­பு­டன் பறக்­க­வி­டும் நோக்­கத்­தி­லேயே பயிற்­சி­யும் தேர்­வும் கொண்டு வரப்­படு­கின்­றன. பொழு­து­போக்கு அல்­லது கல்வி நோக்­கங்­க­ளுக்­காக 1.5 கிலோ முதல் 7 கிலோ வரை எடை­யுள்ள ‘ட்ரோன்’களைப் பறக்­க­விட ஆளில்லா விமான அடிப்­படைப் பயிற்சி சான்­றி­தழ் அவ­சி­யம்.

உரி­மத்­திற்கு விண்­ணப்­பம் செய்­வோர் இணை­யத்­தில் நடத்­தப்­படும் பயிற்சி வகுப்­பில் கலந்­து­கொள்ள வேண்­டும். ஒரு மணி நேரம் முதல் இரண்டு மணி நேரம் வரை நீடிக்­கக்­கூ­டிய வகுப்­பில் பங்­கேற்ற பின்­னர் நடத்­தப்­படும் தேர்­வில் தேர்ச்சி­பெற வேண்­டும்.

ஆணை­யத்­தால் அங்­கீ­க­ரிக்­கப்­பட்ட ஆளில்லா விமா­னப் பயிற்சி அமைப்பு இவற்ைற நடத்­தும். பொழுது­போக்கு அல்­லது கல்­விக்­காக அல்­லா­மல் வேறு நோக்­கங்­களுக்­காக 7 கிலோ கிரா­முக்கு மேல் எடை­யுள்ள ட்ரோ­னைப் பறக்­க­விட விரும்­பு­வோர் கடு­மை­யான விதி­க­ளைக் கொண்ட ஆளில்லா விமா­னத்­திற்­கான விமானி உரி­மத்­திற்கு விண்­ணப்­பிக்க வேண்­டும். அவர்­க­ளுக்கு எழுத்­துத் தேர்வு நடத்­தப்­படும். சிங்­கப்­பூர் விமா­னப் போக்­கு­வ­ரத்து கல்­விக் கழ­கத்­தில் பாடங்­க­ளைப் பெற்று சுய­மா­கப் படிக்க வேண்­டும். நேரடி மதிப்­பீட்­டுத் தேர்­வி­லும் அவர்­கள் தேற வேண்­டும். ஆணை­யத்­தின் தேர்வு அதி­காரி அல்­லது அங்­கீ­க­ரிக்­கப்­பட்ட விமா­னப் பயிற்சி அதி­காரி இதனை நடத்­து­வார்.

இவர்­கள் விமானி உரி­மத்­தைப் பெற்ற பின்­ன­ரும் நான்கு ஆண்டு­களுக்கு ஒரு­முறை திறன் சோத­னைக்­குச் செல்ல வேண்­டும்.

16 வயது உடை­யோ­ரும் அதற்கு மேற்­பட்ட வய­து­டை­யோ­ரும் மட்­டுமே இவற்­றுக்கு விண்­ணப்­பிக்க முடி­யும். 16 வய­துக்­குக் குறைந்­தோர் ஏற்­கெ­னவே உரி­மம் பெற்­ற­வ­ரின் கண்­கா­ணிப்­பின்­கீழ் வானூர்­தி­யைப் பறக்­க­வி­ட­லாம்.

புதிய நடை­மு­றை­கள் அறி­மு­க­மான பின் உரி­ம­மின்றி ட்ரோன்­களைப் பறக்­க­வி­டு­வோ­ருக்கு ஈராண்டு வரை­யி­லான சிறைத் தண்­ட­னை­யும் $50,000 வரை­யி­லான அப­ரா­த­மும் விதிக்­கப்­ப­ட­லாம். மறு­முறை இதே குற்­றத்தை செய்­வோர் ஐந்­தாண்டு வரை­யி­லான சிறை, $10,000 வரை­யி­லான அப­ரா­தம் ஆகி­யவற்றை எதிர்­நோக்­கு­வர்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!