‘சினோவேக்’ தடுப்பூசிக்கு சிங்கப்பூர் சிறப்பு அனுமதி

சீனாவின் ‘சினோவேக்’ கொவிட்-19 தடுப்பூசியை சிறப்பு அனுமதி என்னும் ஏற்பாட்டின்கீழ் சிங்கப்பூரில் பயன்படுத்த சுகாதார அமைச்சு அனுமதி வழங்கி உள்ளது.

இந்தத் தடுப்பூசிக்கு அவசரப் பயன்பாட்டுக்கான அங்கீகாரத்தை உலக சுகாதார நிறுவனம் வழங்கியதைத் தொடர்ந்து சிங்கப்பூரின் அறிவிப்பு வெளியாகி உள்ளது. தடுப்பூசி தொடர்பான ஆக அண்மைய விவரங்களை ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் செய்தித்தாள் கேட்டபோது சினோவேக் தடுப்பூசி ‘எஸ்ஏஆர்’ எனப்படும் சிறப்பு அணுகுமுறை வழியாக அனுமதிக்கப்படும் என சுகாதார அமைச்சு கூறியது.

இதற்கான உரிமத்தை தனியார் சுகாதாரப் பராமரிப்பு நிலையங்கள் எவ்வாறு பெறலாம் என்பதற்கான விரிவான தகவல்கள் வரும் நாட்களில் வெளியிடப்படும் என்றும் அமைச்சு தெரிவித்தது.
சிங்கப்பூரில் தடுப்பூசி போட்டுக்கொள்ளும் மக்களின் எண்ணிக்கையைக் கூடுமான அளவுக்கு வேகமாக அதிகரிக்கும் வண்ணம் சிறப்பு அணுகுமுறை ஏற்பாடு மூலம் இதர வகை கொவிட்-19 தடுப்பூசிகள் இங்கு வர அனுமதிக்கப்படும் என திங்கட்கிழமை அமைச்சு கூறியது.

ஜான்சன் அண்ட் ஜான்சன், ஆக்ஸ்ஃபர்ட் ஆஸ்ட்ராஸெனகா, சினோஃபாம் ஆகியவை இந்த இதர ஊசி மருந்துகளில் அடங்கும். தனியார் சுகாதாரப் பராமரிப்புத் துறை மூலம் அவை பெறப்படும்.

சிறப்பு அணுகுமுறை ஏற்பாடு என்பது பதிவு செய்யப்படாத மருந்துகளை இறக்குமதி செய்து விநியோகிக்க அனுமதிக்கும் இப்போதைய நடைமுறையாகும். சிங்கப்பூரில் ஏற்கெனவே இரு நிறுவனங்களின் தடுப்பூசிக்கு சுகாதார அமைச்சு அங்கீகாரம் வழங்கி இருக்கிறது. ஃபைசர் பயோஎன்டெக், மொடர்னா ஆகிய அந்த இரண்டு ஊசி மருந்துகளும் தேசிய தடுப்பூசித் திட்டத்தில் பயன்படுத்தப்படுகின்றன.

பல்வேறு மருத்துவ காரணங்களால் 30,000க்கும் மேற்பட்டோர் இவ்விரு தடுப்பூசிகளையும் போட்டுக்கொள்ள முடியவில்லை. அதனால் வேறு நாடுகளில் அனுமதிக்கப்பட்டுள்ள தடுப்பூசிகளைப் போட்டுக்கொள்ளும் தெரிவு இக்குறிப்பிட்ட பிரிவினருக்கு வழங்கப்படலாம் என்று நிபுணர்கள் கூறியுள்ளனர்.

சிறப்பு ஏற்பாட்டின்கீழ் தனியார் துறைக்கு அனுமதிக்கப்பட்டாலும் சினோவேக் தடுப்பூசி சிங்கப்பூரின் தேசிய தடுப்பூசித் திட்டத்தில் இடம்பெறவில்லை என்று அமைச்சு வலியுறுத்தி உள்ளது. அதனால், கொவிட்-19 தடுப்பூசி தொடர்பில் ஏற்படும் காயங்களுக்கு நிதியுதவி வழங்கும் திட்டத்தில் இது இடம்பெறவில்லை என்றும் அது குறிப்பிட்டுள்ளது.

“சினோவேக் தடுப்பூசி மருந்து ஏற்கெனவே சிங்கப்பூருக்கு வந்து விட்டது. தற்போது கைவசம் உள்ள 200,000 முறை போடக்கூடிய அந்த மருந்தை தனியார் சுகாதாரப் பராமரிப்பு நிலையங்கள் பெறுவதற்கான சாத்தியம் குறித்து ஆராய்ந்து வருகிறோம். இதன் விலை, சிறப்பு அனுமதி ஏற்பாட்டின்கீழ் இதைப் போட்டுக்கொள்ள முன்வருவோருக்கான பாதுகாப்பு போன்ற அம்சங்கள் தொடர்பான ஆய்வுகளும் நடைபெறுகின்றன,” என்று ஊடகங்களிடம் அமைச்சு விளக்கியது.

உலக சுகாதார நிறுவனம் நேற்று தடுப்பூசிக்கான அவசரப் பயன்பாட்டு பட்டியலில் சினோவேக் தடுப்பூசியைச் சேர்க்க அனுமதி வழங்கியது.
சீனாவின் மற்றொரு தடுப்பூசி யான ‘சினோஃபார்ம்’ இந்நிறு வனத்தின் அனுமதியை ஏற் கெனவே பெற்றுவிட்டது.

சினோவேக்கிற்கு அனுமதி வழங்கப்பட்டாலும் சில சான்றுகளும் தரவுகளும் இன்னும்தேவைப்படுவதாக நிறுவனத்தின் நிபுணர்கள் கூறி இருந்தனர்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!