எஸ்ஐஏ சரக்கு விமானத்தின் அடிப்பகுதியில் துவாரங்கள்

சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் (எஸ்ஐஏ) சரக்கு விமானம் ஒன்றின் அடிப்பகுதியில் துவாரங்கள் காணப்பட்டதை அடுத்து பிரசல்சில் பழுதுபார்ப்புப் பணிகள் நடந்து வருகின்றன.

டல்லாசிலிருந்து பிரசல்சுக்குப் பயணம் மேற்கொண்ட விமானம் அது என்று எஸ்ஐஏ நேற்று தெரிவித்தது.

விமானச் சிப்பந்திகள் தேவையான விமானச் சோதனைகளை மேற்கொண்டதாகவும் விமானம் பிரசல்சில் சுமுகமாகத் தரையிறங்கியதாகவும் கூறப்பட்டது.

இருப்பினும், விமானப் பயணத்திற்குப் பின் சோதனையிட்டதில் அடிப்பகுதி சேதமடைந்தது தெரிய வந்தது.

ஓடுபாதையில் விமானம் தரையிறங்கியபோது கற்கள் மேல்நோக்கிப் பறந்து அந்த சேதத்தை ஏற்படுத்தி இருக்கலாம் என்று ‘தி ஏவியேஷன் ஹெரல்ட்’ விமானத்துறை செய்தி இணையத்தளம் குறிப்பிட்டுள்ளது.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!