நவம்பர் 1 முதல் சிங்கப்பூர் வரலாம்

தடுப்பூசி போட்ட பணிப்பெண்களுக்கு முதலாளிகள் விண்ணப்பிக்கலாம்: துணை அமைச்சர்

தடுப்­பூசி போட்­டுக்­கொண்­டுள்ள புதிய பணிப்­பெண்­களை சிங்­கப்­பூ­ருக்­கு அழைப்பதற்கான விண்­ணப்­பங்­கள் இம்­மா­தம் 15ஆம் தேதி தொடங்­கி­யது.

அந்த வகை­யில் தடுப்­பூசி போட்­டுக்­கொண்ட பணிப்­பெண்­கள் பாது­காப்­பான பய­ணத் தளத்­தின் மூலம் நவம்­பர் 1ஆம் தேதி முதல் சிங்­கப்­பூர் வர­லாம்.

இது­பற்றி நேற்று தமது ஃபேஸ்புக் பக்­கத்­தில் தெரி­வித்த மனி­த­வள துணை அமைச்­சர் கான் சியோ ஹுவாங், "அர­சாங்­கம் நுழைவு அனு­மதி வரம்பை அதி­க­ரித்­தி­ருந்­தா­லும், பொதுச் சுகா­தாரக் கார­ணங்­க­ளுக்­கா­க­வும் குடும்­பங்­க­ளின் பரா­ம­ரிப்­புத் தேவை­யைப் பொறுத்­தும் அந்த எண்­ணிக்கை ஒரு கட்­டுக்­குள் வைத்­தி­ருக்­கப்­படும்.

"நுழைவு அனு­ம­திக்­குக் கிடைத்­தி­ருக்­கும் அதிக விண்­ணப்­பங்­களைக் கருத்­தில்கொண்டு பார்க்­கை­யில் சில முத­லா­ளி­க­ளுக்கு உட­ன­டி­யாக நுழைவு அனு­மதி கிடைக்­காது. அவர்­கள் அடுத்­தடுத்த வாரங்­களில் மீண்­டும் விண்­ணப்­பிக்­க­லாம்," என்­றும் கூறி­னார்.

உட­ன­டி­யாக இல்­லப் பணிப்­பெண்­கள் தேவைப்­ப­டு­வோர் சிங்கப்­பூர் வேலை­வாய்ப்பு முக­வை­கள் சங்­கம் நடத்­தும் வர்த்­த­கத் திட்­டம் மூலம் விண்­ணப்­பிக்­க­லாம் என்­றார் அவர்.

வெளி­நாட்டு இல்­லப் பணிப்­பெண்­கள் அதி­கம் தேவைப்­ப­டு­வ­தைக் கருத்­தில்கொண்டு இந்த முன்­னோடித் திட்­டம் நான்கு மாதங்­க­ளுக்கு முன் தொடங்­கப்­பட்­டது.

வெளி­நாட்­டுப் பங்­கா­ளி­க­ளு­டன் அணுக்­க­மா­கப் பணி­யாற்­றும் அச்­சங்­கம், பணிப்­பெண்­கள் அவர்­கள் நாட்­டி­லி­ருந்து சிங்­கப்­பூர் வரு­வதற்கு முன் கடு­மை­யான பாது­காப்பு நிர்­வாக நடை­மு­றை­க­ளைப் பின்பற்ற உட்படுத்தப்படுவார்கள்.

பிலிப்­பீன்ஸ், இந்­தோ­னீ­சியா ஆகிய நாடு­க­ளின் பணிப்­பெண்­கள் இத்­திட்­டத்­தின் மூலம் சிங்­கப்­பூ­ருக்­குள் இவ்­வாண்டு ஜூலை­யி­லி­ருந்து வந்­துள்­ள­னர்.

இத்­திட்­டத்­தின் மூலம் சிங்கப்­பூ­ருக்கு வரும் தடுப்­பூசி போட்­டுக்­கொள்­ளாத பணிப்­பெண்­கள், இங்கு வந்து சேர்ந்த இரண்டு மாதங்­க­ளுக்­குள் இரண்டு தடுப்­பூ­சி­க­ளை­யும் போட்­டுக்­கொள்ள வேண்­டும்.

"வெளி­நாட்டு இல்­லப் பணிப்­பெண்­க­ளுக்கு நுழைவு அனு­மதி அதி­க­ரித்­தி­ருப்­ப­தால், இன்­னும் அதி­க­மான குடும்­பங்­க­ளின் பார­ம­ரிப்­புத் தேவை­கள் பூர்த்தி செய்­யப்­படும் என்று நம்­பு­கி­றேன்.

"இந்­தக் கால­கட்­டத்­தில் நானும் எனது அமைச்­சின் சகாக்­களும் அதி­க­மான வெளி­நாட்டு இல்­லப் பணிப்­பெண்­க­ளின் நுழைவு அனு­ம­திக்கு ஏற்­பாடு செய்­வ­து­டன், சிங்கப்­பூ­ரில் கொவிட்-19 சூழ்­நிலை சிறப்­பாக நிர்­வ­கிக்­கப்­ப­டு­வ­தை­யும் உறுதிசெய்­வோம்," என்­றும் துணை அமைச்­சர் கான் விவ­ரித்­தார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!