சிங்கப்பூரில் இவ்வாண்டு எச்ஐவி சம்பவங்கள் 300க்கும் குறைவாக இருக்கலாம் என முன்னுரைப்பு

இவ்­வாண்டு எச்­ஐவி கிரு­மி­யால் பாதிக்­கப்­படும் சிங்­கப்­பூ­ரர்­கள், நிரந்­த­ர­வா­சி­க­ளின் எண்­ணிக்கை 300க்கும் குறை­வாக இருக்­கும் என முன்­னு­ரைக்­கப்­ப­டு­கிறது. 2003ஆம் ஆண்­டிற்­குப் பிறகு இந்த எண்­ணிக்கை 300க்கும் குறை­வாக இருக்­கும் என முன்­னு­ரைக்­கப்­ப­டு­வது இதுவே முதன்­முறை.

நேற்று முன்­தி­னம் உலக எய்ட்ஸ் தினத்தை முன்­னிட்டு சுகா­தார அமைச்சு இந்­தத் தக­வல்­களை வெளி­யிட்­டது.

இவ்­வாண்டு ஜன­வ­ரி­யில் இருந்து அக்­டோ­பர் வரை 220 பேருக்கு எச்­ஐவி தொற்று உறுதி செய்­யப்­பட்டுள்ளது. கடை­சி­யாக ஆண்டு முழு­வ­தும் இந்த எண்­ணிக்கை 300க்கும் குறை­வாக இருந்­தது 2003ஆம் ஆண்­டில்­தான். அந்த ஆண்டு 242 பேருக்கு எச்­ஐவி உறு­தி­யா­னது. 2007க்கும் 2017ஆம் ஆண்­டிற்­கும் இடைப்­பட்ட காலத்­தில் ஒவ்­வோர் ஆண்­டும் 400 முதல் 500 பேருக்கு எச்­ஐவி உறு­திப்­ப­டுத்­தப்­பட்­டது.

இவ்­வாண்டு எச்­ஐவி சம்­ப­வங்­கள் குறைந்­தி­ருப்­ப­தற்கு கொவிட்-19 நோய்ப் பர­வல் சூழலே கார­ணம் என்று மருத்­து­வர்­கள் கூறு­கின்­ற­னர்.

மவுண்ட் எலி­ச­பெத் நொவீனா நிபு­ணத்­துவ நிலை­யத்­தைச் சேர்ந்த டாக்­டர் கோலின் தாமஸ், “கொவிட்-19 அச்­சம் கார­ண­மாக மக்­கள் தங்­க­ளது சமூக பழக்­க­வழக்­கங்­க­ளைக் குறைத்­துக்­கொண்டு வீட்­டி­லேயே இருந்­த­னர். ஒன்­று­கூ­டல்­களும் இர­வு­நேர கேளிக்கை நிகழ்ச்­சி­களும் குறைந்­தன,” என்று கூறி­னார்.

எனி­னும், எச்­ஐவி தொற்­றி­யோ­ரில் சிலர், கொவிட்-19 சூழல் கார­ண­மாக பரி­சோ­த­னைக்­குச் செல்­வ­தைத் தவிர்த்து இருக்­க­லாம் என்­ப­தால் அவர்­க­ளது எண்­ணிக்­கை­யும் இந்­தத் தக­வ­லில் சேர்க்­கப்­ப­டா­மல் இருக்­க­லாம் என்று மவுண்ட் எலி­ச­பெத் நொவீனா மருத்­து­வ­ம­னை­யைச் சேர்ந்த தொற்­று­நோய் நிபு­ணர் டாக்­டர் லியோங் ஹோ நாம் சொன்­னார்.

இவ்­வாண்­டின் முதற்­பா­தி­யில் அறி­விக்­கப்­பட்ட 125 எச்­ஐவி சம்­ப­வங்­களில் 90 விழுக்­காட்­டி­னர் ஆண்­கள். அவர்­களில் 40 விழுக்­காட்­டி­னர் 40க்கும் 59 வய­துக்­கும் இடைப்­பட்­ட­வர்­கள்.

ஒரு­வ­ரி­டம் இருந்து மற்­றொ­ரு­வ­ருக்கு எச்­ஐவி கிருமி தொற்ற பாலி­யல் உறவே முக்­கிய கார­ணம் என்று தெரி­விக்­கப்­ப­டு­கிறது. மேற்­கு­றிப்­பி­டப்­பட்ட 125 பேரில் 96 விழுக்­காட்­டி­ன­ருக்கு எச்­ஐவி தொற்ற பாலி­யல் உற­வு­தான் கார­ணம் என்று தெரி­விக்­கப்­பட்­டு உள்­ளது.

சாவ் சுவீ ஹாக் பொதுச் சுகா­தா­ரப் பள்­ளி­யில் முனை­வர் பட்­டம் பயி­லும் திரு ரேய்­னர் டான், 2017ஆம் ஆண்­டிற்குப் பிறகு எச்­ஐவி சம்­ப­வங்­கள் குறைந்­துள்­ள­தைச் சுட்­டி­னார்.

2016ஆம் ஆண்டு பிற்­ப­கு­தி­யில் எச்­ஐவி தொற்­றைத் தடுக்­கும் புதிய மருந்து ஒன்று அறி­மு­க­மா­னதே அதற்­குக் கார­ணம் என்று அவர் விவ­ரித்­தார்.

இவ்­வாண்டு அறி­விக்­கப்­பட்ட எச்­ஐவி சம்­ப­வங்­களில் பாதிக்­கும் அதி­க­மா­னவை, மருத்­து­வப் பரா­ம­ரிப்­பின்­போது நடத்­தப்­பட்ட எச்­ஐவி பரி­சோ­த­னை­யில் கண்­ட­றி­யப்­பட்­டன. அது­போக, தாங்­க­ளா­கவே முன்­வந்து செய்­து­கொண்ட எச்­ஐவி பரி­சோ­த­னை­யில் 15 விழுக்­காட்­டி­ன­ருக்­கும் எச்­ஐவி உறு­தி­யா­னது.

எச்­ஐவி தொற்­றும் அபா­யத்தை எதிர்­நோக்­கு­வோர் அடிக்­கடி பரி­சோ­தனை செய்­து­கொள்­ளு­மாறு சுகா­தார அமைச்­சும் சுகா­தார மேம்­பாட்டு வாரி­ய­மும் வலி­யு­றுத்­தி­யுள்­ளன.

“எச்­ஐவி தொற்றை ஆரம்­பத்­தி­லேயே கண்­ட­றிந்து அதற்கு ஆக்­க­க­ர­மான சிகிச்சை அளித்­தால், எய்ட்ஸ் ஏற்­பட்டு, அது தீவி­ர­ம­டை­வ­தைத் தள்­ளிப்­போட முடி­யும்,” என்று அமைச்சு கூறி­யது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!