எஸ்டி பிரஸ் வெளியிட்ட 3 புத்தகங்களுக்கு வாசகர் விருப்ப விருது

ஸ்ட்­ரெய்ட்ஸ் டைம்ஸ் (எஸ்டி) பிரஸ் வெளி­யிட்ட மூன்று புத்­த­கங்­கள் பாப்­பு­லர் வாச­கர் விருப்ப விரு­து­களைப் பெற்று இருக்­கின்­றன.

பெரி­ய­வர்­க­ளுக்­கான ஆங்­கில புத்­த­கப் பிரி­வில் ‘ஃபிப்டி சீக்­ரட்ஸ் ஆஃப் சிங்­கப்­பூர்ஸ் சக்­சஸ்’ என்ற புத்­த­கம் முதல் பரிசை வென்­றுள்­ளது. இதை சிங்­கப்­பூ­ரின் வெளி­யுறவு அமைச்­சில் பொது தூத­ராக இருக்­கும் பேரா­சி­ரி­யர் டோமி கோ தொகுத்து உரு­வாக்­கி­னார்.

இந்­தப் பிரி­வில் எஸ்டி பிரஸ் வெளி­யிட்ட புத்­த­கங்­களே இரண்­டா­வது, மூன்­றா­வது பரி­சு­க­ளையும் பெற்­றன.

எஸ்டி முத­லீட்­டுத் துறை­யின் முன்­னாள் ஆசி­ரி­ய­ரும் டிபி­எஸ் வங்­கி­யில் நிதித் திட்ட ஆலோ­ச­னைத் துறை­யின் தலை­வ­ருமான திருவாட்டி லோர்னா டான் எழு­திய ‘மனி ஸ்மார்ட்: ஓன் யுவர் ஃபைனான்­சி­யல் டெஸ்­டனி’ என்ற புத்­த­கம் இரண்­டா­வது பரி­சைப் பெற்­றது.

முன்­னாள் அமைச்­சர் எஸ். ஜய­கு­மார் எழு­திய ‘டிப்­ள­மசி: ஏ சிங்­கப்­பூர் எக்ஸ்­பீ­ரி­யன்ஸ்’ என்ற புத்­த­கத்­தின் இரண்­டாம் பதிப்பு மூன்­றா­வது விரு­தைப் பெற்­றது.

இது பற்றி கருத்­து­ரைத்த பேரா­சி­ரி­யர் ஜய­கு­மார், முதல் இரண்டு விரு­து­களை வென்ற பேரா­சி­ரி­யர் கோ மற்­றும் திரு­வாட்டி டானுக்கு நன்றி கூறி­னார்.

அவர்­க­ளு­டன் சேர்ந்து தம் புத்­த­கத்­திற்­கும் விருது கிடைத்து இருப்­பது தமக்கு மகிழ்ச்சி அளிப்­ப­தா­க­வும் பேரா­சி­ரி­யர் ஜய­கு­மார் தெரி­வித்­தார்.

ஆண்­டு­தோ­றும் இந்த விருது போட்­டியை நடத்தி வரும் பாப்­பு­லர் புத்­த­கக்கடை நிறு­வ­னத்­துக்கு பேராசி­ரி­யர் கோ நன்றி கூறி­னார். கொவிட்-19 கார­ண­மாக இந்த ஆண்டு விழா இணை­யம் வழி நடந்­தது குறிப்பிடத்தக்கது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!