சிறு வயதிலேயே பெண்கள் அறிவியல் கற்க வேண்டும் அதிக பெண்கள் அறிவியல், தொழில்நுட்ப வாழ்க்கைத்தொழிலை மேற்கொள்ள ஆலோசனை

அறி­வி­யல், தொழில்­நுட்­பத்தை பெண்­கள் சிறு­வ­ய­தி­லேயே கற்க வேண்­டும் என்று நேற்று நடந்த குழு விவாதிப்பில் ஆலோ­சனை கூறப்­பட்­டது.

பிற்­கா­லத்­தில் பெண்­கள் அறி­வி­யல், தொழில்­நுட்ப வாழ்க்­கைத்­தொ­ழி­லில் ஈடு­பட அது அவ­சி­யம் என்று சிங்­கப்­பூர் தேசிய பல்­க­லைக்­க­ழ­கத்­தில் நடந்த அந்தக் குழு விவா­திப்பில் பேசி­ய­வர்­கள் வலி­யு­றுத்­தி­னர்.

தொழில்­நுட்­பத் துறை­யில் அதிக பெண்­கள் ஈடு­பாடு என்­பது பற்றி அதில் விவா­திக்­கப்­பட்­டது. அமெ­ரிக்­க வர்த்­தக அமைச்­சும் சிங்­கப்­பூர் தொடர்பு, தக­வல் அமைச்­சும் இணைந்து அதற்கு ஏற்­பாடு செய்­தன.

சிங்­கப்­பூ­ருக்கு இரண்டு நாள் வருகை அளித்த அமெ­ரிக்க வர்த்­தக அமைச்­சர் ஜினா ரைமொண்டோ அதில் உரை­யாற்­றி­னார். அமெ­ரிக்­கா­வின் ரோடி தீவின் ஆளு­ந­ராக தான் இருந்தபோது, அர­சாங்­கப் பள்ளி­களில் கணினி அறி­வி­யல் பாட வகுப்பு அறி­மு­கமானதை அவர் நினைவு­கூர்ந்­தார்.

பாலர்­பள்­ளி­களில் ஐந்து வயதுப் பிள்­ளை­கள் கணினி அறி­வி­யலைக் கற்­கத் தொடங்­கி­ய­தா­க­வும் அத­னால் ஏற்­பட்ட பலன்­கள் வியக்­கத்­தக்­க­வை­யாக இருந்­த­தா­க­வும் திரு­வாட்டி ரைமொண்டோ எடுத்துக்கூறினார்.

"சிறு­மி­கள் கணினி அறி­வியலுக்கு அறி­மு­க­மா­னால் இயற்­கை­யா­கவே அதைக் கற்க அவர்­களி­டம் ஆர்­வம் ஏற்­பட்­டு­வி­டும். பின்­னா­ளில் அவர்­கள் தொழில்­நுட்­பத் துறை­க­ளைத் தேர்ந்­தெ­டுத்­துக் கொள்­வார்­கள்," என்று அவர் குறிப்­பிட்­டார்.

குழு விவா­திப்­பில் கலந்துகொண்ட தொடர்பு, தக­வல் அமைச்­சர் ஜோச­ஃபின் டியோ, சிறு­வயதிலேயே தொழில்­நுட்ப ஆற்­றல்­களைக் கற்­பதற்­கான வாய்ப்­பு­கள் அதி­கரிக்கப் படவேண்­டி­ய­தன் முக்­கி­யத்­து­வத்தை எடுத்­து­ரைத்­தார்.

"சிறு­வ­ய­தி­லேயே இதைத் தொடங்க வேண்டி இருக்­கிறது. எடுத்­துக்­காட்­டாக நம் பள்­ளி­களில் 10 வய­திற்கு மேற்­பட்ட எந்­த­வொரு பிள்­ளை­யும் வேடிக்­கை­யாக கணினி நிர­லி­டு­தலைக் கற்­கும் வாய்ப்­பைப் பெற்றுள்ளனர்," என்றாரவர்.

தொடக்­கப்­பள்ளி மேல்­நிலை மாண­வர்­கள் அனை­வ­ருக்­கும் கணினி நிர­லி­டு­தல் செரி­வாக்க வகுப்­பு­கள் 2020 முதல் கட்­டா­ய­மாக்­கப்­பட்டு இருப்­ப­தை­யும் திரு­வாட்டி டியோ குறிப்­பிட்­டார்.

உல­க­ள­வில் பார்க்­கை­யில் தொழில்­நுட்ப ஊழி­யர் அணி­யில் பெண்­க­ளின் எண்­ணிக்கை சரா­சரி­யாக 28% ஆக இருக்­கிறது. இது சிங்­கப்­பூ­ரில் 41% ஆக இருக்­கிறது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!