நினைவு இழப்பு குறைபாடு உள்ளோருக்கு உதவி; 2025ல் வண்ணமய இயோ சூ காங்

இயோ சூ காங், 2025ஆம் ஆண்டு வாக்­கில் வண்­ண­ம­ய­மான குடி­யிருப்புப் பேட்­டை­யா­கத் திக­ழும். புளோக்­கு­களில் பெரிய பெரிய எழுத்­து­களில் கண்­க­வ­ரும் வண்­ணங்­களில் எழுத்­து­கள் பொறிக்­கப்­பட்டு இருக்­கும்.

நினை­வாற்­றல் இழப்பு குறை­பாடு உள்­ள­வர்­கள் எளி­தாக தங்கள் வீடு­களை அடை­யா­ளம் கண்டு செல்ல முடி­யும்.

இத்­த­கைய குறை­பாடு உள்­ள­வர்­க­ளுக்கு உத­வக்­கூ­டிய பல்­வேறு அம்­சங்­க­ளை­யும் உள்­ள­டக்கி சிங்­கப்­பூ­ரில் அமை­யும் முழு­மை­யான முத­லா­வது நக­ராக இயோ சூ காங் திக­ழும். இயோ சூ காங் சமூக மன்­றத்­தில் நேற்று இயோ சூ காங் நாள் கொண்­டாட்­டங்­கள் நடந்­தன.

அப்­போது ஒருங்­கி­ணைந்த பரா­ம­ரிப்பு முகவை என்ற அமைப்­பும் அந்­தத் தொகு­தி­யும் இந்த அறி­விப்பை விடுத்­தன. தொகுதியில் உள்­கட்­ட­மைப்பு வச­தி­கள் மேம்படும். வழுக்­காத தரைக்­கற்­கள், கூரை­யு­டன் கூடிய நடை­பா­தை­கள், கைப்­பிடிக் கம்­பி­கள் உள்­ளிட்ட பல­வும் நட­மாட்­டப் பிரச்­சினை உள்ள மக்­களுக்குப் பெரிதும் உத­வும்.

இயோ சூ காங்­கில் முதி­யோர் அதி­கம் வசிக்­கி­றார்­கள். நினை­வாற்­றல் இழப்பு பாதிப்பு உள்­ள­வர்­களும் அங்கு கணி­ச­மாக இருக்­கி­றார்­கள். அங்­குள்ள வீவக குடி­யி­ருப்­புப் பேட்டை­க­ளி­லும் லெண்­டோ­ரில் உள்ள தனி­யார் குடி­யிருப்புப் பேட்டையி­லும் திட்­டம் மேற்­கொள்­ளப்­படும்.

இயோ சூ காங் சமூக மன்­றம் மேம்­பட இருக்­கிறது. மேம்­பாட்­டுப் பணி­கள் அடுத்த ஆண்டு ஜன­வ­ரி­யில் தொடங்கி 2023ல் முடி­வ­டை­யும் என்று எதிர்­பார்க்­கப்­ப­டு­கிறது.

புதிய சமூக மன்ற வடி­வ­மைப்­பி­லும் பல்­வேறு அம்­சங்­க­ளி­லும் மின்­னி­லக்க தொழில்­நுட்­பம் ஒருங்­கி­ணைக்­கப்­படும்.

பிர­த­மர் லீ சியன் லூங் சிறப்பு விருந்­தி­ன­ரா­கக் கலந்து­கொண்­டார். புதிய மேம்­பா­டு­கள் கார­ண­மாக குடி­யி­ருப்­பா­ளர்­க­ளுக்கு வச­தி­கள் அதி­க­மா­கும். சிறந்த வசிப்­பிட சூழ­லும் மேலும் எல்­லா­ரை­யும் உள்­ள­டக்­கும் சமூ­க­மும் உரு­வா­கும் என்றும் ஃபேஸ்புக்கில் பிர­த­மர் லீ தெரி­வித்தார்.

கொவிட்-19 கார­ண­மாக பாதிக்­கப்­பட்­ட­வர்­க­ளுக்கு உத­விய இயோ சூ காங் குடி­யி­ருப்­பா­ளர்­க­ளை­யும் அடித்­தள தொண்­டூ­ழி­யர்­க­ளை­யும் சிறப்­பிக்­கும் வகையில் நேற்றைய நிகழ்ச்சியில் ஒய்­சிகே40 (YCK40) என்ற புத்­த­கம் வெளி­யி­டப்­பட்­டது.

250க்கும் மேற்­பட்ட குடி­மக்­கள் உடற்­ப­யிற்சியில் ஈடு­பட்­ட­னர்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!