நீண்டவரிசையில் வாடிக்கையாளர்கள்; தடுப்பூசி நிலையை சரிபார்க்க சிரமப்படும் கடைத்தொகுதிகள்

புதிய கொவிட்-19 விதி­மு­றை­க­ளின்­படி தடுப்­பூசி போட்­டுக்­கொண்­டோ­ருக்கு கடைத்­தொ­கு­தி­க­ளுக்­குச் செல்ல அனு­மதி வழங்­கப்­படும் என்­பதை நினை­வூட்­டும் வகை­யில் தீவெங்­கும் உள்ள கடைத்­தொ­கு­தி ­களில் அறி­விப்­புப் பதா­கை­கள் வைக்­கப்­பட்­டன.

சிராங்­கூ­னில் உள்ள நெக்ஸ் கடைத்­தொ­கு­தி­யில் உள்ள நுழை­வா­யில்­க­ளி­லும் இத்­த­கைய

பதா­கை­களை அக்­க­டைத்­தொ­குதி ஊழி­யர்­கள் வைத்­த­னர்.

இதற்­கி­டையே, வாடிக்­கை­

யா­ளர்­க­ளின் தடுப்­பூசி நிலையை சரி­பார்க்க பிடோக் மால் கடைத்­தொ­கு­தி­யின் நுழை­வா­யில்­களில் சிஸ்கோ பாது­காப்பு அதி­கா­ரி­கள் பணி­யில் அமர்த்­தப்­பட்­ட­னர்.

இம்­மா­தம் 19ஆம் தேதி­யி­

லி­ருந்து தடுப்­பூசி போட்­டுக்­கொள்ள முடி­யா­த­வர்­கள் கடைத்­தொ­கு­தி­

க­ளுக்­கும் தனி­யாக இயங்­கும் பேரங்­கா­டி­க­ளுக்­கும் செல்ல முடி­யாது. மருத்­துவ, குழந்­தைப் பரா­ம­ரிப்­புச் சேவை­கள் தேவைப்­ப­டு­வோர் இதற்கு விதி­வி­லக்கு.

12 வய­தும் அதற்­கும் குறை­வான சிறு­வர்­கள், கொவிட்-19

கிரு­மித்­தொற்­றி­லி­ருந்து குண­ம் அடைந்­துள்ள தடுப்­பூசி போட்­டுக்­கொள்­ளா­த­வர்­கள், பரி­சோ­த­னை­யில் கிரு­மித்­தொற்று இல்லை என உறுதி செய்­யப்­பட்­ட­வர்­கள் ஆகி­யோர் கடைத்­தொ­கு­தி­களில் அவர்­கள் பங்­கேற்­கும் நட­வ­டிக்கை, சேவைக்­கான நேரத்­துக்கு மட்­டும் அனும­திக்­கப்­ப­டு­வர்.

நேற்று தொடங்க இருந்த இந்த நடை­முறை இம்­மா­தம் 19ஆம் தேதி தொடங்­கு­கிறது.

புதிய நடை­மு­றை­யு­டன் பழ­கிக்­கொள்ள கடைத்­தொ­கு­தி­க­ளுக்கு ஒரு வார கால அவ­கா­சம் வழங்­கப்­பட்­டுள்­ளது.

புதிய விதி­முறை எவ்­வாறு நடை­மு­றைப்­ப­டுத்­தப்­ப­டு­கிறது என்­ப­தைப் பார்க்க ஸ்ட்­ரெய்ட்ஸ் டைம்ஸ் செய்தியா­ளர்­கள் நேற்று இரண்டு கடைத்­தொ­கு­தி­க­ளுக்­குச் சென்­ற­னர். கடைத்­தொ­கு­திக்கு வந்த வாடிக்­கை­யா­ளர்­கள் ஒவ்­வொ­ரு­

வ­ரின் தடுப்­பூசி நிலை­யைச் சரி­பார்க்க கடைத்­தொ­குதி ஊழி­யர்­கள் சிர­மப்­பட்­ட­தாக தெரி­விக்­கப்­பட்­டது.

பீஷா­னில் உள்ள ஜங்­ஷன் 8 கடைத்­தொ­கு­தி­யில் காலை 10 மணிக்­கெல்­லாம் வாடிக்­கை­யா­ளர்­கள் நீண்ட வரி­சை­யில் காத்­துக்­கொண்­டி­ருந்­த­னர்.

கடைத்­தொ­குதி ஊழி­யர்­கள் கேட்­டுக்­கொண்ட பிறகே அவர்­கள் டிரேஸ்­டு­கெ­தர் செய­லியை இயக்கி தங்­கள் தடுப்­பூசி நிலை­யைக்

காட்­டி­னர்.

12 வய­தும் அதற்­கும் குறை­வான சிறு­வர்­கள் கடைத்­தொ­கு­திக்­குள் செல்­வ­தற்கு முன்பு தங்­கள் மாண­வர் அட்­டை­யைக் காட்ட வேண்­டும் என்று கடைத்­தொ­கு­திக்கு வெளியே வைக்­கப்­பட்­டி­ருந்த பதா­கை­யில் குறிப்­பி­டப்­பட்­டி­ருந்­தது.

சீரு­டை­யில் இல்­லாத உணவு விநி­யோக ஓட்­டு­நர்­கள் உணவு விநி­யோக செயலி மூலம் ஆதா­ரம் காட்­டிய பிறகே கடைத்­தொ­கு­திக்­குள் செல்­ல­லாம்.

கடைத்­தொ­கு­தி­யில் பணி­பு­ரி­

ப­வர்­கள் தங்­கள் கடைத்­தொ­குதி நுழைவு அட்­டை­யைக் காட்ட வேண்­டும்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!