லீ குவான் இயூ விருதை வென்ற மாணவர்

ஆர்த்தி சிவ­ரா­ஜன்

சமூக சேவை­யி­லும் பள்­ளிப் படிப்­பி­லும் சிறந்து விளங்­கிய 19 வயது திரு அஜ்­மல் சுல்­தான் அப்­துல் காதர் இந்த ஆண்­டின் லீ குவான் இயூ விரு­தைப் பெற்றிருக்­கும் ஒரே இந்­திய மாண­வர்.

வகுப்­ப­றை­யைத் தாண்டி கலை­கள், விளை­யாட்­டு­கள், தொழில்­நுட்­பக் கண்­டு­பி­டிப்­பு­கள் ஆகி­ய­வற்­றில் சாத­னை­ படைத்த 430 மாண­வர்­களை கௌர­விக்­கும் விதத்­தில், தொழில்­நுட்­பக் கல்­விக் கழ­கம் மாண­வர் சாத­னை­யா­ளர் விரு­து­களை வழங்­கி­யது.

அவர்­களில், 48 மாண­வர்­கள் மதிப்­பு­மிக்க லீ குவான் இயூ முன்­மா­திரி மாண­வர்/பயிற்சி விருது, லீ குவான் இயூ இணைப்­பாட விருது, லீ குவான் இயூ தொழில்­நுட்ப விருது ஆகிய விரு­து­க­ளைப் பெற்­ற­னர்.

சிறந்த தலை­மைத்­து­வம், நிறு­வன திறன்­களை வெளிப்­ப­டுத்­தி­ய­தற்­கா­க­வும், தனது கல்­லூ­ரி­யின் முன்­னேற்­றத்­திற்­கும் மேம்­பாட்­டிற்­கும் குறிப்­பி­டத்­தக்க பங்­க­ளிப்பை வழங்­கி­ய­தற்­கா­க­வும் லீ குவான் யூ இணைப்­பாட விரு­தைப் பெற்­றார் திரு அஜ்­மல்.

இந்­திய, மலாய், சீன இனங்­க­ளைச் சேர்ந்த மூன்று மாண­வர்­கள் இந்த விருதை வென்­ற­னர்.

கொவிட்-19 தொற்­று­நோய் கால­கட்­டத்­தில், வர­வி­ருக்­கும் நிகழ்­வு­கள், இணைப்­பாட நட­வ­டிக்­கை­க­ள் குறித்த புதிய மாற்­றங்­கள், பாது­காப்­பான இடை­வெளி நட­வ­டிக்­கை­கள் குறித்த அறி­விப்­பு­கள் ஆகி­ய­வற்றை எளி­தில் அணு­கு­வ­தற்­காக மாண­வர்­க­ளுக்கு ஒரு வலைத்­த­ளத்தை உரு­வாக்­கு­வ­தில் தனது குழுவை வழி நடத்­தி­னார் திரு அஜ்­மல். இது பல­ரு­டன் பழ­க­வும் மேலும் பல திறன்­க­ளைக் கற்­றுக்கொள்­ள­வும் உத­வி­ய­தாக அவர் கூறி­னார்.

மாண­வர் பேரவை மன்­றக் குழு­வின் தலை­வ­ரான திரு அஜ்­மல், பல்­வேறு வகுப்­பு­க­ளைச் சேர்ந்த மாண­வர்­களை ஒரு குழு­வாக பணி­யாற்ற ஒன்­றி­ணைத்து, பள்ளி முதல்­வர் சவால் கோப்பை, உண­வுத் தட்­டு­களை திருப்பி வைக்­கும் பிர­சா­ரம், துடிப்­பு­டன் மூப்­ப­டை­தல் விழா போன்ற பல முக்­கிய திட்­டங்­களில் பங்­கேற்­றுள்­ளார்.

கடந்த 2019ஆம் ஆண்­டில் இடம்­பெற்ற, வியட்­நாம் இளை­யர் பய­ணத் திட்­டத்­தின் மாண­வர் தலை­வ­ரா­கப் பணி­பு­ரிந்த திரு அஜ்­மல், அங்­குள்ள கே ட்ரே (Khe Tre) என்­னும் உயர்­நி­லைப் பள்­ளி­யின் மாண­வர்­க­ளுக்­காக ஒரு புதிய காற்­பந்து மைதா­னத்தை உரு­வாக்க வழி­வ­குத்­தார்.

முதி­யோர் இல்­லத் ­திட்­டங்­களில் பங்­கேற்று கம்­போங் கிளாம் சமூக நிலை­யத்­திற்கு அரு­கில் உள்ள முதி­யோர் குடி­யி­ருக்­கும் வீவக வீடு களை சுத்­தம் செய்­வ­தி­லும் வண்­ணம் பூசு­வ­தி­லும் திரு அஜ்­மல் ஈடு­பட்­டார்.

வாழ்க்­கை­யில் சாதிப்­ப­து குறித்து பேசிய திரு அஜ்­மல், "எந்த வகுப்­பில் படித்­துக்­கொண்­டி­ருந்­தா­லும், கல்­வி­யில் மட்­டுமே கவ­னம் செலுத்­தி­னால் போதாது. அது மாண­வர்­க­ளுக்கு மன அழுத்­தத்தை ஏற்­ப­டுத்­தும்," என்­றார்.

"மனதை நிதா­னப்­ப­டுத்த மன­துக்­குப் பிடித்த இணைப்­பாட நட­வ­டிக்­கை­யில் சேர ஒரு வாய்ப்­பைக் கண்­ட­றிய வேண்­டும். பள்­ளி­கள் வழங்­கும் எந்த வாய்ப்­பை­யும் ஒரு­போ­தும் தவறவிடக்­கூ­டாது. தொடர்­பு­களை விரி­வு­ப­டுத்தி, சுய­

ம­திப்­பை­யும் திறன்­க­ளை­யும் பெருக்­கிக்­கொள்­வது முக்­கி­யது. பல வாய்ப்­பு­களை வழங்கி உத­வும் பள்­ளி­க­ளுக்கு திரும்ப உதவி செய்ய வேண்­டும் என்­பதை எப்­போ­தும் நினை­வில் வைத்­தி­ருப்­ப­தும் முக்­கி­யம்," என­வும் அவர் வலி­யு­றுத்­து­கி­றார்.

விண்­வெளி எந்­தி­ர­வியல் தொழில்­நுட்­பத்­தில் 'நைடெக்' படிப்பை மேற்­கொள்­ளும் திரு அஜ்­மல் ஒரு தொழில்­மு­னை­வ­ராக வர விரும்புகிறார்.

தமது பெற்­றோரை முன்­னு­தா­ர­ண­மா­கக் கொள்­ளும் போக்­கு­வ­ரத்து அல்­லது தள­வா­டங்­க­ளைக் கையா­ளும் நிறு­வ­னத்தை நிர்­வ­கிப்­ப­தில் தனது தந்­தை­யைப் பின்­பற்ற முடி­யும் என்று திட­மாக நம்­பு­கி­றார் திரு அஜ்­மல்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!