இயோன் ஆர்ச்சர்ட்டில் உள்ள ஃபோர் லீவ்ஸ் கடையின் ஊழியர்கள் தனிமைப்படுத்தப்பட்டனர்

இயோன் ஆர்ச்­சர்ட்­டில் உள்ள ஃபோர் லீவ்ஸ் கேக் கடை­யின் அனைத்து ஊழி­யர்­களும் தனி­மைப்­ப­டுத்­தப்­பட்­டுள்­ள­னர். அங்கு பணி­பு­ரி­யும் ஒரு­வ­ருக்கு

கொவிட்-19 கிரு­மித்­தொற்று ஏற்­பட்­டி­ருப்­பது நேற்று முன்­தி­னம் உறு­திப்­ப­டுத்­தப்­பட்­டதை அடுத்து இந்த நட­வ­டிக்கை எடுக்­கப்­பட்­டுள்­ளது.

பாதிக்­கப்­பட்ட ஊழி­யர் 35 வயது மலே­சி­யப் பெண் என்று தெரி­விக்­கப்­பட்­டது. கடந்த சனிக்­கி­ழ­மை­யன்று அவ­ருக்கு காய்ச்­சல், இரு­மல், தொண்டை வலி, மூக்குச் சளி ஆகி­யவை ஏற்­பட்­டது. அவர் கடந்த திங்­கட்­கி­ழ­மை­யன்று மருத்­து­வ­ரி­டம் சென்­றார்.

அவ­ருக்கு கொவிட்-19 மருத்­து­வப் பரி­சோ­தனை நடத்­தப்­பட்­ட­தா­க­வும் அவ­ருக்­குக் கிரு­மித்­தொற்று ஏற்­பட்­டது உறு­தி­யா­ன­தும் அவர் உட­ன­டி­யா­கத் தனி­மைப்­

ப­டுத்­தப்­பட்­டார்.

பா­திக்­கப்­பட்ட ஊழி­யர் கடந்த மாதம் இறு­தி­யில் அங் மோ கியோ ஹப்­பில் உள்ள ஃபோர் லீவ்ஸ் கிளை­யில் பயிற்சி பெற சென்­ற­தா­க­வும் துப்­பு­ர­வுப் பணி­க­ளுக்­காக அந்­தக் கடை ஒருநாள் முழு­வ­தும் மூடப்­பட்­ட­தா­க­வும் தெரி­விக்­கப்­பட்­டது.

முன்­னெச்­ச­ரிக்கை நட­வ­டிக்­கை­யாக அங்கு வேலை செய்­யும் அனைத்து ஊழி­யர்­க­ளுக்­கும் கொவிட்-19 மருத்­து­வப் பரி­சோ­தனை நடத்­தப்­படும்.

இயோன் ஆர்ச்­சர்ட்­டில் உள்ள ஃபோர் லீவ்ஸ் கடையை சுத்­தப்­

ப­டுத்த துப்­ப­ர­வுப் பணி­யில் நிபு­ணத்­து­வம் கொண்ட நிறு­வ­னத்­தின் சேவை நாடப்­பட்­ட­தாக ஃபோர் லீவ்ஸ் நிறு­வ­னத்­தின் மூத்த மேலா­ளர் திரு கோஜி தனாபே தெரி­வித்­தார்.

ஃபோர் லீவ்­ஸின் இயோன் ஆர்ச்­சர்ட் கிளை நேற்று முன்­

தி­னத்­தி­லி­ருந்து மூடப்­பட்­டி­ருப்­ப­தாக அவர் கூறி­னார்.

பாதிக்­கப்­பட்ட ஊழி­யர் அங் மோ கியோ ஹப்­பில் உள்ள ஃபோர் லீவ்ஸ் கடைக்­குச் சென்ற 14 நாட்­க­ளுக்கு மேலா­கி­விட்­ட­தால் அங்கு பணி­பு­ரி­யும் ஊழி­யர்­க­ளைத் தனி­மைப்­ப­டுத்த தேவை­யில்லை என்று சுகா­தார அமைச்சு தெரி­வித்­தி­ருப்­ப­தாக திரு தனாபே கூறி­னார்.

இதற்­கி­டையே, உணவு மூலம் கொரோனா கிரு­மிப் பர­வல் குறித்து வாடிக்­கை­யா­ளர்­கள் கவ­லைப்­ப­டத் தேவை­யில்லை என்று சிங்­கப்­பூர் தேசிய பல்­க­லைக்­க­ழ­கத்­தின் சோ சுவீ ஹோக் பொது சுகா­தா­ரப் பள்­ளி­யைச் சேர்ந்த டாக்­டர் ரேனர் டான் தெரி­வித்­துள்­ளார்.

உணவு மற்­றும் உண­வுப் பொட்­லங்­கள் வழி­யாக கொவிட்-19 கிருமி பர­வு­வ­தற்­கான ஆதா­ரம் இல்லை என்று அவர் கூறி­னார்.

கடை ஊழி­யர்­க­ளி­ட­மி­ருந்து வாடிக்­கை­யா­ளர்­க­ளுக்கு கொவிட்-19 கிருமி பர­வும் சாத்­தி­யம் குறைவு என்­ற­போ­தி­லும் வாடிக்­கை­யா­ளர்­கள் தங்­கள் உடல்­நி­லை­யைக் கண்­கா­ணிக்க வேண்­டும் என்­றார் டாக்­டர் டான்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!