இளையர்களை மன அழுத்தம் அதிகம் பாதிக்கும்போது உதவும் வழிகள்

சிங்கப்பூர் இளையர்கள் பலருக்கு இந்த ஆண்டு, நிச்சயமின்மையும் கவலையும் சூழ்ந்த ஆண்டாக அமைந்துவிட்டது. வலுவான ஒரு சமுதாயமாக நாம் மீண்டு எழுவதற்கான வாய்ப்புகளை ஆராயும் இலக்குடன் மூன்று பாகங்களாக செய்திக்கடிதங்கள் இதனுடன் தொடங்குகின்றன. இளையர்கள் மனநலப் பிரச்சினைகளையும் மனஅழுத்தத்தையும் உணர்வுபூர்வமாக எதிர்கொள்ளும் திறன்களை வளர்த்துக்கொள்ள உதவும் ஒன்றிணைந்த சிங்கை/சிங்கப்பூர் எனப் பொருள்படும் எஸ்ஜி டுகெதர் (SGTogether) செயல்கூட்டணி என்ற அமைப்பு பற்றிய ஐயங்களைக் களைய இந்தத் தொடர் முற்படுகிறது.

கேள்வி பதில்

இன்றைய இளையர்கள் எதிர்நோக்கும் சில சவால்கள் யாவை? கடந்த காலத்தில் அவர்கள் சந்தித்துஇருந்ததைவிட இந்தப் பிரச்சினைகள் இக்காலத்தில் எந்தெந்த வகைகளில் மாற்றம் கண்டுள்ளன?
பலதரப்பட்ட விவகாரங்களில் சிங்கப்பூர் இளையர்களுக்கு அக்கறைகள் உள்ளன. அவற்றில் வேலை வாய்ப்புகள், நீடித்த நிலைத்தன்மை போன்றவற்றுடன் மனநலனுக்கான உதவியும் அடங்கும். இளையர் மனநலக் கட்டமைப்புச் செயல்கூட்டணி (Youth Mental Well Being Network Alliance For Action/AFA), இத்தகைய கேள்விகளை கருத்தில்கொண்டு 24 செயல்திட்டங்களைத் தேர்வுசெய்துள்ளது. அந்தச்செயல்திட்டங்கள் இளையர்களின் உணர்வுபூர்வ எதிர்ப்புத்திறனை மேம்படுத்தி அவர்களுக்கான உதவிக் கட்டமைப்புகளுக்கு வலுவூட்டும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளன. இளம் சிங்கப்பூரர்கள் சுயஅதிகாரத்துடன் அவர்களது மனநலத்தைப் பேணி நிர்வகித்துக்கொள்ளவும் சக தொடர்புகளிடம் ஆதரவைப் பெறவும் ஏஎஃப்ஏ (AFA) செயல்கூட்டணி இலக்கு கொண்டுள்ளது.

மனநலம் சார்ந்த துறையில் அனுபவம் இருந்தால் மட்டும்தான் இளையர் மனநல வலையமைப்பில் இணைந்துகொள்ள முடியுமா?
எவ்வித முன்அனுபவமும் தேவையில்லை. ஏஎஃப்ஏ (AFA) செயல்கூட்டணி இளையரின் மனநலனில் பற்றுதல் உடைய அனைவரையும் வரவேற்கிறது. சென்ற ஆண்டு பிப்ரவரி மாதத்தில் கட்டமைக்கப்பட்ட செயல்கூட்டணியில் இளையர்களின் மனநலத்தை மேம்படுத்தும் முயற்சிகளில் பங்கேற்க முன்வந்துள்ளோரில் 1,500க்கும் மேற்பட்ட இளையர்கள், பெற்றோர்கள், பராமரிப்பாளர்கள், கல்வியாளர்கள், மனநல நிபுணர்கள், பயிற்றுவிப்பாளர்கள் என பலர் அடங்குவர்.


இளையர் மனநல வலையமைப்புச் செயல் கூட்டணியின் நோக்கங்கள் நன்மையானதாக இருந்தாலும் திட்டங்களின் பின் உள்ள செயல்முறைகளும் முயற்சிகளும் நம்பகத்தன்மை வாய்ந்தனவா?
மனநலத்துறை சார்ந்த முகவைகளுடனும் அனுபவம் நிறைந்த நிபுணர்களுடனும் கலந்தாலோசித்த பிறகே, இளையோர் மனநல வலையமைப்புச் செயல் கூட்டணி அதன் செயல்திட்டங்களையும் முயற்சிகளையும் மேற்கொள்கிறது. சமுதாய, குடும்ப மேம்பாட்டு அமைச்சு, சுகாதார அமைச்சு, கல்வி அமைச்சு ஆகிய மூன்று அமைச்சுகளும் அதற்கு ஆதரவாகவும் உள்ளன.


இளையர்களின் மனநலன் சம்பந்தமான உதவிகளை நாடும் பெற்றோர்களின் கவனத்திற்கு -
கல்வி அமைச்சின் ‘பேரன்ட் கிட்’ (www.moe.gov/parent-kit) மற்றும் இன்ஸ்டகிராம் கணக்கு (@parentingwith.moe.sg) உங்கள் பிள்ளைகளுக்கு சமூக மற்றும் உணர்வுபூர்வ ஆதரவை எப்படி வழங்குவது எனும் குறிப்புகளை வழங்குகிறது.
மேலும் கல்வி அமைச்சு, ‘எதைப்பற்றி வேண்டுமானாலும் என்னிடம் கேளுங்கள் (Ask Me Anything About)’ என்ற தலைப்பில் நேரடி ஃபேஸ்புக் நிகழ்ச்சிகளை அடிக்கடி ஏற்பாடு செய்துவருகின்றது. இந்நிகழ்வுகள், பிள்ளைகளின் பெற்றோர் மனநலனுக்கு ஆதரவு வழங்குவது குறித்த ஐயங்களைத் தீர்க்க உதவுகின்றன. தேவைப்பட்டால், உங்கள் பிள்ளைகளின் பள்ளிகளைத் தொடர்புகொண்டு நீங்கள் ஆதரவும் வழிகாட்டுதலும் பெறலாம்.


• உங்கள் பிள்ளைகளுடன் ஆரோக்கியமான உறவை கட்டியெழுப்ப உதவிக்குறிப்புகள்
சமுதாய, குடும்ப மேம்பாட்டு அமைச்சு நடத்திவருகின்ற நேர்மறை பிள்ளைகள் பராமரிப்புச் செயல்திட்டம் (Positive Parenting Programme), பிள்ளைகளின் பழக்கவழக்கங்களை நிர்வகிக்க அவர்களுடன் உங்களுக்குத் தொடர்புத்திறன்களையும் நுட்பமான வழிவகைகளையும் ஏற்படுத்திக்கொள்ளக் கற்றுக்கொடுக்கின்றது.
பாலர் பள்ளி, தொடக்கப் பள்ளி மாணவர்களின் பெற்றோருக்குச் சுகாதார மேம்பாட்டு வாரியம் மனநல சுகாதார கல்வித் திட்டங்களை நடத்திவருகின்றது. தங்கள் பிள்ளைகளின் மனநலத்தை மேம்படுத்தி வலுவடையச்செய்ய உதவும் திறன்களையும் ஆற்றலையும் பெற்றோர்கள் வளர்த்துக்கொள்ள ‘மனத்தின் பல வண்ணங்கள் (Colours of the Mind)’ என்ற பட்டறையும் அத்திட்டங்களில் ஒன்றாகும்.
சுகாதார மேம்பாட்டு வாரியத்தின் ‘பேரன்ட் ஹப்‘ இணையத்தளத்தில் கிடைக்கக்கூடிய இளையோர் மனநலம் பற்றிய பற்பல வளங்களை நீங்கள் அறிந்துகொள்ளலாம்.

வயது முதிர்ந்த சிங்கப்பூரர்களின் மனநலனுக்கு உதவிட ஏஎஃப்ஏ (AFA) செயல்கூட்டணி போன்று எதுவும் உள்ளதா?
ஆம், ‘சிங்கப்பூர் டுகெதர் ஏஎஃப்ஏ ஆன் எமர்ஜிங் நீட்ஸ் அண்ட் வாலன்டரிஸம் (Singapore Together AFA on Emerging Needs and Volunteerism)’ என்ற செயல்கூட்டணி வடிவமைக்கப்பட்டுள்ளது. சமுதாயத்தில் மனநலனுக்கான ஆதரவை அதிகரிப்பது அதன் முக்கிய இலக்குகளில் ஒன்று.
‘லவிங் ஹார்ட் மல்டி சர்வீஸ் சென்டர் (Loving Heart Multi Service Centre)’ நிறுவனம் நிர்வகிக்கும் ஜூரோங் ஈஸ்ட் எஸ்ஜி கேர்ஸ் தொண்டூழியர் நிலையம் (SG Cares Volunteer Centre @Jurong East), ‘சவுண்ட் மைண்ட் சாஃப்ட் ஹார்ட்’ (Sound Mind Soft Heart)’ எனும் ஒரு சமூக மனநலச் செயல்திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. அடித்தள அமைப்பிலிருந்து உருவான ‘போல்ட் அட் வொர்க்’ (Bold At Work) குழுமம் இதர அமைப்புகளுடனும் இணைந்து குறிப்பிட்ட பயிற்சிக் கூறுகளை ஆராய்ந்து வடிவமைக்கும்.


இத்தகைய பயிற்சித் திட்டங்கள் தொண்டூழியர்கள் குடியிருப்பாளர்களுக்கு மனநலன் குறித்த நடவடிக்கைகளை வடிவமைக்கும்போது அவற்றை பாதுகாப்பான சூழலில் மகிழ்ச்சியான வகையில் செயல்படுத்த உதவும் திறன்களை வழங்குகின்றன.
மேலும் பல மனநலத் திட்டங்களையும் நடவடிக்கைகளையும் வடிவமைத்து செயல்படுத்த, ஏறக்குறைய தங்களின் பங்காளிகளுடன் இணைந்து 550 தொண்டூழியர்களைச் சேர்க்க ஜூரோங் ஈஸ்ட் எஸ்ஜி கேர்ஸ் தொண்டூழியர் நிலையம் (SG Cares Volunteer Centre @Jurong East) திட்டமிட்டுள்ளது.
அதிக ஆதரவு மனப்பான்மை நிறைந்த சமூகமாக, சவால்களை எதிர்கொள்ளும் ஆற்றலுடன் பல குடியிருப்பாளர்களை அடையவும் அவர்களுடன் செயலாற்றி சிறந்த மனநலனை உருவாக்குவதும் இலக்காகும்.

இந்தத் திட்டம் பற்றிய மேல்விவரங்களுக்கு SG Cares Office SGCares@mccy.gov.sg இணையத்தளத்தை நீங்கள் நாடலாம்.

ஏன் அரசாங்கம் ஒன்றிணைந்த சிங்கப்பூர் திட்டத்தை 2019ல் செயல்படுத்த முடிவெடுத்தது?
ஒருங்கிணைந்த எதிர்காலத்தைக் கட்டமைப்பதற்கு சிங்கப்பூரர்கள் பலர் முன்வருகின்றனர். சிக்கலான பிரச்சினைகளுக்குத் தீர்வுகாண கொள்கைகளையும் திட்டங்களையும் கூட்டாக உருவாக்க அவர்கள் விரும்புகிறார்கள். அரசாங்கமும் குடிமக்களும் கூட்டாகப் பணியாற்றவும், குடிமக்கள் தங்களுக்கு இடையே ஒருங்கிணைந்து செயலாற்றவும் ஒன்றிணைந்த சிங்கப்பூர் (Singapore Together) திட்டம் செயல்படுத்தப்பட்டது.
நம் நாடு எதிர்கொள்ளும் பலதரப்பட்ட அம்சங்களையும் பிரச்சினைகளையும் இன்னும் ஆழமாகப் புரிந்துகொண்டு எதிர்கொள்ள இந்தப் புதிய ஆளுமை முறை வாய்ப்பளிப்பதுடன் உரையாடல்கள், குடியிருப்பாளர் பணிக்குழுக்கள் மற்றும் செயல்திறன்மிக்க கூட்டணி உள்ளிட்ட தங்கள் சிந்தனைகளையும் செயல்திறனையும் பங்களிக்க உதவுகிறது.

சிங்கப்பூரை ஒன்றிணைந்து கட்டியெழுப்புதல்

ஒன்றிணைந்த சிங்கப்பூர் செயல்கூட்டணிகள் (Singapore Together Alliances for Action) என்பது, மக்கள், பொதுத்துறை, தனியார்துறை ஆகியோருக்கு இடையே பங்காளித்துவத்தை உருவாக்கி நம் நாடு எதிர்நோக்கும் சிக்கலான சமூக, பொருளியல் பிரச்சினைகளுக்குத் தீர்வுகாணும் நோக்கத்துடன் உருவமைக்கப்பட்டுள்ளது.

இளம் சிங்கப்பூரர்களின் மனநலத்துக்கு ஆதரவு தர விருப்பமா? இளையோர் மனநல வலையமைப்பில் இணைந்துகொள்ள கியூஆர் குறியீட்டை (QR Code) வருடுங்கள் (ஸ்கேன்). ஒருங்கிணைந்த சிங்கப்பூர் பற்றிய மேல்விவரங்களுக்கு www.sg என்ற இணையப் பக்கத்திற்கு வருகை தாருங்கள்.

கலாசார, சமூக, இளையர்துறை அமைச்சு கழகம் வழங்கும் விளம்பரச் செய்தி

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!