செய்தித்தாள் விநியோகிப்பாளர்களுக்கு நன்றி தெரிவித்து எஸ்பிஎச் காணொளி வெளியீடு

சிங்­கப்­பூர் பிரஸ் ஹோல்­டிங்ஸ் நிறு­வ­னத்­தின் விநி­யோ­கத் துறை, செய்­தித்­தாள் விநி­யோ­கிப்­பா­ளர்­களின் கடும் உழைப்பை அங்­கீ­கரித்து அவர்­க­ளைப் பாராட்­டும் வித­மாக ஒரு சிறிய காணொ­ளியை வெளி­யிட்டு இருக்­கிறது.

அந்­தக் காணொ­ளி­யில் செய்­தித்­தாள் விநி­யோ­கிப்­பா­ளர்­கள் ஐந்து பேர் இடம்­பெற்று இருக்­கிறார்­கள். அவர்­களில் திரு பக்­கி­ரி­சாமி சாமி­துரை, 47, ஒரு­வர்.

15 ஆண்டு கால­மாக செய்­தித்­தாள் விநி­யோ­கித்து வரும் இவர், புக்­கிட் பாத்­தோக்­கில் அதி­காலை 3 மணி முதல் 8 மணி வரை அன்­றா­டம் கடு­மை­யா­கப் பணி­யாற்­று­கி­றார்.

அந்த வேலை நேரத்தை தான் விரும்­பு­வ­தா­கக் கூறும் திரு பக்­கி­ரி­சாமி, அத­னால் தன் பிள்­ளை­களு­டன் செல­விட போதிய நேரம் கிடைப்­ப­தா­கக் கூறி­னார். பல பெற்­றோர்­க­ளுக்கு இந்த வாய்ப்பு இல்லை என்­றார் அவர்.

Remote video URL

சிங்­கப்­பூ­ரில் சென்ற ஆண்­டில் கொவிட்-19 கடு­மை­யாக தலை­வி­ரித்­தா­டி­யது. அப்­போது தன்­னை­யும் அந்­தக் கிருமி தொற்­றி­வி­டும் என்று திரு பக்­கி­ரி­சாமி கவலை அடைந்­தார் என்­றா­லும் சந்­தா­தா­ரர்­க­ளுக்­குச் செய்­தி­கள் கிடைப்­பது மிக முக்­கி­யம் என்­பதால் தன்­ வேலை­யைத் தொடர்ந்­த­தா­கத் தெரி­வித்­தார்.

“நக­ரமே தூங்­கும் போது நான் வேலை பார்க்­கி­றேன். புத்­தம்­புது காற்றை அமை­தி­யான வீதி­களை அனு­ப­விக்­கி­றேன்,” என்று அவர் மேலும் கூறி­னார்.

இத­னி­டையே, செய்­தித்­தாள் விநி­யோ­கிக்­கும் பல­ரை­யும் போலவே திரு சாதிக் பாட்சா, 51, என்­ப­வ­ரும் ஊட­கத் தொழில்­துறை­யின் உரு­மாற்­றம் தன்­ பணி­யி­லும் தாக்­கத்தை ஏற்­ப­டுத்­தும் என்­பதை உணர்ந்­தி­ருக்­கி­றார்.

அன்­றா­டம் அதி­காலை 2 மணிக்கு எழுந்து புக்­கிட் பாஞ்­சாங், தோ பாயோவில் இவர் செய்­தித்­தாள் விநி­யோ­கிக்­கி­றார்.

மூன்று பிள்­ளை­க­ளுக்­குத் தந்­தை­யான திரு பாட்சா, கடந்த 30 ஆண்டு காலத்­தில் செய்­தித்­தாள் விநி­யோ­கப் பணி உரு­மாறி வந்­தி­ருப்­ப­தைத் தான் பார்த்­தி­ருப்­பதா­கத் தெரி­வித்­தார்.

“சிறு­சிறு மாற்­றங்­கள் பல இடம்­பெற்­றா­லும் எங்­கள் வேலை தொடர்ந்து ஏற்­பு­டைய ஒன்­றா­கவே இருந்து வரும். இளம் தலை­முறை­யி­னர் இணை­யத்­தின் மூலம் செய்­தி­க­ளைப் பெறு­கி­றார்­கள். இருந்­தா­லும் முதிய சிங்­கப்­பூ­ரர்­கள் பல­ரும் அதி­கா­லை­யில் செய்­தித்­தாள் படிப்­பதை இன்­ன­மும் தாங்­கள் விரும்­பும் ஒரு பழக்­க­மா­கக் கொண்­டி­ருக்­கி­றார்­கள்,” என்று திரு பாட்சா கூறி­னார்.

காணொ­ளி­யில் இடம்­பெற்று உள்ள செய்­தித்­தாள் விநி­யோ­கிப்­பா­ளர்­களில் 43 ஆண்­டு­க­ளாக அந்­தச் சேவை­யில் ஈடு­பட்டு வரும் திரு டோனி சுவா, 66, மற்­றொரு­வர். இந்த வேலை­யில் இருந்து ஓய்வு பெறும் திட்­டம் எது­வும் இவ­ரி­டம் இல்லை.

வெஸ்ட் கோஸ்ட் பகு­தி­யில் செய்­தித்­தாள் விநி­யோ­கிக்கும் இவர், இந்த வேலை தனக்கு காலை­நேர உடற்­ப­யிற்சி என்கிறார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!