பணிப்பெண்ணுக்கு சூடு வைத்ததற்கு சிறை

மது போதையில் சூடாக்கப்பட்ட உலோகக் கரண்டியால் தனது பணிப்பெண்ணின் இடது கைக்கு சூடவைத்த ஆடவருக்கு ஓராண்டு சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

இச்­சம்­ப­வம் 2018ஆம் ஆண்டு அக்­டோ­பர் மாதம் 18ஆம் தேதி­யன்று நிகழ்ந்­தது. அதற்கு மறு­நாளும் ராஜ­மா­ணிக்­கம் சுரேஷ் குமார் என்ற அந்த 35 வயது ஆடவர் மது போதை­யில் வீடு திரும்­பி­யி­ருக்­கி­றார். அதற்­குப் பின்­னர் அவர் பணிப்­பெண்­ணின் இடது கையை இழுத்து அறைக்­குள் தள்ளி­னார். இந்­தி­யா­வி­லி­ருந்து வந்த திருவாட்டி வடி­வேல் கௌத­மி­யைத் தாக்­கி­ய­தா­க­வும் அவ­ரைச் சட்­ட­வி­ரோ­த­மாக பல­வந்­தப்­ப­டுத்­தி­ய­தா­க­வும் ராஜ­மா­ணிக்­கத்­தின் மீது சுமத்­தப்­பட்­டி­ருந்த இரண்டு குற்­றச்­சாட்­டு­கள் நிரூ­பிக்­கப்­பட்­டன.

பாதிக்­கப்­பட்ட திருவாட்டி கௌதமி முதன்­மு­றை­யாக சிங்­கப்­பூ­ருக்கு வந்­தி­ருந்­தார்.

மாதம் 400 வெள்ளி சம்­ப­ளம் வாங்­கிக்­கொண்­டி­ருந்த அவர் ஜூரோங் வெஸ்­டில் ராஜ­மா­ணிக்கத்­தின் வீட்­டில் 2018ஆம் ஆண்டு ஏப்­ரல் மாதம் முதல் வேலை செய்து வந்­தார்.

ராஜ­மா­ணிக்­கம் அவ­ரின் கைக்கு சூடு வைத்­த­போது திருவாட்டி கௌதமி சமைத்­துக்­கொண்­டி­ருந்­தார். சூடு வைத்த பிறகு ராஜ­மா­ணிக்­கம் சமை­ய­ல­றை­யை­விட்­டுச் சென்­ற­தா­க­வும் திருவாட்டி கௌதமி தொடர்ந்து சமை­ய­லில் ஈடு­பட்­ட­தா­க­வும் தெரி­ய­வந்­தது.

மறுநாளும் இரவு சுமார் 10.30 மணிக்கு மது போதையில் வீட்டிற்கு வந்த ராஜமாணிக்கம், மாமியார் வீட்டில் இருந்த தனது மகளை அழைத்து வருமாறு கௌதமியிடம் கூறியிருக்கிறார்.

தனது வேலை நேரம் முடிவுற்றதால் அவ்வாறு செய்ய மறுத்த திருவாட்டி கௌதமியிடம் இரவு 10 மணிக்குள் தூங்கவேண்டும் என்று மனிதவள அமைச்சு சொன்ன பிறகும், அவர் ஏன் தூங்கவில்லை எனக் கேட்டார். அதன் பின்னர் அவரது இடது முழங்கையை இழுத்து அறைக்குள் தள்ளினார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!