அன்பால் உருவான பந்தம்

மூத்­தோர் தலை­முறை அலு­வ­லக (Silver Generation Office) தொண்­டூ­ழி­யர்­கள் முதி­ய­வர்­களை வீட்­டில் அல்­லது சமூக இடங்­களில் சந்­தித்து அர­சாங்க திட்­டங்­கள் பற்றி விளக்கம் தருவது வழக்­கம்.

முதி­ய­வர்­க­ளி­டம் என்ன தக­வல்­களைப் பகிர்ந்­து­கொள்­வது என்று திட்டமிடும் அவ்­வ­லு­வ­ல­கத்­தின் கொள்கை தொடர்­பு­கள், ஆய்­வின் பிரிவு தலை­வ­ராக திரு­மதி ஞா.பவானி பொறுப்பு வகிக்­கி­றார்.

கடந்­தாண்­டு கொவிட்-19 கிரு­மித்­தொற்று தொடங்கிய சம­யத்­தில், அதிக பாதிப்­புக்­குள்­ளா­கக்­கூ­டிய முதி­ய­வர்­க­ளுக்கு எப்­படி உத­வ­லாம் என அந்த அலு­வ­ல­கம் ஆராய்ந்­தது.

அதில் 53 வயது முதி­ய­வர் ஒரு­வர் கர்ப்­பப்பை வாய் புற்­று­நோ­யால் அவ­திப்­ப­டு­வ­தா­க­வும் தனி­மை­யில் வாழ்­வ­தா­கும் திரு­மதி பவா­னிக்கு தெரி­ய வந்தது. புற்­று­நோ­யின் தாக்­கம் அந்த முதி­ய­வ­ரின் நட­மாட்­டத்தைப் பெரி­தும் பாதித்­தது.

அவ­ருக்கு மளி­கைப் பொருட்­களை வாங்­கித் தரு­வது, நாளுக்கு இரு­முறை அவ­ரது நாயை சிறிது நேரம் நடக்க அழைத்­துச் செல்­வது போன்­ற­வற்­றுக்கு அம்­மு­தி­ய­வ­ருக்கு உதவி தேவைப்­பட்­டது.

ஒரு­முறை அம்­மு­தி­ய­வர் சக்­கர நாற்­கா­லி­யில் தாமாகவே நாயை அழைத்­துச் செல்­லும்­போது தரை­யில் விழுந்­து­விட்­டா­ராம்.

எல்லா நாட்­க­ளி­லும் முதி­ய­வரின் நாயை இரு­முறை கீழே அழைத்­துச்­செல்­வ­தற்கு தொண்­டூ­ழி­யர்­கள் கிடைப்­பது கடி­ன­மாக இருந்ததால், பொதுச் சேவை அதி­கா­ரி­யான திரு­மதி பவானி அவருக்கு உதவ முன்­வந்­தார்.

கொவிட்-19 நோய்­மு­றி­ய­டிப்பு காலம் தொடங்­கிய கடந்த ஆண்டு ஏப்­ரல் முதல் வீட்­டி­லி­ருந்து வேலை செய்­யும் ஏற்­பா­டு­கள் நடப்­பில் இருந்­த­தால் பவா­னி­யால் தொண்­டூ­ழி­யம் புரிய முடிந்­தது.

நாய்ப் பிரி­ய­ரான திரு­மதி பவானி முதல் சந்­திப்­பி­லேயே அம்­மு­தி­ய­வ­ரின் நாயு­டன் தொடர்­பு­களை வளர்த்­து­கொண்­டா­லும் யாரி­ ட­மும் உதவி கேட்­கும் பழக்­க­மில்­லாத அம்­மு­தி­ய­வர் திரு­மதி பவா­னி­யி­டம் அதி­கம் பேசா­தி­ருந்­தார்.

நாள­டை­வில் அம்­மு­தி­ய­வரே மெல்ல மெல்ல திரு­மதி பவா­னி யிடம் தமது வாழ்க்­கை­யைப் பற்றி பேசத் தொடங்­கி­னார். படிப்­ப­டி­யாக திறன்­பேசி தொடர்­பு­கள் வழி இவர்­க­ளி­டையே நட்­பு­றவு மலர்ந்­தது.

கடந்­தாண்டு ஆகஸ்ட் மாதம் அம்­மு­தி­ய­வ­ரின் உடல்நிலை மோச­ ம­டைய மருத்­து­வ­ம­னை­யில் அவர் அனு­ம­திக்­கப்­பட்­டார். தமது நாயை சில நாட்­கள் பார்த்­துக்­கொள்­ளு­மாறு திரு­மதி பவா­னியி­டம் அவர் உதவி கேட்­டி­ருந்­தார்.

அந்த சில நாட்­கள் சில மாதங்­க­ளா­னது. திரு­மதி பவா­னி­யும் அவ­ரது கண­வ­ரும் அவ்­வப்­போது முதி­ய­வரைச் சந்­திக்க மருத்­து­வ­மனை செல்­வார்கள்.

அவர்­கள் மசாலா தேநீர் போன்ற முதி­ய­வர் கேட்­கும் விருப்­ப­மான உணவுப் பொருட்­க­ளை­யும் பானங்­க­ளை­யும் வாங்கி அவரை மகிழ்­வித்­த­னர்.

“உரி­மை­யோடு என்­னி­டம் அவர் விரும்­பி­யதைக் கேட்­பது என் மனதை நெகிழ வைத்­தது. சில வேளை­களில் திறன்­பேசிக் காணொளி தொடர்பு வழி அவ­ரின் நாயை­யும் அவ­ரி­டம் காட்­டி­னோம்,” என்­றார் திரு­மதி பவானி, 38.

தாம் உயிர் வாழ இன்­னும் ஒரு வாரமே உள்­ளது என்று முதி­ய­வ­ரி­டம் தெரி­விக்­கப்­பட்­ட­தும் அம்­முதி­ய­வர் வளர்த்த நாயை நேரில் சந்­திக்க ஏற்­பா­டு­கள் செய்ய உதவி­னார் திரு­மதி பவானி.

இறப்­ப­தற்கு மூன்று நாளுக்கு முன், திரு­மதி பவா­னி­யிடம் தம் செல்­லப் பிரா­ணியை நிரந்­த­ர­மாகப் பார்த்­துக்­கொள்­ளு­மாறு கேட்­டுக்­கொண்டு கடந்­தாண்டு நவம்­பர் 6ஆம் தேதி இயற்கை எய்­தி­னார் அம்­மு­தி­ய­வர்.

முதி­ய­வ­ரின் கடைசி ஆசைக்கு இணங்க இன்றுவரை­யில் திரு­மதி பவானி அவ­ரது நாயைப் பரா­மரித்து வரு­கி­றார்.

“தனி­மை­யில் யாராவது துணை­யின்றி வாழ்­வது சிர­மம் என்­பதை உணர்­வேன். எங்­க­ளால் ஈன்ற உத­வியை செய்ய முடிந்­த­தில் ஒரு­வித மனத் திருப்தி,” என்று கூறி­னார் தொண்­டூ­ழி­யம் மூலம் அர்­த்த­முள்ள வாழ்க்­கையைத் தொடரும் இந்த அர­சாங்க ஊழி­யர்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!