40 பேருக்கு கிருமித்தொற்று

அனைவரும் வெளிநாட்டிலிருந்து வந்தவர்கள்

சிங்­கப்­பூ­ரில் நேற்று மதி­யம் வரை 40 பேருக்கு கிரு­மித் தொற்று இருப்­பது உறுதி செய்­யப்­பட்­டது.

இவர்­க­ளு­டன் சேர்த்து சிங்­கப்­பூ­ரில் பாதிக்­கப்­பட்­ட­வர்­க­ளின் எண்­ணிக்கை 61,006க்கு அதி­க­ரித்­துள்­ளது.

அனை­வ­ரும் வெளி­நாட்­டி­லி­ருந்து வந்­த­வர்­கள். சிங்­கப்­பூர் வந்­த­தும் அவர்­க­ள் தனி­மைப்­ப­டுத்­திக்­கொள்ள உத்­த­ர­வி­டப்­பட்­ட­னர் என்று நேற்று வெளி­யிட்ட அறிக்­கை­யில் சுகா­தார அமைச்சு தெரி­வித்­தது.

அவர்­களில் 12 பேர் சிங்­கப்­பூ­ரர்­கள் அல்­லது நிரந்­த­ர­வா­சி­கள். பாதிக்­கப்­பட்­ட­வர்­களில் ஆறு பணிப்­பெண்­களும் அடங்­கு­வர் என்று அமைச்சு குறிப்­பிட்­டது.

உள்­ளூ­ரில் யாரும் பாதிக்­கப்­ப­ட­வில்லை. வெளி­நாட்டு ஊழி­யர் தங்­கு­மி­டங்­க­ளி­லும் தொற்­றுச் சம்­ப­வங்­கள் பதி­வா­க­வில்லை.

கிரு­மித்­தொற்­றால் பாதிக்­கப்­பட்­ட­வர்­க­ளின் மேல் விவ­ரங்­கள் பின்­னர் வெளி­யி­டப்­படும் என்று நேற்று மதி­யம் வெளி­யிட்ட அறிக்­கை­யில் அமைச்சு கூறி­யது.

சனிக்­கி­ழமை அன்று உள்­ளூர் கிரு­மிப் பர­வ­லில் பாதிக்­கப்­பட்ட ஐவ­ரில் ஒரு­வர் 45 வயது நிரந்­த­வாச உரிமை பெற்ற ஆட­வர் ஆவார். அர­சாங்க தனி­மைப்­ப­டுத்­தும் இடங்­களில் தங்­கி­யி­ருந்த தமது தாயாரை அவர் கவ­னித்து வந்­தார்.

தடுப்­பூசி போட்ட பிற­கும் அவருக்கு கிரு­மித்­தொற்று ஏற்­பட்­டுள்­ளது.

பிப்­ர­வரி 26ஆம் தேதி அவ­ருக்கு முதல் தடுப்­பூசி போடப்­பட்­டுள்­ள­தா­க­வும் மார்ச் 19ஆம் தேதி அவர் 2வது தடுப்­பூசி போட்­டுக் கொண்­ட­தா­க­வும் அமைச்சு தெரி­வித்­தது.

ஏப்­ரல் 15ஆம் தேதி அவ­ரது பெற்­றோர் சிங்­கப்­பூர் வந்­த­னர். அப்­போது அவ­ரது தந்­தைக்கு கிரு­மித் தொற்று இருப்­பது பரி­சோ­த­னை­யில் தெரிய வந்­த­தால் மருத்­து­வ­ம­னை­யில் சேர்க்­கப்­பட்­டார்.

அவ­ரது தாயார் கிரு­மித்­தொற்­றால் பாதிக்­கப்­பட்­ட­வ­ரு­டன் நெருக்­க­மாக இருந்­த­தால் ஏப்­ரல் 16ஆம் தேதி­யி­லி­ருந்து ஏப்­ரல் 30ஆம் தேதி வரை தனி­மை­யில் இருக்க உத்­த­ர­வி­டப்­பட்­டார்.

இந்­தி­யா­வி­லி­ருந்து வந்த அதே விமா­னத்­தில்­தான் தொற்று இருந்த சார்ந்து இருப்­போர் அட்டை வைத்­தி­ருந்த இரு­வர் பய­ணம் செய்­த­னர்.

தனி­மைப்­ப­டுத்­தும் வசிப்­பி­டத்­தில் தங்­கி­யுள்ள தாயாரை கவ­னித்­துக் கொள்ள விரானா ஷிப்­பிங் நிறு­வ­னத்­தில் மூத்த நிர்­வா­கி­யா­கப் பணி­யாற்­றும் நிரந்­த­ர­வா­சி­யான அவ­ரது மக­னி­டம் அமைச்சு கேட்­டுக் கொண்­டது.

அவ­ரது தாயா­ருக்கு ஏப்­ரல் 15, 17 தேதி­களில் நடத்­தப்­பட்ட பரி­சோ­த­னை­யில் தொற்று இல்லை என்­பது ெதரிய வந்­தது. ஆனால் வெள்­ளிக்­கி­ழமை அவ­ருக்கு மூக்­க­டைப்பு ஏற்­பட்­டது.

இதை­ய­டுத்து மறு­நாள் சனிக்­கி­ழமை அன்று தேசிய தொற்­று­நோய் நிலை­யத்­தில் அவர் அனு­ம­திக்­கப்­பட்­டார்.

இதற்­கி­டையே கொவிட்-19 தடுப்­பூ­சி­க­ளுக்கு பெரும்­பா­லான சம­யங்­களில் கிரு­மித்­தொற்று ஏற்­ப­டு­வ­தைத் தடுக்­கும் ஆற்­றல் உள்­ளது என்ற அமைச்சு, தனிப்­பட்ட சம்­ப­வங்­களில் மீண்­டும் தொற்று ஏற்­ப­டக்­கூ­டிய சாத்­தி­ய­முள்­ளது என்றும் கூறி­யது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!