கொவிட்-19 கிருமிப் பரவலைத் தடுக்க பாதுகாப்பை வலியுறுத்தும் வழிபாட்டுத் தலங்கள்

கடந்த வெள்­ளிக்­கி­ழமை, புதிய கொவிட்-19 கிரு­மித்­தொற்று கட்­டுப்­பா­டு­கள் அறி­விக்­கப்­பட்­ட­தில் அதனை முறை­யாக செயல்­ப­டுத்­து­வ­தில் வழி­பாட்­டுத் தலங்­கள் ஆயத்த நிலை­யில் உள்­ளன.

புதிய மாற்­றங்­கள் ஜூன் 13ஆம் தேதி வரை­யில் நீடிக்­கும். கோயில்­களில் எந்­நே­ர­மும் அதி­க­பட்­ச­மாக 50 பேர் மட்­டும் அனு­ம­திக்­கப்­ப­டு­வர்.

குழு­வாகச் சென்­றால் இரண்டு பேருக்கு மேல் இருக்­கக்­கூ­டாது.குழுக்­க­ளி­டையே 1 மீட்­டர் சமூக இடை­வெளி இருப்­ப­தும் முக்­கி­யம்.முதி­ய­வர்­கள், நாள்­பட்ட அல்­லது சுவாச தொடர்­பான நோய் கொண்­ட­வர்­கள், கர்ப்­பிணி பெண்­கள், சிறு­வர்­கள் முடிந்­த­வரை வீட்­டி­லி­ருந்து இறை வழி­பாட்­டில் ஈடு­பட ஊக்­கு­விக்­கப்­ப­டு­கின்­ற­னர்.

கோயில்­களில் சம­யம் தொடர்­பில்­லாத எல்லா நட­வ­டிக்­கை­க­ளும் ரத்து செய்­யப்­படும்.

“அப்­படி இரண்­டுக்­கும் மேற்­பட்ட குடும்ப உறுப்­பி­னர்­கள் கோயி­லுக்­குள் நுழைந்­தால், இரு இரு குழுக்­க­ளாக தள்ளி நின்று சமூக இடை­வெ­ளியை கடைப்­பி­டிக்­கு­மாறு கேட்­டுக்­கொள்­கி­றோம்,” என்று கூறி­னார் இந்து அறக்­கட்­டளை வாரிய தலைமை நிர்­வாக அதி­காரி திரு த.ராஜ­சே­கர்.

அர்ச்­ச­னை­கள் குறிப்­பிட்ட நேரங்­களில் மட்­டும் நடக்­கும். முன்­கூட்­டியே பக்­தர்­கள் அர்ச்­சனை சீட்­டு­களை வாங்கி அவற்றை குறிப்­பிட்ட அர்ச்­சனை பெட்­டி­களில் வைத்­திட, காலை அல்­லது மாலை நேரங்­களில் அதற்­கான பூஜை நிக­ழும்.

இந்து அறக்­கட்­டளை வாரிய நிர்­வா­கத்­தின் கீழ் இயங்­கும் 4 கோயில்­களை தவிர்த்து, மற்ற இந்து கோயில்­க­ளுக்­கும் இந்த வழி­மு­றை­கள் பரிந்­து­ரைக்­கப்­படும்.

வழக்­க­மாக கோயி­லுக்­குள் நுழைய தங்­க­ளது அடை­யாள அட்­டையை பயன்­ப­டுத்­தும் முதி­ய­வர்­கள், இனி ‘டிரேஸ்­டு­கெ­தர்’ சாத­னைத்தை அல்­லது செய­லியை பயன்­ப­டுத்­து­வது உகந்தது.

பள்­ளி­வா­சல்­க­ளி­லும் தேவா­ல­யங்­க­ளி­லும் பக்­தர்­கள் எண்­ணிக்கை குறைக்­கப்­பட்­டுள்­ளது. தற்­போது கொவிட்-19 பரி­சோ­த­னை­யின்றி, 50 பேர் வரை இத்­த­லங்­கள் அனு­ம­திக்­கும். பாடல் பாடு­வ­தும் துளை­யி­சைக்­க­ருவி வாசிப்­ப­தும் இங்கு ரத்­து­செய்­யப்­பட்­டுள்­ளது.

“பள்­ளி­வா­சல்­களில் ஐந்து தொழுகை நேரங்­கள் இருக்க, எந்­நே­ரத்­தி­லும் 50 பேர் மட்­டுமே அனு­ம­திக்­கப்­ப­டு­வர். அவர்­கள் முன்­கூட்­டியே இணை­யத்­தில் குறிப்­பிட்ட தொழுகை நேரத்­திற்கு பதி­வு­செய்­தி­ருக்க வேண்­டும்,” என்று விளக்­கி­னார் ஜாமிஆ (சூலியா) பள்­ளி­வா­ச­லின் நிர்­வா­கக் குழுத் தலை­வர் திரு ‌ஷேக் ஃபக்­ரு­தின்.

பள்­ளி­வா­ச­லின் ஃபேஸ்புக், யூடி­யூப் பக்­கங்­க­ளி­லும் வெள்­ளிக்­கி­ழமை தொழுகை நேர­டி­யாக ஒளி­ப­ரப்­பப்­படும் என்று அவர் சொன்­னார். “மக்கக­ளின் பாது­காப்பைக் கருதி, ஞாயிறு ஆரா­த­னை­களை முழு­மை­யாக இணை­யத்­திற்கு கொண்­டு செல்ல எண்­ணு­கி­றோம்.

‘ஸும்’ மெய்­நி­கர் சந்­திப்புத் தளம், ‘யூடி­யூப்’ வாயி­லாக பக்­தர்­கள் ஆரா­த­னை­யில் இணை­ய­லாம்,” என்று தெரி­வித்­தார் ஈ‌ஷு­னில் அமைந்­துள்ள ‘லைஃப் சென்­டர்’ (சிமிர்னா அசெம்­பிளி) தேவா­ல­யத்­தின் போத­கர் சாமு­வேல் கிப்ட் ஸ்டீ­பன்.

இந்­தியத் தேவா­ல­யங்­கள் கூட்­ட­ணி­யில் இடம்­பெ­றும் 109 தேவா­ல­யங்­களும் இணை­யம் வழி தங்­க­ளது ஆரா­த­னை­களை நடத்த ஆலோ­சித்து வரு­வ­தா­க­வும் அவர் குறிப்­பிட்­டார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!