வழக்கமான மருத்துவ கவனிப்பு தொடங்க பல மாதம் பிடிக்கும்

உயர்ந்து வரும் கொவிட்-19 நோயாளி எண்­ணிக்­கை­யைச் சமா­ளிக்­கும் பொருட்டு, மருத்­து­வ­மனை சிகிச்­சைக்­குப் பிந்­திய வெளி­நோ­யாளி கவ­னிப்பு, விருப்­பத்­தின் பேரில் செய்­யும் அறுவை சிகிச்­சை­கள் எனப் பல­வும் தள்­ளி­வைக்­கப்­பட்­டுள்­ளன. தள்­ளி­வைக்­கப்­பட்ட இந்த சிகிச்­சை­களை மேற்­கொண்டு முடிக்க மருத்­து­வ­ம­னை­க­ளுக்கு பல மாதங்­கள் பிடிக்­க­லாம்.

சுகா­தார அமைச்­சின் மருத்­து­வச் சேவை இயக்­கு­நர் இணைப் பேரா­சி­ரி­யர் கென்­னத் மாக் சிங்­கப்­பூர் மருத்­துவ, உயிர்­ம­ருத்­து­வத் துறை மாநாட்­டில் நேற்று நடந்த கலந்­து­ரை­யா­டல் அமர்­வில் இதைத் தெரி­வித்­தார்.

பெருந்­தொற்­றுச் சூழ­லில், நாட்­பட்ட நோய் உள்ள பல­ரும் வழக்­க­மான மருத்­துவ கவ­னிப்­புக்­காக மருத்­து­வ­ம­னை­க­ளுக்­குச் செல்ல முடி­யாமல் உள்­ள­னர் என்றார் இணைப் பேரா­சி­ரி­யர் மாக்.

கடந்த ஆண்டு ஏப்­ரல் 7ஆம் தேதி­யி­லி­ருந்து, கிரு­மிப் பர­வ­லைக் கட்­டுப்­ப­டுத்த கடும் எதிர்ப்பு நட­வ­டிக்­கை­கள் எடுக்­கப்­பட்­ட­போ­தும் இந்­நிலை ஏற்­பட்­டது.

"மருத்­து­வ­ம­னைக்கு வர முடி­யாத பல­ருக்­கான கவ­னிப்­பை­யும் தொலை­தூரச் சுகா­தார தொழில்­நுட்­பங்­க­ளைப் பயன்­ப­டுத்­திச் செய்­துள்­ளோம். ஆனால் அது எல்­லா­ருக்­கும் பொருந்­தாது," என டாக்டர் மாக் கூறினார்.

வழக்­க­மான மருத்­து­வ­மனை கவ­னிப்பு பெற முடி­யா­மல் நோய் மோச­மாகி சிலர் வரு­வர். அவர்­கள் தங்­கள் மருந்­து­களை உட்­கொள்­ளா­மல் போயி­ருக்­க­லாம். அல்­லது மருந்­து­கள் தீர்ந்த பின்­னர் மீண்­டும் பெறா­மல் இருந்­தி­ருக்­க­லாம் என்று அவர் கூறி­னார்.

மருத்­து­வ­ம­னை­கள் தற்­போது கொவிட்-19 நோயா­ளி­க­ளைப் பரா­ம­ரிப்­ப­தில் கவ­னம் செலுத்தி வரு­கின்­றன. எனி­னும் நாள்­பட்ட நோயுள்­ள­வர்­க­ளைக் கவ­னிக்க தொடர்­புத் திட்­டங்­கள் உள்­ள­தாக அவர் சொன்­னார்.

"நோய் மோச­மா­கி­விட்­ட­வர் களின் எண்­ணிக்கை அதி­க­மாக இல்­லா­விட்­டா­லும், தள்­ளிப் போன­வற்­றைச் சரி­செய்ய பல மாதங்­கள் எடுக்­கும்." என்­றார் அவர்.

அவ­ச­ரத் தேவை­யில்லா அறுவை சிகிச்­சை­கள், ஒரே நாளில் செய்து வீடு திரும்­பும் அறுவை சிகிச்­சை­கள், பெரிய அறுவை சிகிச்­சை­கள் போன்­ற­வை­யும் தள்­ளிப் போயி­ருக்­கின்­றன.

இப்­போ­தைக்கு அவ­ச­ரத் தேவை­யுள்­ள­வர்­க­ளுக்­கும் புற்­று­நோ­யுள்­ள­வர்­க­ளுக்­கும் முன்­னு­ரிமை அளிக்­கப்­பட்­டி­ருப்­ப­தாக பேரா­சி­ரி­யர் மாக் தெரி­வித்­தார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!