மின்நூலைத் தொகுக்கும் பணியில் அறுவர்

மனநலப் பிரச்சினைகளை எதிர்நோக்கும் இளையர்களுக்கு ஆதரவளிப்பது நோக்கம்

மன­ந­லப் பிரச்­சி­னை­களை எதிர்­நோக்­கும் இளை­யர்­க­ளுக்கு ஆத­ர­வ­ளிக்­கும் வித­மாக இளை­யர்­கள் அறு­வர் சமூக வளம் ஒன்றை உரு­வாக்க கைகோத்­துள்­ள­னர்.

பல்­க­லைக்­க­ழ­கங்­கள், பல­துறைத் தொழிற்­கல்­லூ­ரி­கள், தொழில்­நுட்­பக் கல்­விக் கழ­கம் ஆகி­ய­வற்­றில் பயி­லும் மாண­வர்­களும் வேலை செய்­யும் இளை­யர்­கள் என பல­தரப்­பி­ன­ரி­டம் இருந்து கதை­க­ளை­யும் கருத்­து­க­ளை­யும் சேக­ரிக்­கும் பணி­யில் குழு­வி­னர் ஈடு­பட்டு வரு­கின்­ற­னர்.

கல்வி, சமு­தாய, குடும்ப மேம்­பாட்டு துணை அமைச்­சர் சுன் சூலிங் இந்­தக் குழு­வுக்கு மதி­யுரை வழங்கி வரு­கி­றார்.

இளை­யர்­கள் கூறும் கதை­கள் ஒரு மின்­நூ­லாக தொகுக்­கப்­படும். இது மற்ற இளை­யர்­க­ளு­டன் பகிரப்­ப­ட­லாம்.

இளை­யர்­க­ளி­டம் மன­ந­லத்தை மேம்­ப­டுத்த விரும்­பிய திரு­மதி சுன், இந்­தத் திட்­டத்­திற்­கான யோச­னையை முன்­வைத்­தி­ருந்­தார். மனச்­சோர்­வால் பாதிக்­கப்­பட்­டும் உதவி பெற முன்­வ­ரா­தோ­ரைப் பற்­றியே தாம் அதி­கம் கவ­லைப்­ப­டு­வ­தாக அவர் சொன்­னார்.

'Project It'll Be Alright' என்று பெய­ரி­டப்­பட்­டுள்ள இந்­தத் திட்­டம், இளை­யர்­க­ளி­டையே மன­ந­லத்தை மேம்­ப­டுத்த விரும்­பும் சிங்­கப்­பூ­ரர்­களை ஒன்­றி­ணைக்­கிறது.

"ஒவ்­வொ­ரு­வ­ரும் சவால்­களை எதிர்­நோக்­கு­கின்­ற­னர். இதில் நம்­பிக்­கை­யும் உள்­ளது, ஏமாற்­ற­மும் உள்­ளது. சொற்­க­ளி­லும் நூல்­க­ளி­லும்­தான் நான் ஆறு­த­லைத் தேடு­கி­றேன். இதுவே எனது தனி­ இயல்பு," என்று திரு­மதி சுன் விவ­ரித்­தார்.

"உள்­ளூர் சூழ­லில் இளை­யர்­கள் பகிர்ந்­து­கொள்­ளக்­கூ­டிய கதை­கள் ஏரா­ளம் இருக்­கும் என நம்­பு­கி­றேன். வேலை தேடு­வது, உற­வு­முறை, கல்வி உள்­ளிட்ட பல விவ­கா­ரங்­கள் தொடர்­பில் நம்­மைச் சுற்­றி­யி­ருப்­ப­வர்­க­ளி­டம் இருந்து கதை­களை நாம் பெற்­றால் இத்­த­கைய விவ­கா­ரங்­களைச் சந்­திக்­கும் இளை­யர்­களுக்கு இந்­தக் கதை­கள் உதவி­யாக இருக்­கும்," என்­றார் திருமதி சுன்.

மன­ந­லப் பிரச்­சி­னை­யைச் சமா­ளிக்க உதவி பெற முன்­வரா­தோ­ருக்­குக் கூடு­தல் ஆதரவு தேவைப்­ப­டு­வ­தாக அவர் வலி­யு­றுத்­தி­னார்.

இது­கு­றித்து இளை­யர்­கள் பங்­க­ளிக்க முன்­வ­ரு­மாறு பிப்­ர­வரி 17ஆம் தேதி திரு­மதி சுன் ஃபேஸ்புக் பதிவு ஒன்றை வெளி­யிட்­டி­ருந்­தார். அதைத் தொடர்ந்து பல­ரும் தமக்கு மின்­னஞ்­சல் அனுப்­பி­ய­தோடு இந்­தத் திட்­டத்­தில் அங்­கம் வகிக்க சிலர் விருப்­பம் தெரி­வித்­துள்­ள­தாக திரு­மதி சுன் சொன்­னார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!