குவாமில் 2 மாத பயிற்சிபெறும் சிங்கப்பூர் போர்விமானங்கள்

குவாமில் 2 மாத பயிற்சிபெறும் சிங்கப்பூர் போர்விமானங்கள்

1 mins read
e4e4f390-7281-470e-af1f-6e3e0759c249
அமெ­ரிக்­காவின் குவா­ம் தீவில் உள்ள ஆண்­டர்­சன் விமா­னத் தளத்­துக்கு சிங்கப்பூர் போர்விமானங்கள் அனுப்பப்பட்டுள்ளன.படம்: சிங்கப்பூர் ஆகாயப் படை -

சிங்­கப்­பூர் ஆகா­யப் படை­யின் போர்­வி­மா­னங்­கள், இரண்டு மாதப் பயிற்­சிக்­காக குவா­முக்கு அனுப்­பப்­பட்­டுள்­ளன.

ஆகா­யப் படை­யின் எஃப்-15எஸ்ஜி, எஃப்-16 ரக போர்­ விமானங்­கள், ஆகி­ய­வற்­று­டன் முன்­கூட்­டியே எச்­ச­ரிக்கை விடுக்­கும் ஜி550 ரக விமா­னங்­களும் அங்கு அனுப்­பப்­பட்­டுள்­ளன.

சிங்­கப்­பூர் ஆகா­யப் படை அத்­த­க­வலை அதன் ஃபேஸ்புக் பக்­கத்­தில் நேற்று வெளி­யிட்­டது.

அமெ­ரிக்­கத் தீவான குவா­மில் உள்ள ஆண்­டர்­சன் விமா­னத் தளத்­துக்கு ஆண், பெண் போர்­வி­மா­னி­கள் சென்­றுள்­ள­தா­க­வும் தங்­கள் திறன்­களை மேம்­ப­டுத்திக் கொள்ள அவர்­கள் வரும் நாட்­களில் பயிற்சி பெறு­வர்­ என்­றும் ஆகா­யப் படை குறிப்­பிட்­டது.

சிங்­கப்­பூர் ஆகா­யப் படை­யி­னர், அமெ­ரிக்­கக் கடற்­ப­டை­யின் விஏ­கியூ132 பிரி­வு­ட­னும் பயிற்சி பெறு­வார்­கள். அந்த கடற்­ப­டைப் பிரி­வி­னர் மின்­னி­யல் போர்­வி­மா­னங்­களை இயக்­கு­வ­தா­கக் கூறப்­பட்­டது. கொவிட்-19 பர­வ­லைக் கருத்­தில் கொண்டு மருத்­து­வப் பாது­காப்பு நட­வ­டிக்­கை­கள் எடுக்­கப் பட்­டுள்­ள­தா­க­வும் ஆகாயப் படை தெரிவித்தது.