செய்யுளைக் கண்டுபிடி!

பழ­மொ­ழி­கள், செய்­யுள்­கள் போன்­ற­வற்றை தொடக்­கப்­பள்­ளி­யி­லும் உயர்­நி­லைப்­பள்­ளி­யி­லும் பயில்­வ­தோடு சரி. நம்­மில் பெரும்­பா­லா­னோர் அவற்றை மீண்­டும் படிப்­ப­தும் இல்லை பயன்­ப­டுத்­து­வ­தும் இல்லை.

ஆனால் கடந்த ஒரு வார­மாக இன்ஸ்ட்­டா­கி­ராம் பயன்­ப­டுத்­தும் தமிழ் இளை­ஞர்­க­ளி­டையே வலம்­வந்து கொண்­டி­ருக்­கிறது அழ­கான, எளி­மை­யான தமிழ்ச் செய்­யுள்­கள்.

நன்­யாங் தொழில்­நுட்­பப் பல்­க­லைக்­க­ழ­கத் தமிழ் இலக்­கிய மன்ற முன்­னாள் மாண­வர் சங்­கம் தயா­ரித்­தி­ருக்­கும் 'செய்­யு­ளைக் கண்டு­பிடி!' என்­னும் சுவா­ர­சி­ய­மான இன்ஸ்டகி­ராம் ஃபில்­டர் (Instagram Filter) தற்போது இளையர்கள் விரும்பிப் பார்க்கும் சமூகப் பக்கங்களில் ஒன்றாக உள்ளது.

இளை­ஞர்­க­ளுக்கு புரி­யும் விதத்­தில் விளை­யாட்டுன் கூடிய கற்­றல் நட­வ­டிக்­கை­யாக உரு­வாக்­கப்­பட்­டுள்ள இந்த 'ஃபில்டர்' சுமார் 1900 முறைக்கு மேல் இன்ஸ்டகி­ரா­மில் பயன்­ப­டுத்­தப்­பட்­டுள்­ளது.

இளை­ஞர்­களை கவர்ந்­தி­ழுக்­கும் இன்ஸ்டகி­ராம் போன்ற சமூக ஊடகத் தளங்­களில் அவர்­க­ளுக்கு எளிய முறை­யில் தமிழை கொண்டு சேர்க்­கும் நோக்­கத்­தில் இந்த முயற்சி எடுக்­கப்­பட்­ட­தாகத் தெரி­வித்­தார் நன்­யாங் தொழில்­நுட்­பப் பல்­க­லைக்­க­ழ­கத் தமிழ் இலக்­கிய மன்ற முன்­னாள் மாண­வர் சங்­கத்­தலை­வர் செம்­பி­யன் சோம­சுந்­த­ரம்.

தொழில்­நுட்­பம் என்­பது நமது அன்­றாட வாழ்க்­கை­யில் குறிப்­பாக இளை­ஞர்­க­ளின் வாழ்க்­கை­யில் ஒருங்­கி­ணைந்த ஒன்­றா­கி­விட்­டது. தமிழ் மொழிப் புழக்­கத்­தை­யும் ஆர்­வத்­தை­யும் அதி­க­ரிக்க இன்றைய இளை­ஞர்­க­ளுக்கு தெரிந்த, புரிந்த விதத்­தில் தொழி­நுட்­பத்தைத் தழு­விய ஏற்­பாடு இது என்­று குறிப்­பிட்­டார் செம்­பி­யன் சோம­சுந்­த­ரம்.

"வைகறைத் துயில் எழு", "கெடுவான் கேடு நினைப்பான்" போன்ற பல எளிய ஆத்திசூடி/பழமொழி களை இந்த இன்ஸ்டகி­ராம் 'ஃபில்டர்'ல் காணலாம்.

ஃபில்டருக்கான குறியீட்டு முறைகளைத் தயாரித்து இந்த சுவாரசியமான யோசனைக்கு உயிர் கொடுத்தவர் சங்க உறுப்பினர் விஸ்வாணி ஜெயக்குமார். இந்த முயற்சிக்கு தமிழ் இளையர் களிடம் நல்ல வரவேற்பு இருந்ததால் சங்கம் தொடர்ந்து இதை மேலும் மேம்படுத்தி விரிவுபடுத்தும் என்றார் அவர்.

என்டியு தமிழ் இலக்கிய

முன்­னாள் மாண­வர்­கள் சங்­கம் 2016ல் உரு­வாக்­கப்­பட்ட ஓர் அமைப்பு. முன்­னர் என்­டியு டிஎல்­எஸ் குழுக்­களில் உறுப்­பி­னர்­க­ளாக இருந்த இளை­ஞர்­க­ளைக் கொண்ட இக்குழு தொடர்ந்து தமிழ், தமிழ் இலக்­கி­யம் சார்ந்த நட­வ­டிக்­கை­களை முன்­னின்று நடத்தி­ வ­ரு­கிறது. இந்த இன்ஸ்டகி­ராம் ஃபில்டரை பயன்­ப­டுத்­திப் ­பார்க்க வல­து­பக்­கத்­தில் உள்ள கியூ­ஆர் குறி­யீட்டை வருடி நன்­யாங் தொழில் நுட்­பப் பல்­க­லைக்­க­ழ­கத் தமிழ் இலக்­கிய மன்ற முன்­னாள் மாண­வர் சங்­க­தின் இன்ஸ்டகி­ராம் பக்­கத்­திற்­குச் செல்­லுங்­கள்.

செய்தி: இந்து இளங்கோவன்

படம்: நன்­யாங் தொழில்­நுட்­பப் பல்­க­லைக்­க­ழ­கத் தமிழ் இலக்­கிய மன்ற முன்­னாள் மாண­வர் சங்­கத்­தின் தலை­வர் செம்­பி­யன் சோம­சுந்­த­ரம் 'செய்யுளைக் கண்டுபிடி' இன்ஸ்டகிராம் ஃபில்டரை சோதித்துப் பார்க்கிறார். படம்: NTUTLSAA

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!