சிறுநீரக ஆரோக்கியம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த புதிய இயக்கம்

சிறு­நீ­ரக ஆரோக்­கி­யம் குறித்த விழிப்­பு­ணர்வை அதி­க­ரிக்­க­வும் சிறு­நீ­ர­கம் தொடர்­பான நோய்­களைக் குறைக்­க­வும் புதிய திட்­டங்­களை முன்­னெ­டுப்­ப­தில் மக்களை ஊக்­கு­விக்க தேசிய சிறு­நீரக அற­நி­று­வ­னம் புதிய இயக்கம் ஒன்றை நேற்று தொடங்­கி­யது. சிங்­கப்­பூ­ரில் சிறு­நீ­ரக செய­ல் இழப்­புச் சம்­ப­வங்­கள் அதி­க­ரித்து வரும் நிலை­யில், ‘கிட்னி வீ கேர் மூவ்­மண்ட்’ என்று அழைக்­கப்­படும் இந்த இயக்­கம் தொடங்­கப்­பட்­டுள்­ளது.ரத்த சுத்­தி­க­ரிப்பு அல்­லது சிறு­நீ­ரக மாற்று அறுவை சிகிச்சை தேவைப்­படும் கிட்­டத்­தட்ட ஆறு புதிய நோயா­ளி­கள் ஒவ்­வொரு நாளும் தேசிய சிறு­நீ­ரக அற­நி­று­வனத்­திற்கு வரு­கின்­ற­னர்.

கடந்த ஐந்து ஆண்­டு­களில் ஒவ்­வோர் ஆண்­டும் சரா­ச­ரி­யாக 855 புதிய நோயா­ளி­கள் ரத்த சுத்­தி­க­ரிப்பு சிகிச்­சைக்­காக தேசிய சிறு­நீ­ரக அற­நி­று­வ­னத்­தில் சேர்க்­கப்­பட்­டுள்­ள­னர். கடந்த நிதி­யாண்­டில் சிறு­நீ­ரக செய­லி­ழப்­புக்­குச் சிகிச்சை அளிக்க $116 மில்­லி­யனை அற­நி­று­வ­னம் செல­விட்­டது. சிங்­கப்­பூ­ரில் தற்­போது 8,000க்கும் அதி­க­மான நோயா­ளி­கள் ரத்த சுத்­தி­க­ரிப்பு சிகிச்­சை­யைப் பெற்று வரு­கின்­ற­னர். மூன்­றில் இரு­வர் தேசிய சிறு­நீ­ரக அற­நி­று­வ­னத்­தில் பரா­ம­ரிக்­கப்­ப­டு­கின்­ற­னர். நீரி­ழிவு, உயர் ரத்த அழுத்­தம் போன்ற நாள்­பட்ட நோய்­கள் கார­ண­மாக சிறு­நீ­ரக செய­லி­ழப்பு ஏற்­ப­டு­கிறது. நீரி­ழி­வு­டன் தொடர்­பு­டைய சிறு­நீ­ரக செய­லி­ழப்­புச் சம்­ப­வங்­கள் அதி­கம் கொண்ட நாடு­களில் ஒன்று சிங்­கப்­பூர்.

கூடு­த­லான முன்­னெச்­ச­ரிக்கை நட­வ­டிக்­கை­கள் எடுக்­கப்­ப­டா­விட்­டால் நீரி­ழிவு உடை­யோர் எண்­ணிக்கை 2050க்குள் ஒரு மில்­லி­யனை எட்­டும் என முன்­னு­ரைக்­கப்­ப­டு­கிறது. அடுத்த மூன்று ஆண்­டு­களில் ‘கிட்னி வீ கேர் மூவ்­மண்ட்’ இயக்­கத்­திற்கு $1 மில்­லி­யன் நிதி வழங்க தேசிய சிறு­நீ­ரக அற­நி­று­வ­னம் கடப்­பாடு கொண்­டுள்­ளது.

ஒவ்­வொரு திட்­டத்­திற்­கும் $5,500 வரை­யி­லான நிதி அல்­லது திட்­டத்­திற்­கான செல­வில் 80 விழுக்­காடு வரை­யி­லான நிதியை விண்­ணப்­ப­தா­ரர்­கள் பெறு­வர். இந்த நிதிக்கு சிங்­கப்­பூ­ரர்­களும் நிரந்­த­ர­வா­சி­களும் தகுதி பெறு­வர்.

இதை மறு­ஆய்வு செய்து பரிந்­து­ரை­களை வழங்க சுகா­தா­ரப் பரா­ம­ரிப்பு, தொடர்பு, நிதித் துறை­களைச் சேர்ந்த நிபு­ணர்­கள் அடங்கிய குழு ஒன்று அமைக்­கப்­பட்­டு உள்­ளது.யூஹு­வா­வில் தேசிய சிறு­நீ­ரக அற­நி­று­வ­னத்­தின் ரத்த சுத்­தி­க­ரிப்பு நிலை­யம் நேற்று அதி­கா­ர­பூர்­வ­மாகத் தொடங்கி வைக்­கப்­பட்­டது. அதை­யொட்டி நீடித்த நிலைத்­தன்மை, சுற்­றுப்­புற அமைச்­சர் கிரேஸ் ஃபூ இந்த இயக்­கத்­தைத் தொடங்கி வைத்­தார்.

தனி­ந­பர்­கள், சமூ­கப் பங்­கா­ளி­கள், தனி­யார்­துறை போன்ற பல­த­ரப்­பி­ன­ரி­டம் இருந்து புதிய சுத்­தி­கரிப்பு நிலை­யத்­திற்­கான நிதி திரட்­டப்­பட்­டுள்­ள­தாக திரு­வாட்டி ஃபூ சொன்­னார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!