தனிமை உத்தரவுக்கு அதிக ஹோட்டல்கள்

கொவிட்-19 கிரு­மித்­தொற்று எண்­ணிக்கை பெரு­கி­ய­தைத் தொடர்ந்து தனிமை உத்­த­ர­வுக்­கான இருப்­பி­டங்­க­ளா­கச் சேவை­யாற்­றும் ஹோட்­டல்­க­ளின் எண்­ணிக்கை நேற்று முன்­தின நில­வ­ரப்­படி 90க்கு மேல் சென்­றுள்­ளது.

இந்த எண்­ணிக்கை கடந்த மே மாதம் சுமார் 70ஆக இருந்­தது.

தொற்று பர­வத் தொடங்­கிய நேரத்­தில் கடந்த ஆண்டு மார்ச் மாதம் முதல் ஹோட்­டல்­கள் தனிமை உத்­த­ர­வுக்­கான இடங்­க­ளா­கச் சேவை­யாற்றி வரு­கின்­றன.

அர­சாங்க தொற்று தடைக்­காப்­புக்­கான இடம் அல்­லது கட்­டாய இல்­லத் தனி­மைக்­கான இருப்­பி­டம் என்­னும் நோக்­கங்­க­ளுக்­காக அவை செயல்­ப­டு­கின்­றன.

நிலை­மைக்­கேற்ப ஹோட்­டல்­கள் இவ்­வாறு செய­ல்ப­டு­மாறு கேட்­டுக்­கொள்­ளப்­படும் என்று தேசிய வளர்ச்சி அமைச்சு ஸ்ட்­ரெய்ட்ஸ் டைம்ஸ் செய்­தித்­தா­ளி­டம் கூறி­யது.

வெளி­நா­டு­களில் இருந்து வரு­வோ­ருக்கு கட்­டாய இல்­லத் தனிமை உத்­த­ரவு பிறப்­பிக்­கப்­ப­டு­கிறது. அதே­நே­ரம் உள்­ளூர் தொற்று கார­ண­மாக தனி­மைக்­கான தேவை உள்­ளோர் அர­சாங்க தொற்று தடைக்­காப்­புக்­கான இடத்­தில் வைக்­கப்­ப­டு­கின்­ற­னர்.

கொவிட்-19 நோய் தொற்­றி­யோ­ரு­டன் நெருக்­கத்­தில் இருப்­போ­ருக்கு இந்­தத் தனி­மைப்­ப­டுத்­தல் தேவைப்­படும்.

மேலும், இந்த இரு­வி­தத் தனி­மைப்­ப­டுத்­த­லுக்­கும் உத்­த­ர­வி­டப்­பட்­ட­வர்­கள் நிலைமை மேம்­பாட்­டைப் பொறுத்து தங்­க­ளது வீடு­க­ளி­லும் அதனை நிறை­வேற்­ற­லாம் என அமைச்சு குறிப்­பிட்­டுள்­ளது.

புதன்­கி­ழமை நில­வ­ரப்­படி சுமார் 14,000 பேர் தனிமை உத்­த­ர­வில் வைக்­கப்­பட்­டுள்­ள­னர். இவர்­களில் ஏறக்­கு­றைய 5,000 பேர் அர­சாங்க தொற்று தடைக்­காப்­புக்­கான இடங்­களில் வைக்­கப்­பட்­டுள்­ள­னர் என சுகா­தார அமைச்­சின் தரவு தெரி­விக்­கிறது.

ஜூரோங் மீன்­பிடி வர்த்­த­கத் துறை­மு­கம், கேடிவி கூடங்­கள் என இரு தொற்­றுக் குழு­மங்­களும் இதர சிறு சிறு தொற்­றுக் குழு­மங்­களும் உரு­வெ­டுத்த பின்­னர் தனிமை உத்­த­ர­வின்­கீழ் வைக்­கப்­ப­டு­வோ­ரின் எண்­ணிக்­கை பன்­ம­டங்கு பெரு­கி­விட்­ட­தாக சுகா­தார அமைச்சு கூறி­யது.

கடந்த வாரம் 14,770 பேருக்கு தனிமை உத்­த­ரவு வழங்­கப்­பட்­டது. இது சரா­ச­ரி­யாக நாள் ஒன்­றுக்கு 2,110 பேர். இருப்­பி­னும் இந்த வாரம் ஞாயிறு முதல் செவ்­வாய்க்­கி­ழமை வரை­யில் அந்த விகி­தம் 1,490 என குறைந்­து­விட்­டது.

ஹோட்­டல் ஒன்று புதி­தாக தனி­மைக்­கான உத்­த­ர­வுக்கு ஒதுக்­கப்­

ப­டும்­போது அங்­குள்ள ஊழி­யர்­க­ளுக்கு அதற்­கான பயிற்சி தேவைப்­படும் என்று தேசிய வளர்ச்சி அமைச்சு குறிப்­பிட்­டுள்­ளது.

மேலும் கடு­மை­யான நோய்த்­தொற்­றுத் தடுப்பு மற்­றும் கட்­டுப்­பாட்டு விதி­க­ளுக்கு அந்த ஹோட்­டல்­கள் கட்­டுப்­பட வேண்­டும் என்­றும் உத்­த­ர­வில் இருப்­போ­ரின் பாது­காப்­புக்­கும் ஊழி­யர்­க­ளின் பாது­காப்­புக்­கும் இது இவ்­வாறு செய்­வது அவ­சி­யம் என்­றும் அது தெரி­வித்­துள்­ளது.

மே மாதம் 70ஆக இருந்த எண்ணிக்கை 90க்கு உயர்ந்தது

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!