தனக்கென தனிப்பாதை வகுத்து இலக்கை எட்டிய விஷ்ணதுளசி

இந்து இளங்­கோ­வன்

 

சிறு வய­தி­லி­ருந்தே உயி­ரி­யல் பாடத்­தில் அதிக ஆர்­வம் கொண்ட விஷ்­ண­து­ளசி மணி­வண்­ணன், 23, உயர்­நி­லைப்­பள்ளி மாணவியாக இருந்தபோதே சிங்­கப்­பூர் தேசிய பல்­க­லைக்­க­ழ­கத்­தில் உயி­ரி­யல் துறையில் படித்து பட்டம் பெற்று, எதிர்­கா­லத்­தில் உயி­ரி­யல் ஆராய்ச்­சி­யா­ள­ராக வேண்­டும் என்ற

கன­வு­க­ளு­டன் இருந்­தார்.

ஜிசிஇ சாதா­ர­ண­நிலை தேர்­வுக்­குப் பிறகு பெற்­றோ­ரின் விருப்பத்துக்கு இணங்க தொடக்கக்­கல்­லூ­ரி­யில் சேர்ந்து தனது கல்விப் பய­ணத்தை அவர் தொடர்ந்­தார்.

தொடக்­கல்­லூ­ரிக்­குப் பிறகு சிங்­கப்­பூர் தேசிய பல்­க­லைக்­க­ழ­கத்­தில் சேர்ந்து பட்டப் படிப்பைத் தொடரலாம் என்று ஆவ­லு­டன் காத்­தி­ருந்த விஷ்­ண­து­ள­சிக்கு ஏமாற்­றத்தை தந்­தது அவ­ரது ஜிசிஇ மேல்­நி­லைத் தேர்வு முடி­வு­கள்.

இத்­த­கைய சூழ்­நிலை ஏற்­ப­டும்­போது பெரும்­பா­லான மாண­வர்­கள் தங்­க­ளுக்­குக் கிடைக்­கும் ஏதே­னும் ஒரு பல்­க­லைக்­க­ழ­கத்­திற்­குச் சென்று கல்­வி­யைத் தொடர்­வர்.

ஆனால் ஓர் ஆண்டு இடை­வெ­ளிக்­குப் பிறகு விஷ்­ண­து­ளசி தெமா­செக் பல­து­றைத் தொழிற்

கல்­லூ­ரி­யில் உயி­ரி­யல் தொழில்­நுட்­பத் துறை­யில் சேர்ந்து மூன்று ஆண்­டு­க­ளுக்­குப் படித்து பட்­ட­யச் சான்­றி­தழ் பெற்­றார்.

பல­து­றைத் தொழிற்­கல்­லூரி முதல் ஆண்­டில் பயின்­ற­போது விஷ்­ண­து­ளசிக்கு 20 வயது. சக மாண­வர்­க­ளைவிட அவருக்கு வயது அதிகம். இந்த வயது வித்­தி­யா­சம் ஆரம்­பத்­தில் தமது தோல்­வியை அடிக்­கடி நினை­வு­ப­டுத்­தும் ஒன்­றாக இருந்­த­தாக இவர் கூறுகிறார்.

தற்­போது இவ­ருக்கு 23 வய­தா­கிறது. உப­கார சம்­ப­ளத்­து­டன் சிங்­கப்­பூர் தேசிய பல்­க­லைக்­க­ழ­கத்­தில் மானு­ட­வி­யல், அறி­வி­யல் பள்­ளி­யில் கல்­வியைத் தொடங்க தயா­ராக இருக்­கி­றார்.

"வாழ்க்­கை­யில் ஒவ்­வொ­ரு­வ­ரும் வெவ்­வேறு பய­ணங்­களை மேற்­கொள்­கின்­ற­னர். உங்­கள் இலக்­கு­களை அடைய நீங்­கள் எவ்­வ­ளவு நேரம் எடுத்­துக்­கொண்­டா­லும்

பர­வா­யில்லை. உங்­கள் பாதையை மற்­றொரு நப­ரின் பாதையுடன் ஒப்­பிட வேண்­டாம் என்­பதே நான் கற்­றுக்­கொண்ட மிகப் பெரிய பாடம்," என்­றார் விஷ்­ண­து­ளசி.

"தொடக்­கக் ­கல்­லூரி சில­ருக்கு பொருத்­த­மா­ன­தாக இருக்­காது, அதே­போல் பல­து­றைத் தொழிற்­கல்­லூ­ரி­யும் சில­ருக்கு பொருத்­த­மாக இருக்­காது.

"பல்­க­லைக்கழ­கத்­திற்­குச் செல்ல விரும்­பி­னால் தொடக்­கக் கல்­லூரி பாதையை எடுக்க வேண்­டும் என்று பலர் என்­னி­டம் சொன்­னார்­கள்.

"இது எந்த அள­விற்கு உண்மை என்­பது எனக்கு தெரி­ய­வில்லை. ஆனால், விருப்­ப­மில்­லாத காரி­யத்­தில் இறங்­கி­னால் அதற்­கான முழு உழைப்பை தரு­வ­தற்­கான முனைப்பு இருக்­காது. நான் பல­து­றைத் தொழிற்­கல்­லூ­ரிக்­குச் சென்­றது நான் எடுத்த மிகச் சிறந்த முடி­வாகக் கருதுகிறேன்." என்று சொன்­னார் விஷ்­ண­து­ளசி.

அனிஸ் லார்பி ஆய்­வ­கத்­தில் சிங்­கப்­பூர் இம்­யூ­னா­லஜி நெட்­வொர்க்கில்(A * STAR) வேலை அனு­ப­வப் பயிற்­சி பெற்ற விஷ்­ண­து­ளசி உயி­ரி­யல் ஆராய்ச்சி வழி பல நல்ல மாற்­றங்­களை செயல்

­ப­டுத்­த­லாம் என்று நம்­பு­கி­றார். குறிப்­பாக, சிங்­கப்­பூ­ரில் முதி­ய­வர்­க­ளின் எண்­ணிக்கை அதி­க­ரிக்கும் நிலையில், அவர்­க­ளுக்கு உத­வும் வகை­யில் மருத்­துவ ஆராய்ச்­சி­யில் ஈடு­பட விரும்­பும் இவ­ருக்கு தெமா­செக் பல­து­றைத் தொழிற்கல்­லூரி, லீ குவான் இயூ விரு­தும் $700 ரொக்­க­மும் வழங்­கி­யது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!