எதிர்பார்ப்பை மிஞ்சிய ‘டிரேஸ்டுகெதர்’ கருவிகளின் தேவை

அர­சாங்­கம் எதிர்­பார்த்­த­தை­விட ‘டிரேஸ்­டு­கெ­தர்’ கரு­வி­க­ளின் தேவை அதி­க­மாக உள்­ள­தென சுகா­தார மூத்த துணை அமைச்­சர் டாக்­டர் ஜனில் புதுச்­சேரி கூறி­னார். அக்­டோ­பர் மாதத்­தில் கருவி­க­ளுக்­கான தேவை­யில் திடீர் அதி­க­ரிப்பு ஏற்­பட்­டது அர­சாங்க எதிர்­பார்ப்பை மிஞ்­சி­ய­தாக தொடர்பு, தக­வல் மூத்த துணை அமைச்­ச­ரா­க­வும் உள்ள அவர் தெரி­வித்­தார்.

அதி­க­மான சிங்­கப்­பூ­ரர்­கள் ‘டிரேஸ்­டு­கெ­தர்’ திட்­டத்­தில் இணைய வேண்­டும் என்­றும் இதற்­கான வலி­யு­றுத்து தேவைப்­படும் என்­றும் அர­சாங்­கம் எதிர்­பார்த்­த­தாக அவர் நேற்று நாடா­ளு­மன்றத்­தில் கூறி­னார்.

“கரு­வி­க­ளுக்­கான தேவை போதுமா என்ற அக்­க­றை­தான் அப்­போது எங்­க­ளுக்கு இருந்­தது. கரு­வி­க­ளைத் தயா­ரிப்­ப­தில் கவ­ன­மாக இருக்க விரும்­பி­னோம். அதே சம­யம், கரு­வி­க­ளைத் தயாரிக்­கும் பணி­களைத் துரிதமாக்க, செயல்­மு­றையை முன்­ன­தா­கவே தொடங்­கி­விட்­டோம்,” என்­றார் அவர். ஜூரோங் குழுத்­தொ­கு­தி­யைச் சேர்ந்த டாக்­டர் டான் வு மெங், கேட்ட கேள்­விக்­குப் பதி­ல­ளித்த டாக்­டர் ஜனில் இத­னைக் குறிப்­பிட்­டார்.

கரு­வி­களை விநி­யோ­கம் செய்­யும் பணி­கள் செப்­டம்­பர் மாதத்­தில் தொடங்­கி­விட்­டது.

சிங்­கப்­பூர்­வா­சி­கள் 38 சமூக மன்­றங்­க­ளி­லி­ருந்து கரு­வி­யைப் பெற்­றுக்­கொள்­ளும் வசதி இருந்­தது. இருப்­பி­னும் உண­வ­கங்­கள், பேரங்­கா­டி­கள் போன்ற இடங்­களுக்­குள் செல்ல, ‘டிரேஸ்­டு­கெதர்’ கட்­டா­ய­மாக்­கப்­ப­டு­வ­தாக அர­சாங்­கம் அறி­வித்­ததை அடுத்து கரு­வி­க­ளுக்­கான தேவை அதி­கரித்­த­தா­கக் கூறப்­பட்­டது.

ஒரு சில சமூக மன்­றங்­களில் நீண்ட வரி­சை­கள் உரு­வா­னதை அடுத்து ‘டிரேஸ்­டு­கெ­தர்’ கரு­வி­களின் விநி­யோ­கத்தை ‘அறி­வார்ந்த தேச, மின்­னி­லக்க அர­சாங்­கக் குழு­மம்’ நிறுத்தி வைத்­தது. பின்­னர், கட்­டுப்­ப­டுத்­தப்­பட்ட முறை­யில் கரு­வி­கள் மீண்­டும் அக்­டோ­பர் 29 முதல் விநி­யோ­கம் செய்­யப்­பட்­டன.

சிங்­கப்­பூ­ரர்­களில் சிலர், தங்­களின் குடி­யி­ருப்பு வட்­டா­ரம் அல்­லாத வேறு இடத்­திற்­குப் பய­ணம் செய்து கரு­வி­க­ளைப் பெற்­றுக்­கொள்­வர் என்ற நிலை­யை­யும் அர­சாங்­கம் எதிர்­பார்க்­க­வில்லை என்­றார் டாக்­டர் ஜனில்.

அத­னால், சொந்த வட்­டா­ர­வாசி­க­ளுக்­குத் தரு­வ­தற்­கு­ரிய கரு­வி­கள் மட்­டுமே அந்­தந்த சமூக மன்­றங்­க­ளுக்கு வழங்­கப்­பட்­டுள்­ள­தாக அவர் தெரி­வித்­தார்.

மார்­சி­லிங், உட்­கு­ரோவ், இயூ டீ சமூக மன்­றங்­களில் கரு­வி­களின் விநி­யோ­கப் பணி­கள் தொடங்­கி­யுள்­ள­தா­க­வும் டிசம்­பர் வரை மற்ற சமூக மன்­றங்­க­ளி­லும் விநி­யோ­கம் நடை­பெ­றும் என்­றும் அவர் கூறி­னார்.

அனைத்து சமூக மன்­றங்­களி­லும் ‘டிரேஸ்­டு­கெ­தர்’ கரு­வி­க­ளின் விநி­யோ­கப் பணி­கள் முடி­வ­டை­யும் வரை, ‘டிரேஸ்­டு­கெ­தர்’ மூலம் ‘சேஃப்எண்ட்ரி’ பதிவு முறை­யைக் கட்­டா­ய­மாக்­கு­வது நடப்­புக்கு வராது என்­றும் அவர் தெளி­வு­படுத்­தி­னார். தற்­போ­தைக்கு, அடை­யாள அட்­டை­யின் பட்­டைக் குறி­யீடு போன்ற முந்­தைய ‘சேஃப்எண்ட்ரி’ பதிவு முறை­யைப் பயன்­ப­டுத்­த­லாம்.

சேத­ம­டைந்த கரு­வி­கள் அல்­லது மின்­க­லம் தீர்ந்துபோன நிலை­யில் உள்ள கரு­வி­களை மாற்­று­வது குறித்­தும் கேள்வி எழுந்­தது.

கரு­வி­க­ளின் விநி­யோ­கம் முடி­வ­டைந்த பிறகு, அர­சாங்­கம் இதன் தொடர்­பில் தக­வல் அளிக்­கும் என்­றார் டாக்­டர் ஜனில்.

‘டிரேஸ்­டு­கெ­தர்’ செய­லி­யால் திறன்­பே­சி­யின் மின்­க­லன் தீர்ந்துபோவது குறித்­தும் அர­சாங்­கம் ஆராய்ந்து வரு­வ­தாக அவர் குறிப்­பிட்­டார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!