கொவிட்-19 தொழில்நுட்ப நாயகர்களுக்கு அங்கீகாரம்

சிங்­கப்­பூ­ரில் கடந்த ஆண்டு மே மாதம் கொவிட்-19 நோய்த்­தொற்­றால் பாதிக்­கப்­பட்­டோர் எண்­ணிக்கை கிடு­கி­டு­வென உயர்ந்­த­போது, நோய் தொற்­றி­ய­வர்­க­ளு­டன் நெருங்­கிய தொடர்­பில் இருந்­த­வர்­களை அடை­யா­ளம் காணும் அதி­கா­ரி­க­ளுக்கு உதவ இணை­யச் செயலி ஒன்றை உரு­வாக்க சிங்­கப்­பூர் தேசிய பல்­க­லைக்­க­ழ­கத்தை (என்­யு­எஸ்) சேர்ந்த குழு ஒன்று மும்­மு­ர­மாக செயல்­பட்­டது.

அத்­த­கைய பெரிய அள­வி­லான தொழில்­நுட்­பத்தை உரு­வாக்­கு­வதில் அக்­கு­ழு­வுக்கு அனு­ப­வம் குறைவு என்­ற­போ­தி­லும், சிங்­கப்­பூர் ஆயுதப்­படை­யின் உத­வி­யு­டன் மூன்று வாரங்­க­ளுக்­குள் அக்­குழு அந்­தச் செய­லியை உரு­வாக்­கி­யது. அந்தக் ­கு­ழு­வில் முன்­னாள், இன்­னாள் என்­யு­எஸ் மாண­வர்­கள் அறு­வர் இடம்­பெற்­ற­னர்.

கொவிட்-19 நோயா­ளி­க­ளின் நட­மாட்­டத்­தை­யும் அவர்­க­ளு­டன் நெருங்­கிய தொடர்­பில் இருந்­த­வர்­கள் உள்­ளிட்ட விவ­ரங்­க­ளைத் தட­ம­றி­யும் அதி­கா­ரி­க­ளி­டம் வழங்க அச்­செ­யலி உத­வி­யது.

இந்­நி­லை­யில், நேற்று நடை­பெற்ற 'ஐடி லீடர்' விருது வழங்­கும் நிகழ்ச்­சி­யில் அங்­கீ­க­ரிக்­கப்­பட்­ட­வர்­களில் அந்த என்­யு­எஸ் குழு­வி­ன­ரும் அடங்­கு­வர். கொவிட்-19 நெருக்­கடி சூழ­லின்­போது தொழில்­நுட்­பத்­தைக் கொண்டு சமூ­கத்­தில் நேர்­ம­றை­யான தாக்­கத்தை ஏற்­படுத்தி­ய­வர்­க­ளுக்கு நன்­றி­கூ­றும் வித­மாக இந்த நிகழ்ச்சி நடத்­தப்­பட்­டது.

நிகழ்ச்­சி­யில் கலந்­து­கொண்டு பேசிய தொடர்பு, தக­வல் அமைச்­சர் எஸ்.ஈஸ்­வ­ரன், விருது வழங்கி கௌர­விக்­கப்­பட்­ட­வர்­க­ளைப்­போல கூடு­த­லான தொழில்­நுட்ப நாய­கர்­களை சிங்­கப்­பூர் பேண வேண்­டும் என்று வலி­யு­றுத்­தி­னார்.

அந்த வகை­யில் சிங்­கப்­பூ­ரர்­களுக்கு மின்­னி­லக்­கத் திறன்­களை வளர்க்­க­வும் அவர்களுக்கு நல்ல வேலை­களை உரு­வாக்­க­வும் அர­சாங்­கம் பெரி­த­ள­வில் முத­லீடு செய்து வரு­வதை அமைச்­சர் ஈஸ்வரன் சுட்­டி­னார்.

கடந்த ஆண்டு 'எஸ்ஜி யுனை­டெட்' வேலை, திறன் திட்­டங்­கள் தொடங்­கப்­பட்­ட­தைத் தொடர்ந்து இவ்­வாண்டு ஜன­வரி மாத நில­வரப்­படி தக­வல் தொழில்­நுட்ப வேலை, திறன் மேம்­பாட்டு வாய்ப்­பு­களில் 12,400க்கும் மேற்­பட்­டோர் பணி­ய­மர்த்­தப்­பட்­டதை அமைச்­சர் சுட்­டி­னார்.

தற்­போது 18,700க்கும் அதி­க­மான வேலை­கள், வேலைப் பயிற்சி வாய்ப்­பு­கள் இருப்­ப­தா­க­வும் அவர் தெரி­வித்­தார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!