ஜிஎஸ்டி: பதிவு செய்யத் தவறியதாகக் குற்றச்சாட்டு

ஜிஎஸ்டி: பதிவு செய்யத் தவறியதாகக் குற்றச்சாட்டு

1 mins read
f9bb5636-b735-4624-9922-cb8359fedac3
-

இணை­யம் வழி விற்­ப­னைக்கு பொருள், சேவை வரி செலுத்த பதிவு செய்­யத் தவ­றி­ய­தாக கைபேசி விற்­ப­னை­யா­ளர் ஒரு­வர் மீது குற்­றம் சுமத்­தப்­பட்­டுள்­ளது. இதுபோன்ற குற்­றச்­சாட்டு சுமத்­தப்­பட்­டி­ருப்­பது இதுவே முதல்­முறை.

லசாடா, ஷாப்பீ, கெரோ­சல் ஆகிய இணை­யம் வழி விற்­ப­னைத் தளங்­களில் எட்­வின் பங் சுங் ஜியே எட்­மொ­பைல், மொ்ககி ஆகிய இரண்டு நிறு­வ­னங்­க­ளின்­கீழ் விற்று வந்­தார்.

இந்­நி­லை­யில், தமது வரு­மா­னம் குறித்து தவ­றான விவ­ரங்­க­ளைச் சமர்ப்­பித்­த­தாக 40 வயது சிங்­கப்­பூ­ர­ரான பாங் மீது குற்­றம் சுமத்­தப்­பட்­டுள்­ளது.

வர்த்­தக ஆவ­ணங்­களை வைத்­தி­ருக்­கா­த­தற்­கும் அவர் மீது குற்­றம் சாட்­டப்­பட்­டது.

மொத்­தம் $129,411 மதிப்­பி­லான வரிப் பணத்தை அவர் செலுத்த வேண்­டும் என்­றும் அந்­தப் பணத்தை அவர் செலுத்­த­வில்லை என்று சிங்­கப்­பூர் உள்­நாட்டு வரு­வாய் ஆணை­யம் தெரி­வித்­தது.