சிங்கப்பூரில் அடுத்த ஆண்டு ஐந்து நீண்ட வாரயிறுதிகள்

சிங்கப்பூரில் அடுத்த ஆண்டிற்கான பொது விடுமுறை பட்டியலை மனிதவள அமைச்சு வெளியிட்டுள்ளது. அடுத்த ஆண்டு ஐந்து நீண்ட வாரயிறுதிகள் இருக்கும். இவ்வாண்டு உள்ள நான்கு நீண்ட வாரயிறுதிகளைவிட அது ஒன்று அதிகம்.

அடுத்த ஆண்டு 11 பொது விடுமுறைகள் உள்ளன. அவற்றில் மூன்று விடுமுறைகள் ஞாயிற்றுக்கிழமைகளில் வரும். இரண்டு விடுமுறைகள் திங்கட்கிழமைகளிலும் ஒரு விடுமுறை வெள்ளிக்கிழமையிலும் வரும்.

எனினும், 2022ல் மே தினமும் நோன்புப் பெருநாளும் மே 1, 2 ஆகிய தேதிகளில் அடுத்தடுத்து வருவதால், அந்த நீண்ட வாரயிறுதி நான்கு நாட்களைக் கொண்டிருக்கும். அதாவது, அடுத்த ஆண்டு மே 1ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமையாக இருப்பதாலும் அதற்கு அடுத்த நாள் திங்கட்கிழமை பொது விடுமுறை நாளாக இருப்பதாலும் செவ்வாய்க்கிழமை, மே 3ஆம் தேதி விடுப்பு நாளாக இருக்கும்.

ஞாயிற்றுக்கிழமைகளிலும் வரும் மற்ற இரு பொது விடுமுறைகள் விசாக தினமும் கிறிஸ்மஸ் தினமும் ஆகும். திங்கட்கிழமை, அக்டோபர் 24ஆம் தேதி வரும் மற்றொரு விடுமுறை தீபாவளி. வெள்ளிக்கிழமை, ஏப்ரல் 15ஆம் தேதி புனித வெள்ளி ஆகும்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!