வெளிநாடு செல்லும் விளையாட்டு வீரர்களுக்குத் தடுப்பூசி முன்னுரிமை; தனிமைப்படுத்த தனி வகை ஏற்பாடு

தோக்­கியோ ஒலிம்­பிக் விளை­யாட்டு­கள் போன்ற போட்­டி­களில் சிங்­கப்­பூரை பிர­தி­நி­தித்து வெளி­நா­டு­க­ளுக்­குச் சென்று அங்கு பயிற்சி­களில் ஈடு­பட்டு போட்­டி­களில் கலந்­து­கொள்ள வேண்­டிய தேவை இருக்­கின்ற வீரர்­க­ளுக்கு கொவிட்-19 தடுப்­பூசி முன்­னு­ரிமை கொடுக்­கப்­படும் என்று கலா­சார, சமூக இளை­யர்துறை அமைச்­சர் எட்­வின் டோங் தெரி­வித்­தார்.

அந்த வீரர்­கள் நாடு திரும்­பும்­போது அவர்கள், தங்­க­ளைத் தனி­மைப்­ப­டுத்­திக்கொள்ள வேண்டி இருக்­கும்.

அந்தக் கால­கட்­டத்­தி­லும் அவர்­கள் இங்கு தொடர்ந்து பயிற்சி பெற­வும் தங்­க­ளு­டைய உட­லு­று­தியை நிலை­நாட்டி வர­வும் உத­வும் தடுத்துவைப்­புச் செயல்­திட்­டம் ஒன்­றை­யும் அதி­கா­ரி­கள் வடி­வமைத்து உரு­வாக்­கு­வார்­கள் என்று அமைச்­சர் குறிப்­பிட்­டார்.

ஒலிம்­பிக் போட்­டி­க­ளுக்குத் தகுதி பெறு­வோர் ஒரு­பு­றம் இருக்க, விளை­யாட்டுப் போட்­டி­க­ளுக்­கான தகு­திச் சுற்­று­களில் கலந்­து­கொள்ள வெளி­நாடு செல்­லும் வீரர்­க­ளுக்கும் அர­சாங்­கம் முன்­னுரிமை அளிக்கும் என்று செவ்­வாய்க்­கி­ழமை அளித்த ஒரு பேட்­டி­யில் திரு டோங் தெரி­வித்­தார்.

“வெளி­நாடு செல்­லும் வீரர்­கள், கொவிட்-19 கிரு­மி­யு­டன் நாடு திரும்­பும் ஆபத்தை நாம் விரும்­ப­வில்லை. இப்­படி ஒரு சூழ்­நிலை ஏற்­பட்­டால் அது ஒலிம்­பிக் போட்­டி­க­ளுக்கு வீரர்­கள் ஆயத்­த­மா­வதைக் கெடுத்து­வி­டும்,” என்று அமைச்­சர் திரு டோங் குறிப்பிட்டார்.

தகு­தி­பெ­றும் விளை­யாட்டு வீரர்­கள் எப்­போது முதல் தடுப்­பூசி போட்­டுக்­கொள்­ளத் தொடங்­கு­வார்கள் என்று கேட்டபோது, இதன் விவ­ரங்­கள் இன்­ன­மும் வகுக்­கப்­பட்டு வரு­வ­தாக அமைச்­சர் தெரி­வித்­தார்.

தோக்­கியோ ஒலிம்­பிக் போட்­டி­கள் ஓராண்டு காலத்­துக்கு ஒத்­தி­வைக்­கப்­பட்டு இந்த ஆண்டு ஜூலை­யில் தொடங்­கு­கின்­றன. ஆனால் அந்­தப் போட்­டி­கள் மேலும் ஒத்­தி­வைக்­கப்­ப­டுமா என்ற கேள்­வி­யும் தலை­தூக்கி உள்­ளது. ஜப்­பா­னில் கொவிட்-19 தொற்று அதி­க­மாக இருப்­பதே கார­ணம்.

வரும் 2034ல் உலகக் காற்­பந்து போட்­டிக்கு ஆண்­கள் குழு தகுதி பெற வேண்­டும் என்ற இலக்கை சிங்­கப்­பூர் வகுத்து இருக்­கிறது.

இந்த இலக்கு சிங்­கப்­பூ­ரில் நீண்­ட­கா­லப் போக்­கில் விளை­யாட்­டுத் துறை மேம்­பட பலன் அளிக்­கும் என்று தான் நம்­பு­வ­தா­க­வும் அமைச்­சர் குறிப்­பிட்­டார்.

உலகக் காற்­பந்து போட்­டிக்கு நாம் தகுதி பெற்­று­விட்­டால் அது நல்­லது என்றும் இல்லை என்­றாலும் நம்­மு­டைய விளை­யாட்­டுத் தரங்­கள் மேம்­பட்டு இருக்­கும் என்­றும் அத்­த­கைய ஒரு மேம்­பட்ட நிலை­யைக் காண்­பது தனது விருப்­பம் என்­றும் அமைச்­சர் கூறி­னார்.

சிங்­கப்­பூர் காற்­பந்து சங்­கம், ஸ்போர்ட்ஸ் சிங்­கப்­பூர் அமைப்பு ஆகி­ய­வற்­று­டன் தமது அமைச்சு அணுக்­க­மா­கச் செயல்­பட்டு வரு­கிறது என்­றும் 2034 இலக்­குக்­கான வழி­காட்­டித் திட்­டங்­களைக் குறித்த நேரத்­தில் அமைச்சு அறிவிக்­கும் என்­றும் அமைச்­சர் குறிப்­பிட்­டார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!