நீடித்த நிலைத்தன்மைக்கு பங்காற்ற விரும்பும் சந்தியா‌ஷினி

ப. பாலசுப்பிரமணியம்

 

ராஃபிள்ஸ் பெண்­கள் பள்­ளி­யில் பயின்ற­போது 'பயோ­டீ­சல்' எரி­பொ­ருள் தொடர்பான அறி­வி­யல் ஆராய்ச்­சி­யில் சந்­தி­யா­ஷி­னிக்கு ஆர்­வம் துளிர்­விட்­டது. அன்று தொடங்­கிய அந்த ஆர்­வமே, மதிப்­பு­மிக்க உப­கா­ரச் சம்­பள விருதை பெறு­வ­தற்கு இன்று இவருக்கு உத­வி­யுள்­ளது.

நீடித்த நிலைத்­தன்மை உப­கா­ரச் சம்பள விருதை இம்­மா­தம் பெற்ற 16 மாண­வர்­களில் சு.சந்­தி­யா­ஷி­னி­யும் ஒரு­வர்.

சிங்­கப்­பூ­ரின் சுற்­றுப்­புற நிலைத்­தன்­மை­யை­யும் உணவு, தண்­ணீர் வளங்­க­ளை­யும் பாது­காத்­தி­டும் திற­னா­ளர்­களை உரு­வாக்­கும் நோக்­கில் இவ்­வி­ரு­து­கள் வழங்­கப்­படு­கின்­றன. தற்­போது சிங்­கப்­பூர் தேசிய பல்­க­லைக்­க­ழ­கத்­தில் உயிர் அறி­வி­யல் படிப்புடன் கூடிய நிர்­வா­கம் தொடர்­பான இள­நி­லைப் பட்­டக் கல்வியைப் பயி­லும் இவர், பட்­டப்­ப­டிப்பு முடிந்­த­தும் தேசிய சுற்­றுப்­புற வாரி­யத்­தில் பணி­யாற்­று­வார்.

உயர்­நி­லைப்­பள்­ளி­யில் அறி­வி­யல் தொடர்­பான ஆராய்ச்­சி­களில் ஈடு­பட்டு, தேசிய அள­வி­லான போட்­டி­க­ளுக்கு அவற்­றைச் சமர்ப்­பித்து, ஆராய்ச்சி செயல்­திட்­டத்­திற்கு நிதி ஆத­ரவு கிடைக்க, அது தன் முயற்­சி­க­ளுக்கு உத்­வே­கம் தந்­த­தாக 19 வயது சந்­தி­யா­‌ஷினி குறிப்­பிட்­டார்.

இங் டெங் ஃபோங் மருத்­து­வ­ம­னை­யின் தொற்­று­நோய்ப் பிரி­வில் பணி­யாற்­றும் 56 வயது தாயார் திரு­மதி ரெ.சாரதா­மணி, தம் வேலை அனு­ப­வங்­களை சந்­தி­யா­‌ஷி­னி­யு­டன் பகிர்ந்­து­கொள்ள, அவ­ருக்கு உயி­ரி­யல் துறை ஆராய்ச்­சி­யில் நாட்­டம் அதி­க­ரித்­தது.

தொடக்­கக்­கல்­லூரியில் படித்தபோது, விடு­முறைக் காலத்தில் தேசிய பல்­க­லைக்­கழக மருத்து­வ­ம­னை­யின் கிரு­மித்­தொற்றுப் பிரி­வில் மாண­வர் பயிற்­சி­யா­ள­ராகப் பணிபுரிந்த சந்­தி­யா­ஷினி, அங்­கு தொற்று நோய்ப் பர­வல் எவ்­வாறு கட்­டுப்­படுத்­தப்­படு­கிறது என்­பதை அறிந்­தார்.

பரு­வ­நிலை மாற்­றம் குறித்து அண்­மைய வர­வு­செ­ல­வுத் திட்­டத்­தில் அர­சாங்­கம் முன்­வைத்­துள்ள திட்­டங்­கள் பாராட்­டுக்­கு­ரி­யது என்று கூறிய சந்­தி­யா­‌ஷினி, சிங்­கப்­பூர்ப் பசு­மைத் திட்­டம் இன்­னும் துரி­த­மா­கச் செயல்­ப­டுத்­தப்­பட்­டால் அது சுற்­றுப்­பு­றத்­தின் நிலைத்­தன்­மைக்­குப் பெரும் பங்­க­ளிக்­கும் என்று கரு­து­கி­றார்.

"பொதுச் சுகா­தா­ரத்­தைப் பொறுத்த வரை­யில், கொவிட்-19 கிரு­மித்­தொற்று தொடர்­பில் ஏரா­ள­மான வாழ்க்­கை­முறை மாற்­றங்­க­ளுக்­குத் தங்­க­ளைத் தயார்­ப­டுத்­திக்­கொள்ள வேண்­டுமே என்ற அதி­ருப்தி மக்­க­ளி­டையே நில­வ­லாம். ஆனால் இம் மாற்­றங்­கள் தேவையானவை. அர­சாங்க அமைப்­பு­கள் இணைந்து கண்­ட­றி­யும் தீர்­வு­கள், கொவிட்-19 கிரு­மித்­தொற்­றுப் பர­வ­லைக் கட்­டுக்­குள் வைத்­தி­ருக்க உத­வு­கின்­றன," என்றார் சந்­தி­யா­‌ஷினி.

ஆராய்ச்­சிப் பணி­க­ளைத் தவிர, 'ஹார்ட்­வேர்' (Heartware Tuition Programme) துணைப்­பா­டத்­ திட்­டத்­தின்­கீழ் வச­தி­குறைந்த மாண­வர்­க­ளுக்கு இல­வ­ச­மா­கப் பாடம் சொல்லிக்கொடுத்து வந்த சந்­தி­யா­ஷினி, தற்­போது அத்­திட்­டத்­தின் ஒருங்­கி­ணைப்­பா­ள­ராக உள்­ளார்.

பல்­க­லைக்­க­ழ­கத்­தில் கொவிட்-19 கிருமித்­தொற்று, புற்­று­நோய் போன்­றவை தொடர்­பில் உயி­ரி­யல் ஆராய்ச்­சி­களை மேற்­கொள்ள ஆவ­லு­டன் காத்­தி­ருக்­கி­றார் பல்கலைக்கழக முத­லாம் ஆண்டு மாணவியான சந்­தி­யா­‌ஷினி.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!