தடுப்பூசி போட்டுக்கொண்டோர் பாதிக்கப்பட்டால் நேரடியாக சமூகப் பராமரிப்பு இடங்களில் அனுமதி

கொவிட்-19 தடுப்­பூசி போட்­டுக்­கொண்­ட­வர்­க­ளுக்கு அறி­கு­றி­யின்றி கிருமி தொற்­றி­னாலோ அல்­லது இலே­சான அறி­கு­றி­கள் தென்­பட்­டாலோ, மருத்­து­வ­ம­னை­க­ளுக்­குப் பதி­லாக சமூ­கப் பரா­ம­ரிப்பு வசிப்­பி­டங்­களில் அவர்­கள் நேர­டி­யாக அனு­ம­திக்­கப்­ப­டு­வர் என்று சுகா­தார அமைச்­சர் ஓங் யி காங் தெரி­வித்­துள்­ளார்.

மேலும், முழு­மை­யாக தடுப்­பூசி போட்­டுக்­கொண்­ட­வர்­கள் கொரோனா தொற்­றுக்கு ஆளா­னால், 21 நாள்­க­ளுக்­குப் பதி­லாக 14 நாள்­களில் அவர்­கள் வீடு திரும்பி­வி­டு­வ­தாக அவர் கூறி­னார். அதன் பின்­னர் ஏழு நாள்­க­ளுக்கு அவர்­கள் கட்­டாய விடுப்­பில் வைக்­கப்­ப­டு­வர்.

அவர்­க­ளுக்­குக் 'கிரு­மித்­தொற்று இல்லை' என்று பரி­சோ­தனை முடி­வு­கள் காட்­டி­னாலோ அவர்­க­ளி­டம் கிருமி பாதிப்பு குறை­வாக இருந்­தாலோ இந்த நடை­முறை கடைப்­பி­டிக்­கப்­படும்.

அத்­த­கை­யோர் இன்­னும் முன்­கூட்­டியே வீடு திரும்ப முடி­யுமா என்­பது பற்றி மேலும் மறு­ஆய்வு செய்­யப்­ப­டு­வ­தாக அமைச்­சர் ஓங் நாடா­ளு­மன்­றத்­தில் நேற்று கூறி­னார்.

"கொரோனா கிரு­மி­யு­டன் இணைந்து வாழ நாம் கற்­றுக்­கொள்­ளும்­போது, நமது சுகா­தா­ரப் பரா­மரிப்பு நெறி­மு­றை­களும் மாற்­றி­ய­மைக்­கப்­பட வேண்­டும். கொரோனா கிருமி நிரந்­த­ர­மாக இருந்­து­விட்­டால், ஒரு நாளைக்கு 200 அல்­லது அதற்­கும் மேற்­பட்­டோர் அத­னால் பாதிக்­கப்­ப­டு­வது வழக்­கத்­திற்கு மாறா­ன­தாக இராது," என்­றார் அவர்.

கொரோனா தொற்­றி­யோர் நேரடி­யாக சமூ­கப் பரா­ம­ரிப்பு வசிப்­பிடங்­களுக்­குச் செல்­வது பற்­றிக் கருத்­து­ரைத்த திரு ஓங், 17 முதல் 45 வய­திற்கு உட்­பட்­ட­வர்­க­ளி­டத்­தில் அந்த நடை­முறை ஏற்­கெ­னவே நடப்­பில் இருப்­ப­தா­கக் குறிப்­பிட்­டார். அந்த வரம்பு 17 முதல் 59 வய­து­வரை என்று கடந்த வாரம் உயர்த்­தப்­பட்­டது.

இந்த மாற்­றத்­தால், இனி கிரு­மித்­தொற்­றால் பாதிக்­கப்­ப­டு­வோ­ரில் கிட்­டத்­தட்ட 60 விழுக்­காட்­டி­னர் சமூ­கப் பரா­ம­ரிப்பு வசிப்­பி­டங்­களில் இருந்­த­படி உடல்­ந­லம் தேறு­வர் என எதிர்­பார்க்­கப்­ப­டு­கிறது.

இத­னி­டையே, ஒரு­வேளை 80 விழுக்­காட்­டி­னர் சமூ­கப் பரா­ம­ரிப்பு வசிப்­பி­டங்­களில் அனு­ம­திக்­கப்­படும் பட்­சத்­தில், சிலர் வீட்­டி­லேயே குண­ம­டை­யும் வகை­யில் அடுத்த கட்­டத்­திற்­கும் அர­சாங்­கம் திட்­ட­மி­டும் என்று அமைச்­சர் சொன்­னார்.

புதிய இயல்­பு­நி­லை­யின் ஒரு பகு­தி­யாக, வீட்­டி­லேயே தனி­மைப்­படுத்­திக்­கொள்­வது அதி­கப்­ப­டுத்­தப்­படும்.

தனி­மைப்­ப­டுத்­திக்­கொள்ள தங்­க­ளது வீடே உகந்த இட­மாக இருந்­தால், முழு­மை­யா­கத் தடுப்­பூசி போட்­டுக்­கொண்­டோர் தங்­களது வீடு­க­ளி­லேயே தனி­மைப்­படுத்­திக்­கொள்ள முடி­யும்.

"தனி­மைப்­ப­டுத்­தும் உத்­த­ர­வின்­கீழ் இருப்­போ­ரில் 40 விழுக்­காட்­டி­னர்­வரை தங்­க­ளது வீடு­களில் தனி­மைப்­ப­டுத்­திக்­கொள்ள முடி­யும் என்று எதிர்­பார்க்­கி­றோம். வரும் வாரங்­களில் அதி­க­மா­னோர் தடுப்­பூசி போட்­டுக்­கொள்­ளும்­போது, அவ்­வி­கி­தம் 50 விழுக்­காட்­டைத் தாண்­ட­லாம்," என்று அமைச்­சர் ஓங் குறிப்­பிட்­டார்.

முழு­மை­யா­கத் தடுப்­பூசி போட்­டுக்­கொண்­டோரை கொரோனா தொற்­றி­னால் அவர்­கள் மோச­மாக பாதிக்­கப்­பட வாய்ப்­பில்லை என்­பது தெளி­வா­கத் தெரிந்­து­விட்­ட­தால் இந்த நட­வ­டிக்­கை­கள் சாத்­தி­யமே என்­றும் அவர் கூறினார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!