சொகுசு வசதிகளுடன் மீண்டும் சிறகை விரிக்கும் எஸ்ஐஏயின் ‘போயிங் 737-8’ விமானங்கள்

இது­நாள்வரை நிறுத்தி வைக்­கப்­பட்­டி­ருந்த ஏஸ்­ஐ­ஏ­யின் 'போயிங்-737-8' ரக விமா­னங்­கள் மேம்­பட்ட வச­தி­க­ளு­டன் மீண்­டும் சிறகை விரித்துப் பறக்­க­வி­ருக்­கின்­றன.

பய­ணி­க­ளுக்கு பய­ணக் களைப்பு தெரி­யாத அள­வுக்கு புதிய அனு­ப­வத்­தைத் தரும் வகை­யில் விமா­னத்­தில் மாற்­றங்­கள் செய்­யப்­பட்­டுள்­ளன.

கால்­களை நீட்­டிக்­கொள்ள வச­தி­யாக வடி­வ­மைக்­கப்­பட்ட இருக்­கை­கள், பொழு­து­போக்­குத் திரை­கள், புதுப்­பிக்­கப்­பட்ட அறை­கள் ஆகி­யவை செய்­யப்­பட்ட மாற்­றங்­களில் சில.

வர்த்­த­கப் பிரி­வில் செல்லும் பய­ணி­கள் தங்­க­ளு­டைய இருக்­கை­களை படுக்­கை­யாக விரித்­துக் கொள்ளமுடி­யும். இத­னால் சாய்­வான இருக்­கை­யில் சாய்ந்­து­கி­டக்க வேண்­டிய அவதி இருக்­காது.

முன்பு போயிங்-737-8 விமா­னங்­கள் சில்க்­ஏர் நிறு­வ­னத்­தின் கீழ் செயல்­பட்­டன.

இவ்­வாண்­டின் முற்­ப­கு­தி­யில் எஸ்­ஐ­ஏ­வு­டன் சில்க்­ஏர் நிறு­வ­னம் ஒருங்­கி­ணைப்­ப­டு­வ­தாக அறி­விக்­கப்­பட்­டது.

இந்த நிலை­யில் வரும் வாரங்­களில் குறு­கிய, நீண்­ட­தூர விமா­னச் சேவை­கள் படிப்­ப­டி­யா­கத் தொடங்­கப்­படும் என்று எஸ்­ஐஏ நேற்று அறி­வித்­தது.

புருணை, கம்­போ­டியா, இந்­தோ­னீ­சியா, மலே­சியா, மாலத்­தீவு, நேப்­பா­ளம், தாய்­லாந்து உள்­ளிட்ட நாடு­க­ளுக்கு விமா­னச் சேவை­கள் தொடங்­கப்­படும் என்று அது கூறி­யது.

அேத சம­யத்­தில் அந்­தந்த நாடு­க­ளின் விதி­மு­றை­களுக்கு ஏற்ப விமா­னச் சேவை­கள் இருக்­கும் என்று எஸ்­ஐஏ குறிப்­பிட்­டது.

'போயிங்-737 மேக்ஸ் 8' என்­றும் அழைக்­கப்­படும் 737-8 ரக விமா­னங்­களில் புதிய மேம்­பட்ட வச­தி ­க­ளுக்கு 230 மில்­லி­யன் வெள்­ளியை எஸ்­ஐஏ முத­லீடு செய்­துள்­ளது.

இந்த புதுப்­பிப்புத் திட்­டம் மூன்று ஆண்­டு­க­ளுக்கு முன்பு தொடங்­கி­யது. ஆனால் கொவிட்-19 கார­ண­மாக விமா­ன சேவைகள் நிறுத்­தி­வைக்­கப்­பட்­ட­தால் புதுப்­பிப்புப் பணி­கள் தாம­த­மா­கின.

செய்­தி­யா­ளர்­க­ளி­டம் பேசிய எஸ்­ஐ­ஏ­யின் வர்த்­த­கப் பிரிவு நிர்­வாக உதவி தலை­வர் லீ லிக் ஹிசின், முன்­னைய சில்க்­ஏர் விமா­னங்­கள் பய­ணி­களுக்கு மேம்­பட்ட அனு­ப­வத்­தைத் தரும் அள­வுக்கு புதுப்­பிக்­கப்பட்­டுள்­ளன என்­றார்.

"உலக அள­வில் சிறந்த சேவை­யா­க­வும் வட்­டா­ரத்­தில் இதற்கு ஈடான சேவை­கள் இல்­லாத வகை­யிலும் சேவை வழங்­கப்­படும்," என்று அவர் உறு­தி­ய­ளித்­தார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!