அதிகமான வெளிநாட்டு ஊழியர்கள், பணிப்பெண்களுக்கு நுழைவு அனுமதி

அதி­க­மான வெளி­நாட்டு ஊழி­யர்­களும் இல்­லப் பணிப்­பெண்­களும் வேலைக்­காக சிங்­கப்­பூர் வர விரை­வில் அனு­ம­திக்­கப்­ப­டு­வர் என்று வர்த்­தக, தொழில் அமைச்­சர் கான் கிம் யோங் தெரி­வித்துள்ளார்.

"இது, கொவிட்-19 பர­வல் தொடங்­கி­ய­தில் இருந்து நமது நிறு­வ­னங்­கள் எதிர்­கொண்டு வரும் பெரும் நெருக்­க­டி­யைத் தணிக்­கும். குடும்ப உறுப்­பி­னர்­கள் மீண்­டும் ஒன்­றி­ணை­ய­வும் அவர்­க­ளின் இல்லப் பணிப்­பெண்­கள் மீண்­டும் வந்து சேர­வும் இந்­ந­ட­வ­டிக்கை உத­வும்," என்று அமைச்­சர் கான் சொன்­னார்.

வெளி­நாட்டு ஊழி­யர்­கள் பாது­காப்­பான முறை­யில் சிங்­கப்­பூ­ருக்கு அழைத்து வரப்­ப­டு­வதை அர­சாங்­கம் எவ்­வாறு உறு­தி­செய்­யும் என்று அவ­ரி­டம் கேட்­கப்­பட்­டது.

அதற்கு, முன்­னெச்­ச­ரிக்கை நட­வ­டிக்­கை­களை வலுப்­ப­டுத்த மனி­த­வள அமைச்­சும் வர்த்­தக, தொழில் அமைச்­சும் பிற அமைச்சு­களும் இணைந்து பணி­யாற்றி வரு­வ­தாக அமைச்சர் கான் பதி­ல் உரைத்தார்.

இருப்­பி­னும், அதி­க­மான வெளி­நாட்டு ஊழி­யர்­களை சிங்­கப்­பூ­ருக்கு வர அனு­ம­திப்­பது என்­பது அவர்­கள் நாட்­டின் கொவிட்-19 தடுப்­பூசி விகி­தத்­தை­யும் அங்கு நில­வும் கொரோனா சூழ­லை­யும் பொறுத்­தது என்று கொவிட்-19 தொற்­றுக்­கெ­தி­ரான அமைச்­சு­கள்­நிலை பணிக்­கு­ழு­வின் இணைத் தலை­வருமான திரு கான் கூறி­னார்.

"ஆகை­யால், வெளி­நா­டு­களில் இருந்து கொவிட்-19 பாதிப்பு வரா­மல் தடுக்க, நாட்­ட­ள­வில் கிருமிப் பர­வல் தடுப்பு நட­வ­டிக்­கை­களை அந்த ஊழி­யர்­க­ளின் நாடு­க­ளி­லும் அறி­மு­கப்­ப­டுத்த அந்­நா­டு­க­ளு­டன் இணைந்து பணி­யாற்றி வரு­கிறோம்," என்­றார் அவர்.

"அதி­க­மான வெளி­நாட்டு ஊழி­யர்­கள் பாது­காப்­பாக இங்கு வந்து சேரும் வகை­யில் நம்­மால் எல்­லை­களைத் திறக்க முடி­வதை உறு­திப்­படுத்த பன்­முனை அணு­கு­மு­றையை மேற்­கொள்ள வேண்­டி­யது அவ­சியம்," என்­றும் அவர் சொன்­னார்.

சிங்­கப்­பூ­ரில் அதிக நட­வ­டிக்­கை­களை மீண்­டும் தொடங்­க­வும் நாட்­டின் பொரு­ளி­யல் மீட்­சிக்­கும் வேலை செய்­வ­தற்­காக வெளி­நாட்டு ஊழி­யர்­கள் சிங்­கப்­பூர் வர அனு­மதிப்­பது மிக அவ­சி­யம் என்று திரு கான் குறிப்­பிட்­டார்.

பங்­ளா­தேஷ், நேப்­பா­ளம், பாகிஸ்­தான், இலங்கை, இந்­தியா உள்­ளிட்ட நாடு­க­ளுக்கு அண்­மை­யில் பய­ணம் சென்­றோர் சிங்­கப்­பூர் வரத் தடை விதித்­தி­ருப்­பது, வெளி­நாட்டு ஊழி­யர்­களை நம்­பி­யி­ருக்­கும் துறை­களை அதி­க­மான நெருக்­க­டிக்கு உள்­ளாக்­கி­யி­ருப்­ப­தா­கச் சொல்லப் படுகிறது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!