‘என்ட ஒரு கதை இருக்கு’: போட்டி வரை சென்ற ஓர் இளைஞரின் குறும்பட ஆர்வம்

ப. பால­சுப்­பி­ர­ம­ணி­யம்

குறும்­பட இயக்­கு­நர் ஒரு­வ­ருக்­குத் தம் குறும்­ப­டத்­தைத் திரைப்­பட விழா­வுக்­குச் சமர்ப்­பிக்க ஆசை. ஆனால் கடைசி நிமி­டத்­தில் உதவ முடி­யாது என்று தேர்ந்­தெ­டுத்த கதா­சி­ரி­யர் கூறி­விட்­டார். இத­னால் விரக்தி அடை­கி­றார் அந்த இயக்­கு­நர் கதா­பாத்­தி­ரம்.

கைபே­சி­யில் இயக்­கு­நர் பேசிக்­கொண்­டி­ருந்­ததை வீட்டு வாச­லி­லி­ருந்து கேட்­டுக்­கொண்­டி­ருந்த பீட்ஸா விநி­யோக ஊழி­யர் ஒரு­வர், 'தம்­மி­டம் ஒரு கதை உள்­ளது' என உணவு ரசீ­தில் எழு­தி­வி­டு­கி­றார். ரசீதை உன்­னிப்­பாக கவ­னித்த இயக்­கு­நர் வீட்­டி­லி­ருந்து புறப்­பட்ட அந்த பீட்ஸா விநி­யோ­கிப்பாளரை உடனே அழைத்­துக் கதை சொல்­லும் வாய்ப்­பைத் தரு­கி­றார். இரு­வ­ரும் சேர்ந்து குறும்­ப­டத்­தைத் தயா­ரிக்க இணை­கின்­ற­னர்.

'என்ட ஒரு கதை இருக்கு' என்ற வித்­தி­யா­ச­மான தலைப்­பில் இந்த மூன்று நிமி­டக் கதையை ஒரு குறும்­ப­ட­மாக எடுத்த இளை­யர் அன்­ப­ழ­கன் அருண் முகி­லன், அதை 'சினி65' (ciNE65) திரைப்­பட விழா போட்­டிக்கு அனுப்­பினார்.

கடந்த மாதம் 'நெக்­சஸ்' (தற்­காப்பு அமைச்சு), 'எம்­எம்2' (MM2) என்ற ஊடக கேளிக்கை நிறு­வ­னம் இணைந்து நடத்­திய இப்­போட்­டி­யில் சிறந்த 'கலை இயக்­கம்' (Art Direction) விரு­துப் பிரி­வுக்கு, இந்­தத் தமிழ் குறும்­ப­டம் முன்­மொ­ழி­யப்­பட்­டது.

சிங்­கப்­பூ­ரர் என்ற உணர்­வை­யும் கடப்­பாட்­டை­யும் வலுப்­ப­டுத்­து­வ­து­டன் வளர்ந்­து­வ­ரும் உள்­ளூர் இயக்­கு­நர்­க­ளுக்­குத் தளம் அமைத்­துக் கொடுப்­ப­தை­யும் இவ்­வி­ருது விழா நோக்­க­மா­கக் கொண்­டுள்­ளது. தன் வீட்­டில் தயா­ரிக்­கப்­பட்ட இந்­தக் குறும்­ப­டத்தை இளை­யர் அருண் முகி­லன் சுமார் ஐந்து நாட்­களில் முடித்­தார். ரிபப்­ளிக் பல­து­றைத் தொழிற்­கல்­லூ­ரி­யின் ஊட­கத் தாயா­ரிப்பு, வடி­வ­மைப்பு துறை­யில் பயின்ற 20 வயது அருண் முகி­லன், சிறு வய­தி­

லி­ருந்தே 'எனி­மே­‌‌ஷன்', 'சூப்­பர்­ஹீரோ' படங்­களை பார்த்து பர­வ­ச­ம­டைந்­த­வர்.

உயர்­நி­லைப் பள்ளிப் பரு­வத்­தி­லி­ருந்தே குறும்­ப­டம் எடுக்க தொடங்­கிய இவர், அதற்­கு­ரிய 'பிரி­மி­யர் புரோ' மென்­பொ­ருளை அப்­போதே கற்­றுக்­கொண்­டார்.

ஏறத்­தாழ ஐந்து ஆண்­டு­

க­ளுக்கு முன், 'டாஸ்க் ஸ்டூ­டி­யோஸ்' என்ற 'யூடி­யூப் சேனலை'த் தொடங்கி, தன்­னு­டன் படித்த பெண்­ட­மி­யர் உயர்­நி­லைப் பள்ளி நண்­பர்­களை நடி­கர்­க­ளாக ஈடு­

ப­டுத்­திக் குறும்­ப­டங்­கள் இயக்கி வந்­தார்.

வெவ்­வேறு உயர்­கல்வி நிலை­யங்­களில் அவ­ரின் நண்­பர்­கள் தற்­போது படித்­துக்­கொண்­டி­ருந்­தா­லும் தொடர்ந்து குறும்­ப­டங்­க­ளுக்கு அவர்­கள் ஆத­ரவு நல்கி வரு­கின்­ற­னர்.

"போட்­டிக்கு 'ஒன்­றாக இருந்­தால் வலு­வ­டை­வோம்' என்ற கருப்­பொ­ரு­ளில் குறும்­ப­டம் தயா­ரிக்க வேண்­டும். அறி­மு­க­மில்­லா­த­வர்­கள் ஒன்­று­சேர்ந்­தால் அதி­லி­ருந்து நன்­மை­கள் விளை­யும் என்­பதை என் குறும்­ப­டம் வழி காட்­டி­னேன்," என்று தெரி­வித்­தார் தற்­போது தேசிய சேவை புரி­யும் அருண் முகி­லன்.

மாறு­பட்ட கதை வடி­வத்­திற்கு பெயர்­போன 'பீட்ஸா' திரைப்­பட புகழ் கார்த்­திக் சுப்­பு­ராஜ் போன்ற தமிழ்த் திரைப்­பட இயக்­கு­நர்­கள் தமக்கு முன்­மா­திரி என்று தெரி­வித்த அருண் முகி­லன், எதிர்­கா­லத்­தில் தமிழ்த் திரைப்­பட உல­கில் கால்­ப­திக்க வேண்­டும் என்ற கனவு கொண்­டுள்­ளார்.

அக்­க­னவு மெய்ப்­பட தொடர்ந்து தன் யூடி­யூப் சேன­லில் குறும்­ப­டங்­களைப் பதி­வேற்­றம் செய்து வருகிறார் அருண் முகி­லன்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!