வீட்டில் குணமடைதல்: தொலைமருத்துவ சேவையை தனியார் மருத்துவர்களும் அளிக்கின்றனர்

வீட்­டில் குண­ம­டை­தல் திட்­டத்­துக்கு உத­வும் பொருட்டு, சிங்­கப்­பூ­ரில் உள்ள பல்­வேறு தனி­யார் மருத்­து­வர்­கள் தங்­கள் நோயா­ளி­க­ளுக்­குத் தொலை­ம­ருத்­துவ சேவையை வழங்க முன்­வந்­துள்­ள­னர்.

கொவிட்-19 கிரு­மித்­தொற்று அதி­க­ரித்­துள்ள வேளை­யில், இதன் மூலம் தொலை­ம­ருத்­துவ சேவையை தற்­போது வழங்கி வரும் நடத்­து­நர்­க­ளின் பளு குறை­யும்.

தங்­கள் நோயா­ளி­களை நன்கு அறிந்­துள்ள மருத்­து­வர்­கள் நோய் பற்­றிய அவர்­க­ளின் அச்­சத்­தைக் குறைத்து, அவர்­க­ளுக்­குள்ள நோய் பற்­றிய தக­வல்­க­ளின் அடிப்­ப­டை­யில் மருத்­துவ ஆலோ­சனை அளிக்க முடி­யும்.

வீட்­டில் குண­ம­டை­தல் திட்­டத்­தில் சேர இது­வரை 300க்கு மேற்­பட்ட தனி­யார் மருத்­து­வர்­கள் விருப்­பம் தெரி­வித்­துள்­ள­தாக சிராங்­கூ­னில் உள்ள மிஷன் மருந்­த­கத்­தில் பணி­யாற்­றும் குடும்ப மருத்­து­வ­ரான டாக்­டர் லியோங் சூன் கிட் ஸ்ட்­ரெய்ட்ஸ் டைம்­சி­டம் தெரி­வித்­தார்.

டாக்­டர் லியோங்­கின் தொடக்­க­கா­லப் பரா­ம­ரிப்­புக் கட்­ட­மைப்­பின் கீழ் கடந்த வாரம் 27 தனி­யார் மருத்­து­வர்­கள் தங்­கள் நோயா­ளி­களுக்கு 24 மணி­நேர தொலை­மருத்­துவ சேவை வழங்க இணக்­கம் தெரி­வித்­த­னர்.

தங்­கள் நோயா­ளி­களை அணுக்­க­மா­கக் கண்­கா­ணிக்­கும் வகை­யில் அவர்­க­ளுக்­கான வளங்­களை ஒன்­று­தி­ரட்­டும் மெய்­நி­கர் குழுக்­களை அமைப்­ப­து­தான் தொடக்­க­கா­லப் பரா­ம­ரிப்­புக் கட்­ட­மைப்பு.

அத்­து­டன் இந்­தத் தனி­யார் மருத்­து­வர்­கள், நோயா­ளி­கள் தங்­க­ளைத் தனி­மைப்­ப­டுத்­திக்கொண்­டி­ருக்­கும்­போது கொவிட்-19 நோய்க்­கான அறி­கு­றி­கள் தென்­பட்­டால் அவர்­க­ளுக்கு மருத்­துவ ஆலோ­சனை வழங்­க­வும் தயா­ராக இருப்­பார்­கள்.

இந்த வீட்­டில் குண­ம­டை­தல் திட்­டத்­தில் சேரும் எல்லா மருத்­து­வர்­களும் தொலை­ம­ருத்­துவ சேவை தொடர்­பான கட்­டாய பயிற்­சிக்­குச் செல்ல வேண்­டும்.

"தனி­யார் மருத்­து­வர்­கள் நமது சுகா­தா­ரப் பரா­ம­ரிப்பு முறை­யில் அடித்­த­ளம். ஒரு­வ­ருக்கு கொவிட்-19 கிரு­மித்­தொற்று இருப்­பது உறு­தி­யாகி, அவ­ருக்கு அதற்­கான அறி­கு­றி­கள் இருந்தால் அவர் தங்­கள் தனி­யார் மருத்­து­வரை அணு­க­லாம். அவர்­கள் தகுந்த ஆலோ­சனை வழங்­கு­வார்­கள்.

டாக்­டர் லியோங், அண்­மை­யில்­வீட்­டில் குண­ம­டைந்து வரும் கொவிட்-19 கிரு­மித்­தொற்று உறுதி­யான நோயா­ளிக்­குத் தகுந்த மருத்­துவ ஆலோ­சனை வழங்­கி­னார். அந்த நோயாளி இப்­போது நன்கு குண­டைந்து வரு­வ­தாக அவர் சொன்­னார்.

சுகா­தார அமைச்­சை­யும் தொலை­ம­ருத்­துவ சேவை வழங்கு­நர்­க­ளை­யும் தொடர்­பு­கொள்ள சிர­மத்தை எதிர்­நோக்­கிய நோயாளி­கள் பலர் தங்­களை நாடி­ய­தாக தனி­யார் மருத்­து­வர்­கள் பலர் கூறி­னர்.

"தற்­போது நேரடி நோய் மதிப்­பீடு பெற விரும்­பு­வோர் மருத்­து­வ­மனை­யின் விபத்து மற்­றும் அவ­ச­ர­நி­லைப் பிரி­வுக்­குச் செல்ல வேண்­டும்.

"அதற்­குப் பதி­லாக தொலை­மருத்­துவ சேவை அளிக்­கும் தனி­யார் மருத்­து­வர்­களை நாடி அதே மதிப்­பீட்­டைப் பெற்­றுக்­கொள்­ள­லாம்," என்­றார் பொங்­கோ­லில் உள்ள கென்­னத் டான் மருந்­த­கத்­தின் குடும்­ப­நல மருத்­து­வ­ரான டாக்­டர் கென்­னத் டான்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!