தமிழ் முரசு வாங்கினால் ‘தென்காசி சாரல்’ பிரியாணி இலவசம்

இன்­றைய தினம் தமிழ் முரசு நாளி­தழை ‘தென்­காசி சாரல்’ உண­வ­கத்­தில் வாங்­கு­வோ­ருக்கு இல­வ­ச­மாக கோழி பிரி­யாணி வழங்­கப்­படு­கிறது. முத­லில் வரும் 250 பேருக்கு மட்­டுமே இந்­தச் சலுகை பொருந்தும்.

எண் 20 அப்­பர் வெல்டு சாலை, சிங்­கப்­பூர் 207377 எனும் முக­வ­ரி­யில் அமைந்­துள்ள தென்­காசி சாரல் உண­வ­கத்­தில் இன்று தமிழ் முரசு நாளி­தழ் விற்­கப்­ப­டு­கிறது. இந்­தச் சிறப்­புச் சலு­கைக்­குத் தகு­தி­பெற தமிழ் முரசு நாளி­தழை அந்த உண­வ­கத்­தில் மட்­டுமே வாங்க வேண்­டும். காலை 9 மணிக்கு விற்­பனை தொடங்­கு­கிறது.

கடந்த ஒன்­றரை ஆண்­டாக தென்­காசி சாரல் உண­வ­கத்தை லிட்­டில் இந்­தியாவில் நடத்­தி­வ­ரும் திரு ‌ஷேக் முகம்­மதும் திரு பாபா ஹுசைனும், தமிழ் மொழிக்­கா­க­வும் தமிழ் மக்­க­ளுக்­கா­க­வும் இந்­தச் சலு­கையை வழங்­கு­வ­தில் பெரு­மிதம் கொள்­வ­தா­கக் கூறி­னர்.

“தமிழ் முனி­வர் அகத்­தி­யர் வாழ்ந்த பொதிகை மலை­யின் அடி­வா­ரத்­தில் உள்ள தென்­காசி என்ற ஊரைப் பூர்­வீ­க­மா­கக் கொண்ட எனக்கும் சங்கம் வைத்து தமிழ் வளர்க்கும் மதுரையைச் சேர்ந்த பாபா ஹுசைனுக்கும் தமிழ் மீதான ஆர்­வம் அதி­கம் உண்டு. அத­னால் சிங்­கப்­பூ­ரில் தமிழ் நாளி­த­ழான தமிழ் முரசை மக்­க­ளுக்கு வழங்­கு­வ­தி­லும் அதைக் கொண்டு உண­வுப் பொட்­ட­லத்தை வழங்­கு­வ­தி­லும் பெருமை கொள்­கி­றோம்,” என்­றார் திரு ஷேக்.

விரை­வில் அந்­தக் கடை­யில் அனைத்து கோழி சார்ந்த சாப்­பாடும் நாட்­டுக் கோழி­யைக் கொண்டே வழங்­கப்­படும் என்று தெரி­வித்த அவர், ஆரோக்­கி­ய­மா­க­வும் சுவை­யா­க­வும் மக்­க­ளுக்கு உணவு வழங்க வேண்­டும் என்ற எண்­ணத்­தில் உண­வுத் தொழி­லில் இறங்­கி­ய­தா­கக் குறிப்­பிட்­டார்.

தற்­போது நாட்­டுக் கோழி சூப், நாட்­டுக் கோழி பிரி­யாணி என பல வகை­யான உண­வு­களை நாட்டுக் கோழி­யைக் கொண்டே தயார் செய்­கி­றார்­கள்.

தின­மும் காலை 6 மணிக்­குத் திறக்­கும் இந்த உண­வ­கம், சுமார் இரண்டு மணி நேரத்­திற்கு ஊழி­யர்­க­ளுக்­காக மலிவு விலை­யில் உணவு விற்று வரு­கிறது. காலை வேளை சிற்­றுண்டி இந்­தக் கடை­யில் $1க்கு விற்­கப்­ப­டு­கிறது.

‘லேம்ப் ‌ஷேங்க்’ பிரி­யாணி, நெய் சோறு, தேங்­காய் சோறு என பல­தரப்­பட்ட உணவு வகை­க­ளைச் சமைத்து வழங்­கும் இந்த உண­வ­கம், உயர்­தர பாஸ்­மதி அரி­சி­யையே சமை­ய­லுக்­குப் பயன்­ப­டுத்­து­கிறது.

மேலும், உணவு தாளிப்­புக்கு செக்கு எண்­ணெய்யே பயன்­ப­டுத்­தப்­ப­டு­கிறது.

கரு­வாட்­டுக் குழம்பு, இறைச்சி நெஞ்­செ­லும்பு குருமா, முஹல் கோழிக் குழம்பு, செட்­டி­நாடு வகை­, சட்டி சோறு போன்றவை இந்த உண­வ­கத்­தில் விற்­கப்­ப­டு­கின்றன. கோதுமை பரோட்டா இந்­தக் கடை­யின் சிறப்பு. இங்கு உண­வு வாழை­ இ­லை­யில் பரி­மா­றப்­படு­கிறது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!