வீட்டிலேயே கற்கும் ஏற்பாடு அக்டோபர் 7 வரை நீட்டிப்பு

தொடக்­கப்­பள்ளி, சிறப்­புக் கல்வி பள்ளி மாண­வர்­கள் அனை­வ­ருக்­கும் வீட்­டி­லி­ருந்தே கற்­கும் ஏற்­பாடு ஒரு நாள் நீட்­டிக்­கப்­பட்டு அக்­டோபர் 7ஆம் தேதி வரை நடப்­பில் இருக்­கும் என்று கொவிட்-19 சிறப்­புப் பணிக்­குழு நேற்று அறி­வித்­தது.

அக்­டோ­பர் 8ஆம் தேதி சிறார் தினம் கொண்­டா­டப்­ப­டு­கிறது. அந்த நாளை­யும் சேர்த்து பார்க்­கும்­போது வீட்­டி­லேயே கற்­றல் ஏற்­பாடு இரண்டு வார காலம் முழு­மை­யாக நடப்­பில் இருக்­கும் என்று அந்­தப் பணிக்­கு­ழு­வின் இணைத் தலை­வர்­களில் ஒரு­வ­ரும் நிதி அமைச்­சரு­மான லாரன்ஸ் வோங் தெரி­வித்­தார்.

மாண­வர்­கள் அக்­டோ­பர் 11ஆம் தேதி திங்­கட்­கி­ழ­மை­தான் பள்­ளி­களுக்­குத் திரும்­பு­வார்­கள்.

இரண்டு வார காலம் இந்த ஏற்­பாடு நடப்­பில் இருக்­கும். அதை நீட்­டிப்­பதா, வேண்­டாமா என்­பது பற்றி அப்­போது முடிவு செய்­யப்படும் என்று திரு வோங் குறிப்­பிட்­டார்.

"கொவிட்-19 தொற்று அதி­க­மாகி வரு­கிறது. இதில் மேலும் ஒரு முன்­னெச்­ச­ரிக்கை நட­வ­டிக்­கை­யாக வீட்­டி­லேயே கற்­றல் ஏற்­பாடு நீட்டிக்­கப்­ப­டு­கிறது," என்று அவர் கூறி­னார்.

தடுப்­பூசி போட்­டுக்­கொள்ள மருத்­துவ ரீதி­யில் இன்­ன­மும் தகுதி­பெ­றாத சிறார்­க­ளைப் பாது­காக்க இந்த ஏற்­பாடு இடம்­பெ­று­வ­தாக சிறப்­புப் பணிக்­குழு தெரி­வித்­து உள்­ளது.

வீட்­டி­லேயே கற்­கும் ஏற்­பாடு செப்­டம்­பர் 27லிருந்து அக்­டோ­பர் 6ஆம் தேதி வரை நடப்­பில் இருக்­கும் என்று ஏற்­கெ­னவே கல்வி அமைச்சு அறி­வித்து இருக்­கிறது.

12 மற்­றும் அதற்­கும் குறை­வான வய­துள்ள மாண­வர்­கள் அனை­வருக்­கும் வீட்­டி­லேயே கற்­கும் ஏற்­பாட்டை செப்­டம்­பர் 27 முதல் அக்­டோ­பர் 10 வரை தனி­யார் கல்வி நிலை­யங்­களும் நடை­மு­றைப்­ப­டுத்த வேண்டி இருக்­கும் என்று சிறப்­புப் பணிக்­குழு தெரி­வித்து உள்­ளது.

இருந்­தா­லும் இத்­த­கைய தனி­யார் கல்வி நிலை­யங்­களில் இடம் பெறும் பள்­ளிக்கு முந்­தைய சேவை­கள் தொடர்ந்து நடக்கும்.

இந்­தக் கால­கட்­டத்­தின்­போது 12 மற்­றும் அதற்­கும் குறை­வான வய­துள்ள மாண­வர்­க­ளுக்­கான நேரடி துணைப்­பாட மற்­றும் செரி­வாக்க வகுப்­பு­கள் இணை­யம் மூலம் நடக்­க­வேண்­டும்.

அல்­லது அவை நிறுத்திவைக்­கப்­பட வேண்­டும் என்று பணிக்­குழு தெரி­வித்­துள்­ளது.

பாலர்­பள்­ளி­கள், கல்வி அமைச்­சின் பாலர்­ பள்­ளி­கள், மாண­வர் பரா­ம­ரிப்பு நிலை­யங்­கள் தொடர்ந்து செயல்­படும் என்­ப­தால் முடிந்­தால் பிள்­ளை­களை வீட்­டி­லேயே வைத்­தி­ருக்­கும்­படி பெற்­றோர்­க­ளுக்கு ஆலோ­சனை கூறப்­பட்டு உள்­ளது.

இந்த ஆண்டு தொடக்­கப்­பள்ளி இறு­தித் தேர்வு செப்­டம்­பர் 30ஆம் தேதி தொடங்­கு­கிறது. அக்­டோ­பர் 6ஆம் தேதி முடி­வ­டை­கிறது. சென்ற ஆண்­டைப் போலவே இந்த ஆண்டும் தொடக்­கப்­பள்ளி ஆறாம் வகுப்பு மாண­வர்­கள் செப்­டம்­பர் 25 முதல் 29 வரை விடுப்­பில் இருப்­பார்­கள் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!