சிங்கப்பூரில் தைப்பூசம் 2021: கவனத்தில் கொள்ள வேண்டிய கட்டுப்பாடுகள்

கொவிட்-19 பரவலைத் தவிர்க்கும் கட்டுப்பாடுகளுடன் சிங்கப்பூரின் இந்துக் கோயில்களில் நாளை (ஜனவரி 28) தைப்பூசத் திருவிழாவுக்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

தைப்பூசத் திருவிழா பெரிய அளவில் இடம்பெறும் டேங் ரோடு, அருள்மிகு தெண்டாயுதபாணி கோயிலுடன் இதர கோயில்களிலும் சிறப்பு வழிபாடுகள் இடம்பெறுகின்றன.

ஈசூன் வட்டாரத்தில் இருக்கும் புனிதமரம் ஸ்ரீ பாலசுப்பிரமணியர் கோயிலிலும் ஸ்ரீ மகா மாரியம்மன் கோயிலிலும் பக்தர்கள் பால் குடம், பால் பொட்டலங்கள் செலுத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

பாலசுப்பிரமணியர் கோயிலில் பால் குடம் செலுத்தவதற்கான முன்பதிவுகள் இன்றுடன் நிறைவடைந்தன என்றும் காலை முழுவதும் நடக்கும் பால் அபி‌ஷேகங்களுக்கு ஏறத்தாழ 1,000 பக்தர்களை எதிர்பார்ப்பதாகவும் கோயில் செயலாளர் திரு அண்ணாதுரை அழகப்பன் கூறினார்.

பாதுகாப்பு நடைமுறைகளுடன் அவர்கள் பகுதி பகுதியாக கோயிலுக்குள் அனுமதிக்கப்படுவர்.

மகா மாரியம்மன் கோயிலில் பால் குடம், பால் அபி‌ஷேகம் வழிபாடுகளில் கிட்டத்தட்ட 100 பக்தர்களை எதிர்பார்ப்பதாகக் கூறினார் கோயில் தலைவர் ரா.மகேந்திரன். இக்கோயிலில் தைப்பூச வழிபாடுகளுக்கு முன்பதிவு தேவையில்லை.

“இந்த ஆண்டு கூடுதலான பக்தர்களை எதிர்பார்க்கலாம். ஒரு நேரத்தில் கோயிலுக்குள் அதிக பட்சம் 50 பேர் இருக்கலாம். மேற்கொண்டு பக்தர்கள் வந்தால் அவர்கள் கட்டம் கட்டமாக வழிபாடு செய்ய ஏற்பாடுகள் செய்து உள்ளோம்,” என்றார் திரு மகேந்திரன்.

சாங்கி ஸ்ரீ ராமர் கோயிலில் பக்தர்கள் காலை 8.30 முதல் 9 மணி அளவில் பால் குடமும் பால் அபி‌ஷேகமும் செலுத்தலாம் என்றும் இதற்கு முன்பதிவு தேவையில்லை என்றும் கோயில் நிர்வாகி திரு விஜய் குமார் கூறினார்.

தெண்டாயுதபாணி கோயிலில் வழிபடும் பக்தர்களுக்கு முக்கிய குறிப்புகள்:

நாளை அதிகாலை 12 மணி அளவில் (இன்று நள்ளிரவு) தொடங்கிய தைப்பூசத் திருவிழா இரவு 10 மணி அளவில் நிறைவடையும்.

 பால் குடம் எடுப்பதற்கும் கோயிலில் வழிபாடு செய்வதற்கும் மட்டுமே பக்தர்கள் அனுமதிக்கப்படுவர்.

 பால்குடம் எடுக்க முன்பதிவு செய்தவர்களுக்கு அதனை உறுதிப்படுத்தும் மின்னஞ்சல் அனுப்பப்பட்டிருக்கும். அதனைக் காட்டிய பிறகே அவர்கள் கோயிலுக்குள் செல்ல அனுமதிக்கப்படுவர். பதிவு செய்தவருக்கு மட்டுமே அனுமதி.

 சாமி தரிசனத்துக்காக கோயிலுக்குச் செல்ல விரும்புவோரும் முன்பதிவு செய்ய வேண்டும். முன்பதிவு செய்யாமல் வந்தால் கூட்ட சூழ்நிலையைப் பொறுத்து அவர்கள் கோயிலுக்குள் அனுமதிக்கப்படுவர்.

 அலகு குத்தி வரும் எந்த பக்தருக்கும் கோயிலுக்குள் அனுமதி இல்லை.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!