‘தமிழ் அருவி’ போட்காஸ்ட் போட்டி

ஆர்த்தி சிவ­ரா­ஜன்

தமிழ் மொழி விழா­வின் முதல் தமிழ் போட்­காஸ்ட் (podcast) நிகழ்ச்­சி­யான 'தமிழ் அருவி'யில் கலந்­து­கொள்ள ரமே­‌ஷ்­கு­மார் தன்­வின் முத­லில் தயங்­கி­னார். தெமா­செக் தொடக்­கக் கல்­லூ­ரி­யில் உயர்நிலை இரண்டாம் வகுப்பு மாண­வ­ரான இவ­ருக்கு இப்போட்டி ­யில் கலந்­து­கொள்ள ஊக்­கம் அளித்­தது அவ­ரின் தமிழ் ஆசி­ரி­யர். தமிழ் மொழி­யைப் பேசு­வ­தில் மாண­வர்­க­ளி­டையே தன்னம்­பிக்­கையை ஏற்­ப­டுத்­து­வ­தும் அவர்களின் எண்­ணங்­களை வெளிப்­ப­டுத்­து­வ­தற்­கும் அவர்­க­ளின் மொழித் திறன்­களை வளர்ப்­ப­தற்­கும் ஒரு தளத்தை உரு­வாக்­கு­வதே தமிழ் அரு­வி­யின் நோக்­கம் ஆகும்.

இந்­நி­கழ்ச்­சியை நினெ­மர் கம்­யு­னி­கே­‌ஷன்­சின் (Ninemer Communications) துணை இயக்கு நரான 30 வயது திரு­மதி இலக்­கியா செல்­வ­ராஜி தொகுத்து வழங்­கு­கி­றார். இப்­போட்­டி­யில் 30 உயர்­நி­லைப்­பள்­ளி­கள், தொடக்­கக் கல்­லூ­ரி­கள் மற்­றும் பல­து­றைத் தொழில்­கல்­லூ­ரி­க­ளி­லி­ருந்து ஏறத்­தாழ 110 மாண­வர்­கள் கலந்­து­ கொள்­கின்­ற­னர். மாண­வர்­க­ளுக்கு ஒரு தலைப்பு வழங்­கப்­படும். அத்­

த­லைப்­பில் இரண்டு நிமி­டங்­க­ளுக்கு அவர்­கள் பேச வேண்­டும். அவ்­வாறு பேசு­வதை அவர்­கள் காணொளி மூலம் பதிவு செய்து போட்டி ஏற்­பாட்­டா­ள­ருக்கு அனுப்ப வேண்­டும். அவற்றை 'தமிழ் அருவி 2021' என்­னும் இன்ஸ்­ட­கி­ராம் பக்­கத்­தில் பதி­வ­வேற்­று­வார் திரு­மதி இலக்­கியா. போட்­டி­யைச் சார்ந்த வெவ்­வேறு குறிப்­பு­களும் அப்­பக்­கத்­தில் கொடுக்­கப்­பட்டு வரு­கின்­றன. 110 மாண­வர்­களில், 10 மாண­வர்­கள் மட்­டுமே இறுதிச் சுற்­றுக்குத் தேர்ந்­தெ­டுக்­கப்­ப­டு­வர். அவர்­க­ளுள் ஒரு­வர் வெற்­றி­யா­ள­ராக அறி­விக்­கப்­ப­டு­வார்.

"இப்­போட்­டி­யின் மூலம் மாண­வர்­கள் இரண்டு சவால்­களை மேற்­கொள்­வார்­கள். முதல் சவால் பேச்­சுத் தமி­ழில் பேசு­வது. பேச்­சுத் தமி­ழில் பேசு­வது மிக­வும் எளி­தா­னது என்று பெரும்­பா­லான மக்­கள் நினைக்­க­லாம். ஆனால் போட்­டி­யா­ளர்­கள் அனை­வ­ருக்­கும் இது உண்­மை­யி­லேயே ஒரு சவா­லாக இருந்­தது. இரண்­டா­வது சவால் கொடுக்­கப்­பட்ட தலைப்பு களைப் பற்றி இயல்­பாக ஆராய்ச்சி மேற்­கொள்­வது. ஆழ­மான தலைப்­பு­களில் இரண்டு நிமி­டங்­க­ளுக்குப் பேசு­வது மிக­வும் சிர­மம். அவ்­விரு நிமி­டங்­க­ளுள் சொல்ல வரும் முக்­கிய தக­வல்­களை உள்­ள­டக்க வேண்­டும்" என்று கூறி­னார் திரு­மதி இலக்­கியா.

இந்த போட்­காஸ்ட் தொட­ரில் மற்­றோர் அங்­க­மும் இருக்­கிறது. இரண்டு நடு­வர்­க­ளு­டன் திரு­மதி இலக்­கியா பேசும் போட்­காஸ்ட்­டும் ஒவ்­வொரு சனிக்­கி­ழமை அன்று இன்ஸ்­ட­கி­ராம் பக்­கத்­தில் வெளி­யி­டப்­பட்டு வரு­கிறது. தேசிய நூலக வாரி­யத்­தின் தமிழ்­மொழி சேவை­கள் பிரி­வின் மூத்த தலை­வர் திரு அழ­கியபாண்­டி­யன் முதல் தலை­வ­ரா­கச் செயல்­படு கிறார். ஊட­கத்­துறை வல்­லு­ந­ரான திரு­மதி காமாட்சி அபி­ம­னன் இரண்­டா­வது நடு­வ­ரா­வார். மாண­வர்­க­ளுக்கு வழி­காட்­டும் வகை­யில் இரு நடு­வர்­களும் பல

குறிப்­பு­கள் தரு­கின்­ற­னர்.

"பல ஆசி­ரி­யர்­களும் மாண­வர்­களும் இந்­நி­கழ்ச்சி ஒவ்­வோர் ஆண்­டும் நடை­பெற வேண்­டும் என்று விரும்­பு­கி­றார்­கள். தமி­ழில் பேசு­வதை ஊக்­கு­விப்­ப­தற்­குப் பேச்­சும் எழுத்­தும் சார்ந்த பல்­வேறு போட்­டி­கள் நடத்­த­லாம். தமிழ் மொழி­யில் சிறந்து விளங்­குவதே அப்­போட்­டி­க­ளின் நோக்­கம். ஆனால் சிறப்பு என்ற அம்­சத்­திற்கு முன்பு, தமிழ்ப் பயன்­பாடு என்ற அம்­சம் ஒன்று இருக்­கிறது. வழக்கு தமி­ழில் பேசு­வ­தற்­கான போட்டித் தளங்­கள் அதி­கம் இல்லை. பேச்­சுத்­த­மி­ழில் பேசும் இயல்பை மாண­வர்­க­ளி­டையே தூண்ட வேண்­டும் என்று நினைக்­கி­றேன். கண்­டிப்­பாக தமிழ் அருவி போன்ற பல்­வேறு முயற்­சி­களில் ஈடு­ப­டு­வேன்" என்றார் திரு­மதி இலக்­கியா.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!