பழைய போலிஸ் பயிற்சிக் கழகத்தில் உள்ள ஆறு கட்டடங்கள் பாதுகாக்கப்படும்

பழைய போலிஸ் பயிற்­சிக் கழ­கத்­தில் உள்ள ஆறு கட்­ட­டங்­க­ளைப் பாது­காக்க வேண்­டும் என்று பரிந்­துரை செய்­யப்­படும். எதிர்­கா­லத்­தில் மவுண்ட் பிளசண்ட் வட்­டா­ரத்­தில் மேம்­பாட்­டுப் பணி­கள் நடத்­தப்­பட்­டா­லும் அந்த ஆறு கட்­ட­டங்­க­ளுக்கும் எவ்­விதப் பாதிப்­பும் ஏற்­ப­டா­மல் புதிய திட்­டத்­து­டன் அவை ஒருங்­கி­ணைக்­கப்­பட வேண்­டும் என்று பரிந்­து­ரைக்­கப்­படும்.

பழைய போலிஸ் பயிற்­சிக் கழ­கம் அமைந்­துள்ள இடத்­தில் முதல்­மு­றை­யாக நடத்­தப்­பட்ட மர­பு­டை­மைத் தாக்­கம் தொடர்­பான ஆய்­வுக்­குப் பிறகு கட்­ட­டங்­க­ளைப் பாது­காக்க முடிவு எடுக்­கப்­பட்­டுள்­ள­தாக தேசிய வளர்ச்சி அமைச்­சர் டெஸ்­மண்ட் லீ நேற்று தெரி­வித்­தார்.

பாது­காக்­கப்­பட இருக்­கும் கட்­ட­டங்­களில் நான்கு கட்­ட­டங்­கள் அந்த வட்­டா­ரத்­தில் அமைக்­கப்­பட இருக்­கும் வீட­மைப்பு வளர்ச்­சிக் கழ­கக் குடி­யி­ருப்­புப் பேட்­டைக்­குள் இருக்­கும். மற்ற இரண்டு கட்­ட­டங்­கள் புதிய குடி­யி­ருப்­புப் பேட்­டைக்­குச் சற்று வெளி­யில் இருக்­கும்.

பழைய போலிஸ் பயிற்­சிக் கழ­கம் 1929ஆம் ஆண்­டில் நிறு­வப்­பட்­டது. 2005ஆம் ஆண்டு வரை அது இயங்­கி­யது. அதன் பிறகு சுவா சூ காங் வட்­டா­ரத்­தில் உள்ள உள்­துறை அமைச்­சுக் குழு பயிற்­சிக் கழ­கக் கட்­ட­டத்­துக்கு போலிஸ் பயிற்­சிக் கழ­கம் இடம் மாறி­யது.

மவுண்ட் பிளசண்ட்­டில் கட்­டப்­பட இருக்­கும் புதிய குடி­யி­ருப்­புப் பேட்­டைக்­குள் இருக்­கும் நான்கு கட்­ட­டங்­கள் 1926ஆம் ஆண்­டுக்­கும் 1930ஆம் ஆண்­டுக்­கும் இடைப்­பட்ட கால­கட்­டத்­தில் கட்­டப்­பட்­டவை. அவற்­றின் பழைமை பாது­காக்­கப்­பட்டு புதிய பயன்­பாட்டுக்கு விடப்படும் என்று தெரி­விக்­கப்­

பட்­டுள்­ளது.

"சிங்­கப்­பூ­ரின் போலிஸ் அதி­கா­ரி­க­ளுக்கு அளிக்­கப்­படும் பயிற்­சி­யில் ஏற்­பட்­டுள்ள மாற்­றத்தை இது பிர­தி­ப­லிக்­கிறது. முன்பு பயிற்­சிக் கழ­கத்­தில் மரத்­தால் செய்­யப்­பட்ட கட்­ட­டங்­கள் இருந்­தன. தற்­போது நமது போலிஸ் படை­யில் தரத்தை மேலும் பல மடங்கு உயர்த்த புதிய பயிற்­சிக் கழ­கம் இயங்கி வரு­கிறது," என்­றார் அமைச்­சர் லீ.

"பாது­காக்­கப்­படும் பழைய கட்­ட­டங்­கள் சிங்­கப்­பூர் மற்­றும் மலே­சிய போலிஸ் படை­க­ளி­டையே உள்ள ஒற்­று­மை­யைக் குறிக்­கும் சின்­ன­மாக உள்­ளன.

"அது­மட்­டு­மல்­லாது அவை பாரம்­ப­ரிய கட்­டட அமைப்­பு­க­ளைக் கொண்­டுள்­ளன. அவை வர­லாற்றுச் சிறப்பு மிக்க கட்­ட­டங்­கள். எனவே, அவை பாது­காக்­கப்­ப­டு­ம்," என்று வீட­மைப்பு வளர்ச்­சிக் கழ­கம், நகர மறு­சீ­ர­மைப்பு ஆணை­யம், சிங்­கப்­பூர் நில ஆணை­யம் ஆகி­யவை தெரி­வித்­தன.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!