போலிஸ் வளாக விரிவாக்கத்தில் வரலாற்றுச் சிறப்பு கட்டடங்கள்

நூறாண்டு பழமை வாய்ந்த ஆங்­கி­லக்­கன் தேவா­ல­ய­மும் அதனை ஒட்­டிய பாலர் பள்ளிக் கட்­ட­ட­மும் நீல் ரோட்­டில் காவல்­துறை வளா­கத்­து­டன் இணைக்­கப்­பட உள்­ளன. சுமார் இரு­பது ஆண்­டு­க­ளுக்கு முன்­னர் எம்­ஆர்டி திட்­டம் ஒன்­றுக்­காக இவை கைய­கப்­ப­டுத்­தப்­பட்­டன.

செயின்ட் மேத்யூ தேவா­ல­யம் 1890களில் தோற்­று­விக்­கப்­பட்­டது. அத­ன­ரு­கில் உள்ள மேத்யூ பாலர்­பள்ளி 1950ஆம் ஆண்டு கட்­டப்­பட்­டது. கேன்­டன்­மன்ட் காவல்­துறை வளா­கத்தின் விரி­வாக்­கத்­து­டன் இவை இணைக்­கப்­படும். விரிவாக்­கப் பணி­களை 2024ஆம் ஆண்­டுக்­குள் முடிக்­கத் திட்­ட­மிடப்­பட்டு உள்­ளது. புதி­தாக உரு­வாக்­கப்­படும் காவல்­துறை வசிப்­பி­டங்­களின் பகு­தி­யாக இந்த இரு கட்­ட­டங்­களும் இடம்­பெ­றும்.

இருந்­தாலும் இவற்­றின் வர­லாற்று வடி­வ­மும் மர­பு­டை­மை­யும் தொடர்ந்து கட்­டிக் காக்­கப்­படும் என உள்­துறை அமைச்சு தெரி­வித்து உள்­ளது. மேலும் இவற்­றின் கட்­ட­டக் கலை அம்­சங்­கள் மாற்­ற­மின்றி தொட­ரும் என்­றும் அது தெரி­வித்து உள்­ளது.

"கலை அம்­சங்­கள் பாது­காக்­கப்­படும் இடங்­களில் பொது­வா­கவே பொது­மக்­க­ளுக்கு அனு­மதி இல்லை. பாது­கா­வல் பாடப் பயிற்சி, ஈடு­பாட்டு நட­வ­டிக்­கை­கள் போன்­ற­வற்­றுக்­காகப் பயன்­ப­டுத்­தப்­படும் இவ்­வி­ரண்டு கட்­ட­டங்­க­ளி­லும் அதே நடை­முறை தொட­ரும்.

"ஆயி­னும், பாது­காக்­கப்­படும் கட்­ட­டங்­க­ளின் வெளிப்­புற கலை அம்­சங்­கள் வீதி­களில் இருந்­தும் பக்­க­வாட்­டுப் பாதை­களில் இருந்­தும் பார்க்­கும் அள­வுக்கு இருக்­கும்," என்­றும் அமைச்சு குறிப்­பிட்­டுள்­ளது.

மேத்யூ தேவா­ல­யத்தை பிரிட்­டிஷ் கட­லோ­டி­களும் ஊட்­ரம் சிறைச்­சா­லை­யைச் சேர்ந்த காவ­லா­ளி­களும் 1890களில் வழி­பாட்­டுக்­கா­கப் பயன்­ப­டுத்தி வந்­தனர். பின்­னர் 1920களில் சிங்­கப்­பூர் ஆங்­கி­லிக்­கன் மறை­மா­வட்ட திருச்­சபை அந்­தக் கட்­ட­டத்தை சொந்­த­மாக்­கிக் கொண்­டது. ஜப்­பா­னிய படை­யெடுப்பு முடிந்து பல ஆண்­டு­களுக்­குப் பின்­னர் அக்­கட்­ட­டம் விரி­வாக்­கம் செய்­யப்­பட்ட பிர­தான கட்­ட­டப் பகு­தி­யின் அரு­கில் பாலர் பள்ளி ஒன்று உரு­வாக்­கப்­பட்­டது.

அதற்­குப் பின்­னர் பிர­தான தேவா­ல­யக் கட்­ட­டம் நவீன பாணி­யில் மாற்றி அமைத்­துக் கட்­டப்­பட்­டது.

"அரு­க­ருகே அமைந்­துள்ள இரு கட்­ட­டங்­களும் வீதி­யி­லி­ருந்து பார்ப்­போ­ரைக் கவ­ர்கின்றன. அவற்றின் கட்­ட­டக்­கலை மிளி­ரும் வண்­ணம் அமைந்­தி­ருக்கிறது," என்று நகர மறு­சீ­ர­மைப்பு ஆணையப் பேச்­சா­ளர் ஒரு­வர் கூறி­னார்.

தேவா­ல­ய­மும் பாலர் பள்­ளி­யும் 1998ஆம் ஆண்டு தங்­க­ளது செயல்­பா­டு­களை நிறுத்­தின. ஈராண்­டு­களுக்­குப் பின்­னர், வடக்கு-கிழக்கு எம்­ஆர்டி பாதை அமைப்­ப­தற்­காக அவை கைய­கப்­ப­டுத்­தப்­பட்­ட­தாக அர­சி­த­ழில் வெளி­யி­டப்­பட்­டது. இருப்­பி­னும், ரயில் பாதை நீளும் பகு­தி­யில் அவ்­விரு கட்­ட­டங்­க­ளுக்­கும் பாதிப்பு ஏற்­ப­ட­வில்லை. அத­னைத் தொடர்ந்து 16 ஆண்டு காலமாக மர­பு­டைமை பாது­காப்­பில் அவை வைக்­கப்­பட்டு அர­சி­தழில் பதிவு செய்­யப்­பட்­டன.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!